People I know

Wednesday, November 16, 2005

Saving Tamil culture


Please check out this pic and they are of people who are protesting against actress kushbhu when she came to surrender to police in mettur court. (Thanks to thatstamil.com). These people are saving the tamil culture from the damages made by kushbu's remarks. Atrocities like these are definetly highlighting our culture and boosts our image. Don't they?
I really admire suhasini for her blod comments on those mobsters. Since no one came out in support of her shows we are yet to free ourselves from the clutches of slavery and Aug 15 is just a mockery.

"என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்" -பாரதி.

Monday, November 14, 2005

மழை!

மழையே! நீ கடவுளின் இருப்பை சத்தமாக அறிவிக்கிறாய். கடவுளின் அருளை போல ஊருக்கெல்லாம் பொதுவானவன் நீ!. ஆனாலும் உன்னை யாரும் சொந்தம் கொண்டாட முடிவத்தில்லை. ஆனாலும் உன் அழகு அனைவருக்கும் சொந்தம். உன் கருணையில் நான் மனம் கரைந்து கொண்டிருக்கும் வேளையில் எனக்கு தேவையான நீரை எங்கள் வீட்டு கிணற்றில் கொட்டி விடுகிறாய். நீர்நிலை தூர்வாரி நன்கு பராமரிக்க பட்டால் நீர் அதிகமாக கிடைக்கிறது. ஆழமில்லா கிணறுகள் உன்னால் பயனடைவது இல்லை. உன் கருணையை நான் பெறாமைக்கு நானே காரணம்(?), என்பதை பறைசாற்றுகிறாய். கரை கட்டி கொண்டிருக்கும் அனைத்து நீர் நிலைகளூம் உன் கருணையின் சிறு பகுதியையே பெறுகின்றன. கரையில்லா கடலோ மழையை மொத்தமாக பெறுகிறது.

கரையில்லா மனம், கறையில்லா மனம். அருளை மொத்தமாக அடையும் மனம்.
மனத்திலே வஞ்சகம் இருந்தால் அம்பிகையை அடையமுடியாது, ஆகையால் அவளை அடைய முடியாமைக்கு காரணம் நமது மனதில் குடியிருக்கும் வஞ்சமே என்கிறது ஒரு அபிராமி அந்தாதி பாடல்.

உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை,
ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை,
தயங்கு நுண்ணூல்
இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும்
படையா வண்ணம் பார்த்திருமே!!

"இடையிலே செம்பட்டு உடுத்தி, சடையிலே மதி சூடி, நூலும் தயங்கும் இடையுடன் கூடிய, ஈசனின் இடப்பாகம் அமர்ந்த எங்கள் அம்மை வஞ்சகர் நெஞ்சு அடையா தன்மையள். அவள் இனி என்னை படைக்க மாட்டாள். நீங்களும் அவளருளை நாடி வஞ்சகம் நீக்கி இனி பிறவா நிலை அடையுங்கள்".


இந்த உண்மையை உலகுக்கு உரக்க உரைக்கும் வகையில் நீ விளங்குகிறாய். ஆகையால், வருணனே! த்வமேவ ப்ரத்யஷம் ப்ரஹ்மாஸி. நான் உன்னை வணங்குகிறேன். எங்களை காப்பாற்றும்.

Monday, November 07, 2005

பச்சை நினைவுகள்

நேற்று வழக்கம் போல வெட்டி மொக்கை போடலாம் என்று எங்கள் கூட்டம் "starbucks"ல் கூடியது. ஏனோ என் மனம் எந்த ஒரு விவாதத்திலும் ஒட்டாமல் இலக்கின்றி ஓடிக்கொண்டிருந்தது. எதிரே ஒரு பெண் "Sleevless shirt" ல் அமர்ந்துக் கொண்டு காபியை சுவைத்துக் கொண்டிருந்தார். அம்மங்கையின் கையில் மயிலறகு ஒன்று மிக அழகாக பச்சை குத்தப் பட்டிருந்தது. அது எனக்கு சிறு வயதில் படித்த இன்றைய இயக்குநர் சு.சி.கணேசனின் "வாக்கப்பட்ட பூமி" கட்டுரை தொகுப்பின் பக்கம் ஒன்றை நினைவுப் படுத்தியது.

என் நினைவிற்கு வந்த கட்டுரையானது தமிழக கிராமங்களின் "Dress Culture" பற்றியது. கிராமங்களில் குழந்தை பருவத்தை செலவிட்ட என் வயதினருக்கு கூட இது தெரிந்து இருக்கலாம். ஆண்களின் "Casuals"ல் சட்டை என்கிற சமாசாரம் கிடையாது. வெறும் வேட்டி மற்றும் வெற்றுடம்புடன் சுற்றுவது இயல்பான ஒன்று. சில பெருசுகள் வெறும் கோவணம் மட்டும் உடுத்திக் கொண்டு "அலும்பு" பண்ணிக் கொண்டிருப்பர். இன்றும் மதுரைக்கு போனால் "Bare Body" ல் சுற்றிக் கொண்ட்ருக்கும் "60s" களையும், கோவணத்தில் வலம் வரும் "80s" களையும் பார்க்கலாம். விஷயம் அதுவல்ல இப்போது. பச்சை குத்திக்கொண்ட பெண் நினைவுப் படுத்திய கட்டுரை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

சமத்துவ சமுதாயமாம் தமிழ் சமுதாயத்தில் பெண்களுக்கும் ஆடைகள் நமது சீதோஷண நிலைக்கு ஏற்றவாறே இருந்தது. ஜாக்கெட் போட்டுக் கொள்ளும் வழக்கமெல்லாம் இப்பொழுது வந்ததுதான். இங்கிலீஷ் காரனிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட நாகரீகம் தான் உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொள்வது. கரிசல் எழுதாளர் கி.ராஜாநராயணன் சொன்னது என்று நினைக்கிறேன் "வெள்ளைக்காரன் ரொம்பவும் அந்த விஷயத்தில் weak, தன் வீட்டு dining table கால்களுக்கு கூட கவர் போட்டு மூடி வைத்திருப்பான், இல்லாவிட்டால் அது கூட அவன் ஆசையை தூண்டி விட்டு விடும் என்று". சமீபத்தில் கூட விகடனில் மதன் பதில்களில் படித்தேன். ஆப்பிரிக்காவில் பழங்குடி ஒன்றில் மேலாடை அணியும் வழக்கம் கிடையாது. அதற்கு அப்பெண்கள் கூறும் காரணம் "மூடி வைத்திருந்தால் தான் ஆண்கள் மனதில் கள்ளத்தனம் வளரும்". தமிழ் நாட்டில் கூட அந்த கலாசாரம் தான் இருந்ததோ என்னவோ. மீனாஷி அம்மன் கோயில் சிலைகளில் கொங்கை மாதர் பலரும் பல விதமான அணிகலன் போட்டிருந்தாலும் மேலாடையின்றியே காட்சி அளிக்கின்றனர். நீங்கள் யாரேனும் கவனித்திருக்கிறீர்களா? சே! எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறேன்! பச்சை குத்திக்கொண்ட பெண் நினைவுப் படுத்திய கட்டுரை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

கட்டுரைப் படி, கிராமங்களில் மிக சமீபக் காலம் வரை கூட ஜாக்கெட் பழக்கம் இருந்ததில்லை, மேலும் யாரேனும் போட்டுக் கொண்டால் கூட அது ஒரு "defiance" அல்லது "rebel" வெளிப்பாடகவே கருதப்பட்டு வந்தது. அவ்வேளையில் நகரத்தில் பிறந்த பெண்ணொருத்தி கிராமத்திற்க்கு வாக்கப்பட்டு வருகிறாள். அவளுக்கு இப்பழக்கம் அதிர்ச்சியாகவும், கூச்சமாகவும் இருக்கிறது. அவள் தோழிகள் அவளுக்கு பச்சை குத்திக் கொள்ளும் யோசனையை சொல்கிறார்கள். அவள் மேலாடை இருப்பதை போல பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். பச்சை குத்த வந்த நரிக்குறவ பெண் அது உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறாள். அவள் கேட்பதாக இல்லை. வேறு வழியின்றி பச்சை குத்த தொடங்குகிறாள். மாரில் மீண்டும் மீண்டும் ஊசி குத்தப்பட்டு வலியில் ஜன்னி கண்டு இறக்கிறாள். இந்த கட்டுரையில் பச்சை குத்திக் கொள்ளும் நமது வழக்கம் பற்றி அரிய கருத்துக்கள் கூறப்பட்டிருந்தது என்றே நினைக்கிறேன்.

12, 13 ஆண்டுகளுக்கு முன்னர் தினமணி கதிரில் வெளி வந்த தொடரில் படித்த கட்டுரை. விஷயங்கள் பலவும் மறந்து விட்டது. சமீபத்தில் "வாக்கப்பட்ட பூமி" புத்தகமாக வெளிவந்திருப்பதாக கேள்விப் பட்டேன். கடையில் கிடைத்தால் பெரிதும் மகிழ்வேன். மறைந்து வரும் அல்லது மொத்தமாக மறைந்து விட்ட நமது கலாச்சார அடையாளங்களை மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கும் "வா.பூ." தமிழர் அனைவரும் படித்தி சுவைக்க வேண்டிய புத்தகம் என்பது எனதெண்ணம்.

Friday, November 04, 2005

கடவுள் யார்?

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.
(நம்மாழ்வார் திருவாய்மொழி)

ஆணுமில்லை, பெண்ணுமில்லை, அலியுமில்லை.
காட்சிக்கு எட்டாதவன். இருப்பவன் என்றோ, இல்லாதவன் என்றோ சொல்ல முடியாது. நினைப்பவன் நினைக்கும் உருவமெல்லாம் அவனுருவம்.
ஆனாலும் எவ்வுருவமும் அவனுருவமன்று!.

இவ்வளவு கடினமான பொருள் மானிடரின் அன்புக்கு கட்டுபட்டது என்பது தான் வியப்பிலும் வியப்பன்றோ!. அபிராமி அந்தாதியில் பட்டர்பிரான் சொல்கிறார் "மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத உன் திருமூர்த்தி என் விழிக்கும் வினைக்கும் எட்டியது". உண்மையில் கடவுளை அடைய முடியும் என்னும் நம்பிக்கையை நமக்கு அளிக்கவே அடியார்கள் தங்கள் அனுபவங்களை பாடல்களாக வடிக்கின்றனர். தன் வீட்டிற்கு வ்ழி மறந்த ஒருவன், ஏற்கனவே வழி தெரிந்தவர்களிடம் தடம் கேட்டு செல்வது போல நாம் நமதியல்பை சான்றோர் உதவியால் அடைவோமாக!