People I know

Thursday, October 27, 2005

Sex on the Beach ம் அசட்டு அம்பியும்

"குடி"மகன்கள் மீது எனக்கு சிறுவயதிலிருந்தே ஒரு அசூயை தோன்றிவிட்டதிற்கு காரணம் இல்லாமல் இல்லை. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் அரசாங்கம் "மலிவு விலை மது" கடைகளை திறந்த காலத்தில் மதுரையில் நான் வசித்த பேச்சியம்மன் படித்துரையில் ஒரு கடை திறக்கப் பட்டது. இரண்டு பெண்கள் மேல்நிலை பள்ளிகள், ஒரு சில ஆரம்ப பள்ளி கூடங்கள்,ஒரு ஆண்கள் மேநிலை பள்ளி, மிகப் பெரிய அனுப்பானடி சாக்கடை இருக்கும் பகுதியில் பச்சை கலர் பல்புகள் மாட்டிய சாராய கடை சத்தமாக இயங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது தெருக்காளில் குடிமகன்கள் போதையில் வேட்டி இல்லாமல் தெருவில் அலங்கோலமாய் கிடந்த காட்சிகள் என் மனதில் குடிபவர்கள் மீது மாபெரும் வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் ஒரு சில நகைச்சுவை காட்சிகளும் கண்டு களித்ததுண்டு. உதாரணத்திற்கு ஒருவர் தெருவில் இருந்த கோழியை பார்த்து தனது வேட்டியை கழட்டி அகல விரித்துக் கொண்டு "டேய், சரியான கோலிடா நீ" என்று பேசிக்கொண்டிருந்தது, ஒருவர் கடும் போதையில் "repair" ஆகி நின்று கொண்டிருந்த "Road Roller" ஐ தள்ள மற்றொரு ஆள் அவருக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு அவரை தள்ள இரண்டு பேரும் சக்கரத்தில் மோதி தரையில் கிடந்தது, அவ்வப்பொழுது சாக்கடையில் விழுந்துவிடும் குடிகாரர்கள் வெளியில் வராமாட்டேன் என்று அலும்பு பண்ணுவதும் பக்கத்தில் B1 police station ல் இருந்து police வந்து மிரட்டவும் "சுருதி" இறங்கி ஓடுவதுமாகிய காட்சிகளை நினைத்து இப்பொழுதும் சிரிப்பதுண்டு.

நான் படித்த பள்ளியில் 9வது 10வது படிக்கும் சில மாணவர்களே கூட குடிப்பழக்கம் கொண்டிருந்தனர். நண்பன் ஒருவன் சொன்ன வசனம் இது "இந்த வாத்தியான் என்ன பரிச்ச திருத்தறான். நான் போதைல மகேந்திரன பாத்து copy அடிச்சேன். என்ன எழுதறேன்னு எனக்கே தெரியாது. ஆனா markஅ பாத்தா நான் 75 அவென் 60. இவன்லாம் ஒரு வாத்தியான்!". இந்நிலையில் நெருங்கிய உற்வினர் ஒருவர் இளவயதில் ஏதோ ஒரு கலப்பட சரக்கிற்கு பலியான போது குடிபழக்கத்தின் ஆபத்தை உணர்ந்தேன். மிக ஒழுக்கமாய் உயர் பதவியில் இருந்த ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்பழக்கதிற்கு அடிமை ஆனதை காட்டி என் அம்மா சிறு வயது முதலே மன கட்டுபாட்டுடன் வாழ வேண்டியதின் அவசியத்தை எனக்கு உணர்த்தி வளர்த்தார். ஆனாலும், கல்லூரியில் ஒரு முறை நான்கு நண்பர்கள் குடித்துவிட்டு வாந்தி எடுத்து அந்த வாந்தி மேலேயே படுத்து தூங்கிய கதையை கேட்ட பொழுது குடிப்பவர்கள் மனித பிறவிகளே அல்லர் என்னும் எண்ணம் திண்ணமாக தோன்றி விட்டது.

பிறகு வேலை நிமித்தம் நான் மும்மையில் இருந்தபொழுது, ஒரு party யில் ஆண்களும் பெண்களும் குடித்து கும்மாளமடித்துக் கொண்டிருந்ததை நம்ப முடியாமல் ஜீரணித்துக் கொண்டேன். அதே நேரம், என் roommate ஒருவன் என்னுடைய பழக்க வழக்கங்களால் கவரப்பட்டு குடிப்பதை விட போவதாக சொன்னபோது "மச்சி நீ நிறுத்தறதுன்னா உனக்காக நிறுத்திக்கோ! எனக்காக
வேணாம். அப்புறம் மறுபடியும் குடிச்சியானா நான் வருத்தப்டுவேன், நீ ஜாலியா இருப்ப" என்றேன். பின்னர் அமெரிக்கா வந்த பொழுது New Year வந்தது என்று சொல்லி தமிழ் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து குடித்து கும்மாளம் போட்டனர். எனக்கு தெரிந்த வரை அந்த பெண்கள் சென்னை "பிராமணாள்" ஆக இருந்ததால், நமது நாட்டின் கலாசார சீரழிவிற்கு "நம்மவாளின்" பங்களிப்பு மகத்தானது என்ற என் எண்ணம் மேலும் உறுதியானது. பாரதியின் "எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு" என்ற வரி ஞாபகம் வந்தது. இந்த மாதிரி இடத்தில் சில "நம்மவாளின்" போலித்தனம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. Sex on the Beach அடித்துக் கொண்டே ஒரு பெண் சொன்னது "நாங்க எல்லாம் ஆச்சாரமானவா"!. ஆனால் ஒரு அளவிற்கு நமது கலாசாரத்தை விட்டுக் குடுகாமல் இருக்கும் பெரும்பான்மையான ஆண்களும் பெண்களும் US ல் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை தான்.


ஆனால் என்னுடைய அனுபவத்தில் சமீப காலங்களில் இப்பழக்கம் இளைஞர்களிடம் மிகவும் பெருகி விட்டதை பார்க்கிறேன். வார இறுதி முழுவதும் குடிக்கிறார்கள். யாருக்காவது Birth day, marriage day, death day என்று எதேனும் சாக்கு வைத்து குடித்த வண்ணம் இருக்கிறார்கள். என்னையும் குடிப்பதற்கு சிபாரிசு செய்யும் பொழுது நண்பன் ஒருவன் சொன்னது "மச்சி! நான் குடிக்காம இருந்து இருக்கேன், குடிச்சும் இருந்து இருக்கேன். நான் சொல்றேன் குடிச்சா தான் ஜாலி. அதுனால குடி". அவனுக்கு பாரதியின் "சிங்கம் நாய் தர கொள்ளுமோ நல்லரசாட்சியை" என்ற "மாயையை பழித்தல்" கவிதை வரியை சொன்னேன்.

நான் குடிபழக்கம் கொண்டிராவிட்டாலும், எப்பொழுதும் எதேனும் ஒரு வகையில் "குடி" என்னை பாதித்த வண்ணமே இருந்துள்ளது. நண்பர்களுடன் company காக மதுக்கூடம் செல்வதுண்டு. ஆனாலும் மேற்கூறிய போலித்தனங்கள் எனக்கு பிடிபதில்லை. பெண்கள் குடிப்பதை பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி எனக்கு நீங்கியவாறு தெரியவில்லை.இனிமேல் ஆண்களும் பெண்களும் குடித்துவிட்டு கும்மாளம் போடும் இடங்களுக்கு போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். "ஒருக்காலும் புலன்களுக்கு அடிமைப் பட்டு வாழ்வதால் மேலான நிலையை அடைந்து விட முடியாது, எல்லோரும் திருந்த வேண்டும்" என்று நினைத்து இப்படி சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் Bar லும், Dance floor லும் வெட்டிக்கு நின்றுக் கொண்டிருப்பது அலுத்து விட்டது. "எள்ளு தான் எண்ணைக்கு காயுதுன்னா, அதோட எலி புழுக்கையும் ஏன் காயுது" என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழ்ந்தது போதும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

Friday, October 14, 2005

சம்பிரதாயம் - குட்டி கதை!

ஆசிரமம் ஒன்றில் பூனை ஒன்று இருந்தது. வகுப்பு நடக்கும் வேளையில் அது குறுக்கும் நெடுக்குமாக ஓடி மாணவர்களை "disturb" செய்துக் கொண்டிருந்தது. அதனால் ஆசிரியர் பாடம் தொடங்குமுன் பூனையை அங்கிருந்த தூணில் கட்டி போடுமாறு கூறினார். மணவர்களும் அதன்படியே தினமும் செய்தனர். சில நாட்களில் அந்த ஆசிரியர் அவருடைய மாணவர்களில் ஒருவரை அசிரியர் ஆக்கிவிட்டு மரணமடைந்தார். அடுத்து வந்த ஆசிரியர் காலத்திலும் பூனையை தூணில் கட்டும் வழக்கம் தொடர்ந்தது. ஆனால் அந்த ஆசிரியர் சிறிது காலத்திலேயே நோய்வாய்பட வேறொரு மாணவனை ஆசிரியனாக்கி இறந்து விட்டார் . அவரும் பூனையை தூணில் கட்டும் வழக்கத்தை தொடர்ந்தார். ஒரு நாள் அந்த பூனை இறந்தது. அப்பொழுது அந்த ஆசிரியர் சொன்னார் "வகுப்பு தொடங்கு முன் பூனையை கட்டுவது நமது சம்பிரதாயம். யாரேனும் நாளைக்கு ஊருக்குள் சென்று ஒரு பூனையை வாங்கி வாருங்கள். ஆதுவரை என்னால் பாடம் நடத்த முடியாது நடத்த முடியாது!".

Wednesday, October 12, 2005

மிகவும் பிடித்த கதை!

திரு.சுஜாதா அவர்களின் மாஞ்சு சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எத்தனை முறை திரும்ப திரும்ப படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. இவ்வளவு அற்புதமான கதையை சுஜாதா அவர்களே நினைத்தாலும் மறுபடி எழுத முடியுமா என்று நினைத்து வியப்பதுண்டு.

‘‘தனியா இருக்கப் போறதில்லை. மேல சித்திரை வீதில ஆராமுது ஆத்தில மாடியும் கீழுமா நிறைய இடம் இருக்கு’’ என்னும் வரி தரும் வலி மற்றும் அதிர்ச்சி எழுத்தில் எழுதவொண்ணாதது. நீங்களும் படித்து பாருங்களேன்.

சுஜாதா அவர்களின் கதைகளை Web ல் வைத்திருக்கும் தேசிகனுக்கு மிக்க நன்றி!

Tuesday, October 11, 2005

Power of Faith!

“Padmapada Acharya” was one of the four disciples of Sri Adi Shankara. An incident in his life demonstrates the power of faith. I thought I can share this little story with you all.

Once, when he was a young boy, he was called “Sanandana” and was instructed a “Manthra” on lord Narasimha by a sage and was told on recitation of that “Manthra” he can get the darshan of Lord Narasimha Swami. On the desire of seeing the lord, he entered into a cave in a forest and started chanting the “Manthra” repeatedly.

There came a hunter who felt pity for the young boy and advised him to go back home as it was dangerous to be alone in the forest. He asked the boy “what are you searching for in this forest?” The boy replied “I am searching for an animal”. The hunter replied “Which animal you want, I can catch any animal as I have been living in this forest for about 40 years.” The boy replied “No, you cannot catch the animal I am looking for. It has human body and lion head and it is very ferocious to catch and it is called Narahari”. Though the hunter was perplexed by the description of the animal, he believed in that young boys words and promised him “I have not seen such animal ever. But you being a Brahmin I believe you will speak only truth. So I will catch that animal by sunset, else I will die”. Sanandana was sure that hunter could not be successful in his effort.

The hunter went searching and his mind was totally obsessed about that “Human body and lion face” and had no other thought. He was shouting “Narahari, Narahari” all the time. The animal was elusive to him and it was about to sunset. To keep up the promise he decided to hang himself up with a rope. He was about to pull the noose, there appeared that “Animal”. His joy knew no bounds. He tied the “Animal” with the same noose and rushed to “Sanandana”.

He shouted from outside the cave “Oh Brahmin! Come and see the animal you are looking for. I have trapped it”. The boy came out and saw just the rope not the “Animal”. He told the same to the hunter. Hunter was perplexed and whacked the “Animal”, it set out a huge roar. Sanadana was awestruck and hugged the hunter and fell on his feet.

Then there came an “Ashariri”, “Oh Sanandana, when you search for me ceaselessly with a single pointed focus of reaching me, with all other thoughts removed from your mind, like this hunter did, you can get my darshan. Time is not yet ripe for you to reach me . However your devotion has enabled you to hear my voice. I promise you that I will come to your rescue whenever you call me. Now go back to your town and wait for your Guru. He will show you the path”. Sanandana prostrated in the direction of voice and followed the advise.

In later years, after he became padmapada acahraya and was serving his guru “Adi Shankara”, Once a “Kapaalika” tried to kill “Adi shankara” when he was in “Tapas” and padmapada on knowing this prayed to Lord Narasimha and the lord entered into padmapada and killed that “Kapaalika”. This was one of the remarkable incidents in the glorious life of Adi Shankara.

Tamil short story site

My dear hundreds of readers of my blog, please check out Jayanthi Shankar's Blog. I found her short stories very interesting. Hope all of you will enjoy.

Thursday, October 06, 2005

மஹாபரதம் பேசுகிறது!

"யுதிஷ்டிரா! இந்த கிருஷ்ணன் இடையர் குலத்தை சேர்ந்தவன். இங்கே இத்தனை ஷத்திரியர்கள் இருக்க, அவனுக்கு முதல் மரியாதை செய்வதின் மூலம் எங்கள் எல்லோரையும் அவமரியாதை செய்துவிட்டாய். மன்னர்களே! நீங்களும் என்னை போலவே நினைத்தால் பாண்டவர்கள், கிருஷ்ணன்
மற்றும் பீஷ்மரை எதிர்த்து போருக்கு தயாரகுங்கள்." என்று சிசுபாலன் அறைகூவல் விடுத்தான். சிசுபாலன் சொன்னதை எற்று பல மன்னர்கள்
அவன் பின் நின்றனர்.

பீஷ்மர் அவனை கண்டித்து கிருஷ்ணனின் பெருமைகளை எடுத்துரைத்தார். அதற்கு சிசுபாலன் "என்ன பெரிய மகிமை? பாம்பை கொன்றான்,
பறவையை கொன்றான். இதெல்லாம் பெருமையா? தனக்கு உணவளித்த மாமனை கொன்றான், இது கயமை அல்லவா?. இவனுக்கு
முன்பாக நான் ருக்மணியை மனத்தால் வரித்தேன். அதையும் அவன் இந்த சபையில் வெட்கமில்லாமல் சொல்கிறான். என்னுடன் போரிட்டு
என்னை மாய்க்க முயலாமல் ஒரு பேடியை போல ஓடி ஒளிந்தவன் தானே இவன்?" வசைமாரி நின்ற்பாடில்லை. க்ருஷ்ணர் பொறுமையுடன்
கேட்பதை பார்த்து பீஷ்மர் முதலானோர் ஆச்சர்யபடுகின்றனர். அவர்களிடம் தான் சிசுபாலனின் தாய்க்கு செய்த கொடுத்த சத்தியத்தின் படி 100
வசவுகளை பொறுப்பதாக க்ருஷ்ணர் கூறுகிறார். சிசுபாலன் 100 வசவுகளை முடித்ததும் க்ருஷ்ணர் அவனுடன் போரிடுகிறார். சிசுபாலன் க்ருஷ்ணனை தாக்கி கீழே விழவைக்கிறான் மேலும் காயமுண்டக்குகிறான். அதை பார்த்து சபையே அதிர்ச்சி அடைகிறது. க்ருஷ்ணன் "இந்த சிசுபாலன் என்னுடைய அம்சமே. முன்னொரு சமையம் இவனே ஹிரண்ய கசிபுவாக பிறந்து என்னால் கொல்லப்பட்டவன். இவனை இப்பொழுதே கொல்கிறேன்" என்று சக்ராயுதத்தை அவன் மீது செலுத்தினார். அவன் தலை அறுந்தது. அவனிடமிருந்து ஒரு ஒளி கிளம்பி க்ருஷ்ணரை சுற்றி வந்து அவருள் கலந்தது."

இந்த பத்தி என் நினைவில் இருந்து எழுதியது. இது மஹாபாரதத்தில் அச்வமேத யாகம் நடத்தி முதல் மரியாதையை கிருஷணருக்கு அளிக்க தர்மபுத்திரரின் சபை முடிவு செய்த பொழுது, சிசுபாலன் சினந்து பேசியதும், க்ருஷ்ணர் அவனை வதம் செய்ததும் பற்றியது.

க்ருஷண த்வைபாயன வியாசர் ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியர் போல மகாபரதத்தை பதிவு செய்து இருக்கிறார். தனது சொந்த கருத்தை
கலக்காமல், எல்லா பாத்திரங்களின் நிறை குறைகளை நேர்மையுடன் சொல்கிறார். திரு.சோ அவர்கள் எழுதிய மஹாபாரதம் பேசுகிறது
என்னும் நூல் வியாசரின் 96,000 சுலோகங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டள்ளது. வேறு எந்த சாண்றுகளையும் காட்டாமல் வெறும் "logical arguments" மட்டுமே வைத்து மஹாபாரதம் ஒரு வரலாற்று நூலே என்று நிறுவி இருக்கிறார்.

ஆனாலும், மஹாபாரததில் மானிடர் கற்றுக் கொள்ள ஏரளமான விசயங்கள் இருக்கின்றன. மஹாபாரதத்தின் மைய கரு "தர்மத்தின் பாதை சூட்சும்மானது. அதை அறிவது கடினம்" என்பதை சுற்றி சுற்றி வருகிறது. தர்மத்தின் பாதையை பல்வேறு உதாரணங்களின் மூலம் விளக்க முயற்சிக்கிறது. விதுரர் தர்மத்தின் பிம்பமாக விளங்குகிறார். மற்ற எல்லோரும் ஒரு இடதிலாவது தர்மத்தின் பாதையிலிருந்து சறுக்கினாலும் விதுரர் எப்பொழுதும் அறவழி நிற்கிறார். தர்ம புத்திரன் பொய் சொல்லுமிடங்கள் மறைக்கப்படுவதில்லை, அதே போல துரியன், கர்ணன் போன்றோரின் நற்குணங்களும் மறைக்கப்படுவதில்லை. இந்நூலின் நேர்மை என்னை மிகவும் கவர்கிறது.

மிக முக்கியமாக வர்ணாசிரம தர்மங்கள் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் வருணக்க்கலப்பு நடக்கவே செய்யும், ஆகையால் இனி ஒருவனின் வருணம் பிறப்பினால் முடிவு செய்யக் கூடாது என்று அறுதியிட்டு கூறுகிறது. இக்கதையில் வரும் பல பாத்திரங்கள் தங்கள் வருண குணத்துக்கு மாறாக நடக்கிறார்கள். பிராம்ண துரோணர் போர்த் தொழில் செய்கிறார், சத்ரிய தர்மர் அளவிலா பொறுமையுடனும், தர்மத்தில் நிலைப்பெற்று ஒரு பிராம்ணனை போல் இருக்கிறார். இதனால், கதையில் வரும் விவாதங்கள் இன்றைய மனிதருக்கும் பொருந்துவதாகவே உள்ளது.

ஐந்தாவது வேதம் எனப்படும் பாரதம், விதுரன், பீஷ்மர், க்ருஷ்ணர் போன்றோரின் நீதி நெறி போதனைகளால் நிறைந்துள்ளது. Politics, law, warfare, public administration, law and order, psychology, science and technology, genology,engineering என்று அனைத்து துறைகளிலும் அரிய செய்திகளை கொண்ட சுரங்கமாக திகழும் மஹாபரத கதையை சிறிதும் மாற்றாமல் நமக்களித்த திரு.சோ அவர்களுக்கு நன்றி கூறி "மஹாபாரதம் பேசுகிறது" படித்து பயன் பெறுவோம்.

Monday, October 03, 2005

Ragged totally!

I created a sort of record in our first year BE final exam. There was a paper called electrical network analysis, in which I could answer for only 25/75 marks and came out of the exam hall in 40 mins (first yearlaye intha latchanam!). Even though I needed minimum of 33/75 marks to clear that paper (normal requirement was only 30, since I was “Hard working, Quite” student, the instructor took some points away from internals :=(, so 33 needed ). When situation was like this, I was surprisingly granted 34 in the external and was cleared. I thought may be because my friend Muthulakshmi, who was ahead of me in the roll number, (who always scored first rank) scored somehow 83/75, the examiner to tally the mark sheets, gave it to me. Anyways, now I knew in TCE it is difficult to get a CUP how much ever one tries. This pattern repeated next semester too.

I don’t know how I managed to score just pass mark semester after semester in one or more papers.

But I was a “Thillalangadi” when it comes to ragging and “ootals”. My “ootals” were atleast 10 times sharper than what it is now. When things were going so smooth, I reached third year and was advising juniors to study well and was helping junior girls in their lab experiments etc. one fine evening, one first year student came to my home and said “PB anna I came to get some exam tips from you, I think I am doing poorly in the exams, please help me”. I was so happy and started giving tips like how one needs to study atleast 25% of the syllabus, so that one can write for 25 marks, but with grace (?) marks how one can clear exams and stuff like that. He was very seriously listening. I doubted that attitude and asked him “Thambi, You look dangerous, what is your percentage?”, He said “Very less anna, don’t ask me”. I was happy now, and said “don’t worry, it is not unusual for bright students to score less, come on, tell me”. He said “86.73 anna, Bhavani scored 86.78 and she became class first, I came to you to get tips so that I can be class first next semester anna”.

Aaha, oru china paya ennayave ippidi ragging pannitane!. I t was so humiliating. I told him “Thambi, Nee nalla padikira, innum nalla padipa! Aana oru help pannu. Nee enkitta idea kettathavo naan kuduthathavo yaar kittaium sollatha. Naan sonna idea ellam chumma, fail aagira payaluku. Nee nalaiku vaa, unaku first rank vangarthu eppidinu solli tharen, sariya..Ippo poitu vaa, enaku thala suthuthu, konjam rest edukaren annen!”.

I think in this whole tamilnadu, why, in this whole world, probably that was the only case where a third year senior was totally ragged by a first year student. At least he was nice enough not to spread this news. Nalla kalam da sami. BTW, he did not come next day to get the tips! Intelligent Boy!