People I know

Wednesday, August 15, 2007

தண்ணீர் விட்டா வளர்த்தோம்!

காந்திக்கும் தனது குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் காந்தி என்ற பெயரை சேர்த்து மக்களை ஏமாற்றினார் இந்திரா. அவரை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவிற்கு அவருடைய மருமகள் சோனியா இருக்கிறார். ராஜீவ் காந்தி பிரதமர் ஆகும் வரை இந்திய நாட்டு குடியுரிமை கூட கோராதவர் திடிரென்று நாட்டிற்க்கு பெரும் தியாகம் செய்தவர் ஆகிவிட்டார். ஆமாம் அவர் செய்த தியாகம் தான் எவ்வளவு!
பதவி மீது மோகமே இல்லாவிடாலும் தனக்கு மெஜாரிட்டி எம்.பி. களின் ஆதரவு இருப்பதாக ஜனாதிபதியிடம் பொய் கணக்கு காட்டி ஆட்சியை கவிழ்த்து பிரதமர் ஆக ஆசை பட்டார். அதணால் போனது வாஜ்பாய் ஆட்சி மட்டுமின்றி நாட்டிற்கு மறுதேர்தல் மூலம் பெரிய செலவு வைத்தார்.
தன் கண்வரை கொன்றவர்களுக்கு உதவி புரிந்தனர் என்று ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பதவிக்காக கூட்டு வைத்தார். நல்ல வேளை கலாம் அதற்கு வேட்டு வைத்தார். அதற்கு பழி வாங்கும் வகையாக central govt ல் ஒரு பன்னீராக சிங்கை ஆக்கினார். ஆத்திரம் தீராமல் கலாமுக்கு ஆப்பு வைத்தார்.
அப்படியும் பதவி வெறி அடங்காமல் கேள்விக்குறிய தகுதிகளுடைய குற்றச்சாட்டிற்க்கு ஆளான ஒரு பெண்மனியை குடியரசு தலைவியாக்கி கூத்தடித்தார். இத்தனையும் எதற்க்காக? தான் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக! ஆடுத்து நமது மத்திய பன்னீர் செல்வத்திற்கு ஆப்படித்து இவர் பிரதம்ர் ஆகும் நாள் நெருங்கி விட்டதாக பட்சிகள் கூறுகின்றன!
சர்வேசா! இந்த தேசம் என்னும் பயிருக்கு தண்ணீராக குருதியை பாய்ச்சிய தியாகிகள் பலர். அவர்களுக்காகவவது பாரதத்தை காப்பாற்று! நெஞ்சு பொறுக்கவில்லை ஐயனே!


குறிப்பு:
தனது உறவினர் குவட்ரோச்சியை காப்பாற்ற அம்மையார் ஆடும் தில்லாலங்கடி ஆட்டம் எல்லோரும் அறிந்ததே! பேசாமல் அவரை ஜனாதிபதி ஆக்கி இருக்கலாமே திருமதி காந்தி. எங்கள் ஓட்டு பிச்சைகார ஊழல் எம்.பி.க்கள் நீங்கள் நாயை நிறுத்தினாலும் ஓட்டு போடுவார்களே! நீங்கள் பீரதமர், க்வட்ரோச்சி ஜனாதிபதி. 60 ஆண்டுகளில் நாடு அடைந்த வளர்ச்சிக்கு நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் யாரேனும் இருந்தால் புள்காங்கிதம் அடைந்திருப்பார்கள்!!!

Thursday, January 11, 2007

செயற்கை

கூரையின் மேலே கூட புல் தரை போடுகிறார்கள். விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. அப்படி தான் அன்று ஒரு நாள் நான்கவது மாடியில் நின்றுக் கொண்டு குனிந்து இரண்டாவது தளத்திலிருக்கும் புல் தரையை பார்த்துக் கொண்டிருந்தேன். மிக பசுமையாக இருந்தது. யாரோ தினமும் நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறார்கள் போல. ரம்மியமாக தான் இருக்கிறது. ஆனால் வெயில் கொஞ்சம் ஏறினாலோ, காற்று கடுமையாக அடித்தாலோ தாங்குமோ தெரியவில்லை. செயற்கையாக இருப்பதால், நம் காதலை போலவே சோதனைகளை தாங்காது என்றே எண்ணுகிறேன்!

Sunday, October 29, 2006

மழை ஏன் பெய்கிறது?

எவ்வளவோ ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தாலும் மழை ஏன் ஒரு இடத்தில் பெய்கிறது அல்லது பெய்வதில்லை என்பதை மனிதர்களால் அறிய முடியவில்லை. மழை எப்படி பெய்கிறது என்பதை வள்ளுவனுக்கு முன்பே நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. ஆனால் திடீரென்று ஒரு இடத்தில் மாதக்கண்க்கில் மழையின்றி இருப்பதற்க்கும் திடீரென்று கரை கம்மாயெல்லாம் கரைப்புரண்டு ஓடும் அளவும் மழை பொழிவதற்க்கும் உண்டான காரணிகளை கணிக்க முடியாமல், மனிதனின் விஞ்ஞான ஆறிவு இயற்கையிடம் தோற்று நிற்கிறது. இது மட்டும் சரியாக தெரிந்தால் மழைக்கு கூட "time table" போட்டு விடுவோம் என்பதால் இறைவன் சில விஷயங்களை இரகசியமாகவே வைத்திருக்கிறான் போலும்.

வள்ளுவனிடம் கேட்டால் கற்புக்கரசிகள் சொன்னால் மழை பெய்யும் என்பான். வேதியர்கள் தாங்கள் செய்யும் காயத்ரி ஜபத்தினாலேயே மழை பெய்யும் என்பார்கள். வருண ஜபம் என்ற மந்திரத்தை தூய்மையான அந்தனர்கள் ஜபித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை அரசர்களிடம் வேரோடிருந்த்தாக கேள்விபட்டிருக்கிறேன். போன நூற்றாண்டின் முற்பகுதியில் கூட தென்மாவட்டங்களின் சமஸ்தானங்களில் (அவையெல்லாம் வானம் பார்த்த பூமியன்றோ?), வறட்சி காலத்தில் வருண ஜபம் செய்ய அந்தணர்கள் அழைக்கப் படுவார்கள் என்றும், அவர்கள் ஜபித்து மழை வரவில்லையென்றால் முள்ளின் மீது நின்றுக்கொண்டு கால்களில் இரத்தம் சொட்ட சொட்ட மழை வரும் வரை ஜபிப்பர் என்றெல்லாம் என் நண்பனின் பாட்டி சொன்னதுடன், அவள் கணவரும் அவ்வாறு ஜபிப்பதற்க்கு அழைக்கப்படும் ஒரு வேதவித்து என்று கூறியிருக்கிறாள். விஞ்ஞானமோ மூடநம்பிக்கையோ, எப்படியாவது மழை வந்தால் சரி என்பதே என் கருத்து.

மழைமேகங்கள் தோன்றும் போதெல்லாம் அதை ஒரு பேரதியசயமாக கருதி கற்பனையில் மிதந்து விடுகிறேன். அன்று கூட அதே மயக்கம் தான். இரண்டு தினம் கழித்து சென்னையில் நடந்த ஒரு interview விற்க்கு போகவேண்டியிருந்தது. ஆனால் எப்பொழுதும் போல reserve எல்லாம் செய்யாமல் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

ஆனால் அன்று பார்த்து மழை பலமாக பெய்துக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்த்து சென்னைக்கு தான் ஐந்து நிமிடத்திற்கு ஒரு வண்டி இருக்கிறதே ஏதெனும் ஒன்றில் தொற்றிக்கொண்டு விடலாம் என்று தெனாவெட்டு வேறு என்னை யாதொரு கவலையும் இல்லாமல் மேலே சொன்ன மழை ஏன் பெய்கிறது என்ற அதி முக்கியமான ஆராய்ச்சியில் தள்ளிவிட்டிருந்தது. நிதானமாக சாப்பிட்டு இதையே யோசித்துக்கொண்டே ஒரு வழியாக பெரியார் bus stand ஒன்பது மணி போல சென்று சேர்ந்தேன்.

என் கெட்ட நேரம் அன்று ஏதோ முகூர்த்த நாளோ அல்லது பண்டிகையோ (தீபாவளியோ) சரியாக நினைவில்லை, ஆனால் எல்லா வண்டியும் full. சாதாரணமாக இப்படி வந்து நிற்கும் பயணிக்கு ராஜ மரியாதை குடுக்கும் omni bus காரர்கள் என்னை சீந்தக் கூட இல்லை. சிறிது நேரம் கழித்து ஒரு agent ஒருவன் "Madras போனுமா. இப்படி வாங்க" என்று அழத்து போனான். ஏதோ ஒரு பேர் தெரியாத omni காரர்க்ளிடம் இட்டு சென்றான். Bus எதுவும் கண்ணுக்கு தென்படவில்லை ஆனால் ticket போட்டுக்கொண்டிருந்தார்கள் ("230 எடுங்க. ஆமா அம்பது ரூபா extra தான், last minute ல சீட்டு தரோம் இல்ல"). ரொம்ப தூரம் நடந்தே அழைத்து சென்று ஒரு bus குள் விட்டான்.

அந்த வண்டியை பார்த்து அதிர்ந்து விட்டேன். மிக பழசாகயிருந்தது மட்டுமில்லாமல் மழை வேரு உள்ளெ ஒழுகிக்கொண்டிருந்தது. அந்த வண்டி முழுவதும் வடநாட்டவர்கள் இருந்தார்கள். என்னை இன்னும் ஒன்றிரண்டு இளிச்சவாய் தமிழர்களை பிடித்து போட்டு கொண்டிருந்தான் அந்த Agent. வண்டி ஒரு மணி நேரம் (10:30 மணிக்கு) கழித்து எடுத்தார்கள். எனக்கு தெரிந்த "ek gawn mein" ஹிந்தியில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கணவன் மனைவியிடம் விசாரித்த வகையில் வண்டியில் இருக்கும் வடநாட்டுக் கோஷ்டியை ஏமாற்றி 500 ரூபாய்க்கு டிக்கெட் போட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக் கொண்டேன். இந்தக் கூட்டம் ஏற்கனவே வேறொரு டுபாக்கூர் பார்ட்டியிடம் அதிக விலைக்க்கு கன்யாகுமாரியோ கொடைகானலோ போயிருக்கிறார்கன் என்பது தெரிந்தது.

ஒரு பதினைந்து நிமிடம் சென்றிருக்கும், வண்டி மேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒருவன் ஹிந்தியில் சத்தமாக கத்த ஆரம்பித்தான். உண்மையில் அவன் மனைவியுடன் சேர்ந்து இராமேஸ்வரம் செல்ல வேண்டியவன். பணத்திற்கு ஆசைப்பட்டு அவனை 1000 ரூபாய்க்கு ஏமாற்றியிருக்கிறார்கள். அவன் பணம் திரும்ப கேட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டான். அவனுக்கு மீண்டும் பெரியார் bus stand போகவும் தெரியாது (மதுரையில் எப்பொழுது 5,6 bus stand கள் யிருக்கும், எனக்கே எந்த ஊருக்கு எந்த பஸ் ஸ்டாண்ட் என்று தெரியாது!). அது போக அவனுக்கு பணத்தை திரும்ப தரும் அதிகாரம் கண்டக்டருக்கு இல்லை என்றும் பஸ் ஸ்டாண்ட் சென்று கம்பெனியில் கேட்டுக் கொள்ளக் சொல்லிக் கொண்டிருந்தார்கள். (companyயே டுபாக்கூர், இதில் policy மயிறு வேற என்று எண்ணிக்கொண்டேன்). அவனை நட்ட நடு ரோட்டில் இறக்கி விட்டு விட்டார்கள்.

வண்டி லொட லொட என்று ஒடிக்கொண்டிருந்தது. கொட்டாம்பட்டி அருகே நான் நினைத்தது நடந்தே விட்டது. Bus Break down. இந்த வடக்கத்தியினர் கொந்தளித்து விட்டனர். என்னை போன்ற அப்பாவிகள் மற்றும் எங்கள் ஹிந்தியின் புண்ணியத்தால் அவர்கள் ஏமாற்றப்பட்டதை வேறு தெரிந்துக்கொண்டு விட்டார்கள். நானும் மிகுந்த கோபமடைந்து விட்டேன். பஸ் காரர்களிடம் சென்று எனக்கு நாளைக்கே interview இருக்கிறது என்றும் வண்டி சரியான நேரத்தில் போகவில்லை என்றால் police க்கு போவேனென்றும் கத்தினேன். conductor கண் காட்டவும் இரண்டு தடியர்கள் driver பக்கதிலிருந்து எட்டிப் பார்த்து "என்ன அங்க soundu" என்று கரகரப்பாக கேக்கவும் வடிவேலு பாணியில் சீட்டுக்கே திரும்பினேன்.
என் அருகில் இருந்த சேட் தம்பதிகள் கேட்டதால் அவர்களுக்கு நடந்ததை சொன்னேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ செய்து வண்டியை மீண்டும் எடுத்து விட்டார்கள்.

வண்டி திருச்சியை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. மீண்டும் விஷேஷமான முனங்கல்கள் செய்துவிட்டு நின்று விட்டது. மீண்டு அதே சண்டை. ஆனால் இம்முறை வண்டியை எடுக்க முடியவில்லை. சாலை எல்லாம் மழை வேறு நச நச என்று பெய்துக்கொண்டிருந்தது. பஸ்காரன் இனி வண்டியை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டான். கூட்டத்தார் அவர்களை கொன்று விடுவார்கள் போல இருந்ததால் அவர்கள் பயந்துக்கொண்டு வேறு வண்டியில் ஏற்றிவிடுவதாக சொல்லி போகும் வண்டிகளை நிற்த்த் முயற்ச்சி செய்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஏற்கனவே எல்லா வண்டியும் full ஆக ஓடிக்கொண்டிருந்ததால் யாரும் நிற்கவில்லை. (இவர்கள் fraud கம்பெனி என்பதாலும் கூட இருக்கலாம்).

கொஞ்ச நேரத்தில் ஒரு வண்டிகாரன் நிறுத்தி கொஞ்சம் சீட்டு இருப்பதாக கூறினான். கூட்டத்தில் ஒரு சாரார் முந்திக்கொண்டு ஓடினர், நானும் தான். ஆப்பொழுது என் அருகில் அமர்ந்திருந்த பெண்மனி பெரும் குரலெடுத்து அவர்களை திட்டினாள். எனக்கு interview இருக்கிறது என்றும், அவர்கள் முதலில் எனக்கு ஒரு சீட் பிடித்துக் கொடுத்தே அவர்கள் போக வேண்டும் என்று கூறினாள். அவர்கள் ஏற்றுக்கொண்டு முதலில் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் சொன்னது பொய் என்றும் வயதான வேறு யாரேனும் செல்லலாம் என்று கூறி விட வேண்டும் என்று தோன்றினாலும் அந்த சூழ்நிலையில் அது சரியாக இருக்காது என்பதால் வெட்கம் பிடுங்கி தின்ன முதல் ஆளாக பேருந்தில் அமர்ந்தேன்.

வள்ளுவன் சொல்லிவிட்டான் என்று "பொய்மையும் வாய்மை இடத்து" என்று கூட பொய சொல்லகூடாது, தெரியாமல் தொட்டாலும் தீ சுடவே செய்யும், மனசறிந்து சொல்லும் பொய் நெஞ்சை எரிக்கும் தீ என்று உணர்ந்தேன். இவ்வாறு வள்ளுவனை நினைத்த நேரத்தில் தான் ஏன் அன்று மட்டும் வழி முழுக்க மழை பெய்த்தது என்ற என் முந்தை சிந்தனைக்கு அவன் விடை அளித்திருப்பது தெரிந்தது.

வந்த இடத்தில் தமிழர்களால் பல வகையிலும் ஏமாற்றப்பட்டு சொல்லொணா துயர் அனுபவித்து கொண்டிருந்த அந்த மக்கள் இவ்வளவு பெரிய மனதை கொண்டிருக்கிறார்கள். தன் கஷ்டத்தை மீறி பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் எனக்கு இல்லையே என்று வெட்கமாக இருந்தது. "நல்லார் ஒருவர் உளரேல அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்றானே வள்ளுவன். அவர்களால் தான் அந்த நாளில் என்றுமில்லாத திருநாளாய் வழியெங்கும் வருணன் களியாட்டம் புரிந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன்.

Saturday, October 14, 2006

இருட்டிலும் தொடரும் நிழல்

யாருக்கும் அஞ்சாமல் தனிமையில் ஊருக்கு வெளியே புற்றில் வாழும் பாம்பை போல ஒரு சன்யாசியானவன் வாழ வேண்டும் என்பதை அறிவித்ததால் அந்த பாம்பையும் ஒரு குருவாக ஏற்றேன்.
---தத்தாத்ரேயர்.நம்மை விட்டு நீங்காதது தனிமை மட்டுமே. உலகில் வாழும் மனிதர்களில் சிலர் தனிமைக்கு பழக்கபட்டு அஞ்சாமல் வாழ்கின்றனர். பலர் தன்னுடன் தனிமை இருப்பதை மறுக்க விரும்பி கலந்து வாழ்கின்றனர், ஆனாலும் தனிமை என்பது இருட்டிலும் நம்மை விட்டு பிரியாத நிழல் போல தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது என்பதை யாரும் உணர்ந்தே இருக்கிறார்கள். தனிமையை விரட்டிக் கொள்ளும் யுத்ததில் வேறுவழியின்றி மனிதர் தோற்று மரணத்தை தழுவுவது வாழும் மனிதர்க்கு அதை குறித்த அச்சத்தை அதிகரிக்கிறது.

இளவயதில் தனிமை அவ்வளவு துன்புறுத்துவதில்லை என்றே தோன்றுகிறது. தனிமையின் இருப்பை ஏற்க மறுத்து கூடி குலவி இன்பம் துய்ப்பதில் காலம் கரைந்து விடுகிறது. ஆனால் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கும் எதிரியை போல சட்டென முதுமை துணைக்கொண்டு தனிமை ஒருவனை வீழ்த்திவிடுகிறது. தூரத்து உறவினர் ஒருவரை சந்தர்ப்ப வசத்தால் மூப்படைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் பார்க்க நேர்ந்தது. இளவயதில் தனக்கு யாரும் வேண்டாம் என்று கூறி வீட்டை விட்டே வெளியேறியவர் அவர். மிகவும் கோபக்காரர் என்றும் மிடுக்கு நிறைந்தவர் என்றெல்லாம் கேள்வி. ஆனால் தனிமை மூர்க்கதனமாக தாக்கியதால் நைந்த துணி போல இருந்த முதியவ்ர் வயதில் மிக சிறியவனான என் கையை பற்றிக்கொண்டு "என்னை மதுரைக்கு அழைத்து போய்விடு, எனக்கு மனிதர்களே இல்லை. உன் கையை காலாய் நினைத்து பிடித்து கொள்கிறேன், என் உயிர் மனிதர்களுக்கு ந்டுவில் போகட்டும்" என்று கண்ணீர் விட்ட போது வாழ்க்கையில் ஒருவன் சத்தியமாய் சந்திக்க வெண்டிய இந்த தனிமை எதிரியின் வலிமையை உணர்ந்தேன்.


சிந்தித்து பார்த்தால் சில மனிதர்கள் மட்டும் மற்றவர்களை விட மிக அதிகமாக தனிமைக்கு வாக்கப்பட்டு விட்டார்களோ என்று தோன்றும். அவர்கள் கூட்டத்தில் கூட தனியாக தான் இருக்கிறார்கள் என்று தோண்றும். உண்மையில் அவர்கள் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தாலும் அவர்கள் உள்ளே யாருடனும் சேராமல் இருப்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். புழுங்கரிசி சோறானது எவ்வளவு சாம்பாரில் பிரண்டாலும் சாம்பாரில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதை போல தான் இதுவும்.
எல்லா மனிதர்களும் கூட்டத்திலும் தனிமை என்பதை சில நேரங்களிலாவது அனுபவிக்கவே செய்வார்கள் என்பது என் எண்ணம்.


இதில் சில அலாதி ரகங்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தனித்திருந்து இருந்து தனிமையில் ஒரு சுகம் தோன்றி விடும். ஆனால் அவர்களை முழு மனிதர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன். வியாதி வராத மாதிரி அதிகமான எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு எப்போதாவது வரும் ஜலதோஷம் கூட விரைவில் குண்மடையாது, எந்த மருந்துக்கும் கேக்காது. தானாகவே போனால் தான் உண்டு. அவர்கள் அப்பொழுது அதிகம் அவதி படுவதை பார்க்க முடியும். அது போல யாருடனும் ஒட்டாத இந்த அதிசய பிறவிகளுக்கு திடிரென்று ஒரு தோழனோ தோழியோ கிடைப்பர். உலக விதிப்படி வருவது எல்லாம் போவது தானே என்று அந்த தோழனோ தோழியோ பிரிந்து விட்டால துவண்டு விடுவர். யாரிடமும் சொல்லி அழ முடியாத பழக்கத்தால் அவர்களுக்கு துன்மானது மேலே கூறிய படி "தானாகவே போனால் தான் உண்டு". ஆகையால் நீங்கள் அலாதி ரகம் என்றால் மொத்தமாக யாரிடமும் ஒட்டாமல் இருங்கள். இல்லாவிட்டால் கஷ்டம் தான்.


ஆனால் உண்மையில் தனிமை தவிர்க்க முடியாது என்று அறிந்து யதார்த்தமாக இருப்பவர்களுக்கு தனிமை ஒரு தோழன். ஒரு மனிதன் தன்னை செப்பனிட்டுக்கொள்ள த்னிமை மிகவும் அவசியம். "நீ நல்லவனா கெட்டவனா என்பதை தனிமையில் இருக்கும் பொழுது நீ எப்படி நடந்துக்கொள்கிறாய் என்பதிலிருந்து தெரிந்து கொள்" என்று காந்தியடிகள் சொன்னதாக ஞாயபகம். தனிமையில் இருக்கும் ஒருவன் யாருக்கும் ஜவாப்தாரி இல்லை. அவன் சிந்திக்க நிறைய அவகாசம் கிடைப்பதால் மனதெளிவு அடைய வழி கிடைக்கிறது. சில சித்த தெளிவு ஏற்பட்ட மனிதர்களின் போக்கு வித்தியாசமாக அமைவதை பார்க்கிறோம். அவர்களை சில சமயம் சமூகம் ஒரு பைத்தியமாக கூட பார்க்கிறது. பாரதியார் பட்ட பாடு நாம் யாவரும் அறிந்த்தே. ஆழ்வர்களில் ஒருவர் (குலசேகரர்) கூட "பேயனே எனக்கு யாவரும், யானும் ஒர் பேயனே யாவருக்கும், எதற்க்கு இனி பேச்சு" என்று தன்னால் யாரிடமும் ஒட்ட இயலாது என்று அறிவிக்கிறார். ஆனால் அத்தகைய ஞானியரை தனிமையின் தாக்கம் ஒன்றும் செய்வதில்லை. இந்த பாடு எல்லாம் நம்மை போன்ற சாதாரணனர்க்கே.


மொத்ததில் தனிமை ஒரு விஷேச குணம் கொண்டது. தனிமையை விரும்பி வரவேற்றாலும் அதற்க்கு பிடிக்காது. நெடு நேரம் வெய்யிலில் நின்று பழக்கப்பட்டாலும் சில நொடிகள் நிழலின் அருமை காட்டி மீண்டு வெயிலில் விட்டால் அதிகப்ப்டியாக நிழலுக்கு ஏங்கும் மனம் போல திடிரென சில்லென்று அன்பின் தென்றலை வீசி பின்னர் அதை விலக்கி கலங்கடித்துவிடும். தனிமையை வெறுத்து ஒடுபவர்களுக்கோ தனிமையின் நிழல் பட்டால் போதும் கருகிவிடுவர். விவேகமுள்ளவனோ தனிமையை விரும்புவதும் இல்லை, வெறுப்பதுவும் இல்லை. யதார்த்தமாக இருக்கிறான். அவனிடம் தனிமை தோற்கிறது.


தனித்திரு! விழித்திரு!
-விவேகானந்தர்.

Tuesday, October 03, 2006

பிறவித் துன்பம்.

கரு உண்டாகிய ஐந்து நாள் வரை குழந்தை வட்டமாக நுரை வடிவில் இருக்கும். பத்து நாட்களில் எலந்தப் பழம் போல கட்டியாக இருக்கும். பிறகு மாம்ஸ பிண்டம் போல இருக்கும். முதல் மாதத்தில் தலை உண்டாகிறது. இரண்டாவது மாதத்தில் கை கால் உண்டாகிறது. 3வது மாதத்தி நகம், முடி, எலும்பு, தோல், பிறப்புறுப்பு (Genital organs),காது ஓட்டை, மூக்கு ஓட்டை இதெல்லாம் உண்டாகிறது. நான்காவது மாததிதில் தோல், ரத்தம், மாம்சம், மேதஸ் (?), எலும்பு மஜ்ஜை (bone marrow), சுக்கிலம் என்கிற ஏழு தாதுக்கள் உண்டாகின்றன. ஆறாவது மாதத்தில் கர்ப்ப பையால் சுற்றப்பட்டு அம்மாவின் வயிற்றில் வலப்பக்கமாக சுற்றி வரும்.

ஏஷாவது மாதத்தில் ஜீவனுக்கு ஞானம் கிடைக்கிறது. போன ஜென்மங்களின் தொடர்ப்பு, தான் பிறக்க வேண்டிய காரணம் எல்லாம் தெரிகிறது.
தாய் உண்ணும் உணவு பருகும் பாணங்கள் கொண்டு குழந்தை வள்ர்க்கிறது. குழந்தையின் தொப்புளில் "ஆப்யாயினி" என்ற நாடி கட்டப்படுகிறது, அதன் மறு முனை தாயின் குடலின் ஓட்டையில் கட்டப்படுகிறது. இனி தாயார் சாப்பிட்டது, குடித்தது எல்லாம் குழந்தையின் வயிற்றுக்கும் போய் சேருகிறது.

இவ்விதம் குழந்தை வளரும் குழந்தை ஏராளமான புழுக்கள் உண்டாககூடிய மலம் மூத்திரம் நிரம்பிய குழியில் படுத்திருக்கிறது. அதிலுள்ள புழுக்கள் குழந்தையை கடித்து துன்புறுத்துவதால் குழந்தை அடிக்கடி மயங்குறது. தாய் உண்ணும் உணவில் இருக்கும் உப்பு, உறைப்பு, கசப்பு, தித்திப்பு எல்லாம் குழந்தையை துன்புறுத்தும்.தன்னை சுற்றி கர்ப்பப்பை, மாலை மாதிரி குடல், வளைஞ்ச முதுகு-கழுத்து, வயிற்றில் தலையை வளைத்துக் கொண்டு குழந்தை அங்கேயே கிடக்கிறது. இந்த நேரத்தில் முற்பிறவியின் கதை எல்லாம் தெரிகிறது. ஏழாவது மாதத்தில் பிரசவக் காற்று குழந்தையை அசைக்க தொடங்கும். பத்தாவது மாதத்தில் துன்பம் தீர பிரசவ காற்று தலை கீழாக வெளி தள்ள குழந்தை பிறக்கிறது.

-- மார்க்கண்டேய புராணத்தில் இருப்பதாக சக்தி விகடனில் படித்தது.

நவீன மருத்துவமும் இதையே தான் சொல்கிறது. நான் படித்த "உச்ச தலை முதல் உள்ளங்கால் வரை" என்ற புத்தகத்தில் கூட இப்படி தான் போட்டிருந்தார்கள். முன்னோர்களுக்கு இந்த scanning அறிவு எப்படி கிடைத்தது என்றே தரியவில்லை. நாமெல்லாம் கெட்டவர்கள், அவர்களுடைய scanner ஐ கொடுத்தால் அதை கொண்டு பெண் சிசுக்களை abortion செய்ய மட்டுமே பயன்படுத்துவோம் என்பதை கூட தெரிந்து தான் நம்மிடமிருந்து மறைத்து விட்டார்களோ என்னமோ?

பொதுவாகவே ஆன்மீக பாடல்களில் பிரசவத்தில் குழந்தை படும் வேதனைகள் பற்றி பாடி வைத்திருக்கிறார்கள். ஆகையால் மார்கண்டேய புராணத்தில் இடை செருகல் இதெல்லாம் என்றும் சொல்ல கூடியவர்கள் கூட நம் முன்னோர்கள் கர்ப்ப கால கஷ்டத்தை பற்றி தெரிந்து வைத்திருந்தவர்கள் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

Tuesday, September 19, 2006

கையும் காலும் தானே மிச்சம்

உலகத்திலேயே உத்தமமான தொழில் எது என்று கேட்டால் விவசாயம் என்று தான் சொல்லுவேன். ஆனால் நமது அரசியல்வாதிகளின் கோமாளீதனங்களால் விவசாயிகள் சொல்லொணா துயரத்தில் வாடுகின்றனர். சமீபத்தில் Newyork times ல் வெளிவந்த இந்த கட்டுரை இந்த அவல நிலமை உலகத்தின் கவனத்தை பெற்றிருக்கிறது என்பதை காட்டுகிறது.

ஆனாலும் என்னை மிகவும் பாதித்த விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையான விவசாயிகள் தங்கள் வாரிசுகளை விவசாயத்தில் ஈடுபடுத்தவில்லை. இதனால் பாரதத்தில் இந்த தொழில் அழிந்துவிடுமோ காலப்போக்கில் என்று கூட அஞ்சுகிறேன்.

விவசாயிக்கு லாபம் என்பதே கிடையாது, (ஒரு சில பணப்ப்யிர் சாகுபடியில் இருக்குமோ என்னமோ!), ஆனாலும் நட்டத்திற்கு பெரும்பான்மையோர் விவசாயம் செய்கின்றனர். அதற்கு காரணம் நிலத்தை தரிசாக விடுவது ஒரு அவமானம் என்கிற கிராமிய நம்பிக்கை, உயிரை விட மானம் பெரிது என்பதால் அவர்கள் கடன் வாங்கி விவசாயம் செய்து உயிரை விட்டுவி்டுகிறார்கள்.

முன்னொரு காலத்திலே இயற்கை உரம் விலை கொடுத்து வாங்கமல் கிடைத்தது. விதை நெல் குடும்பத்தின் பொக்கிஷமாக கருதப்பட்டது. விவசாயத்திற்கு அரசாங்கம் பெருமதிப்பு குடுத்து வந்தது. ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு சில தலைவர்கள் மேலை நாட்டு கொள்கைகளை கடைபிடிப்பது தான் முன்னேற்றதிற்க்கு வழி என்று கருதி நகர்மயமாக்கல் (urbanization) கொள்கையை கடைபிடித்தனர். அவர்களாவது பரவாயில்லை, பின்னர் வந்த தலைவர்கள் ஓட்டு பிச்சைகாரர்களாகவே இருந்து ஊழலில் திளைத்து விவசாயிகல் வயிற்றில் அடித்தனர்.

விவசாயிகளிக்கு நஷ்டம் வரும் வகையில் திட்டங்களை தீட்டினால் (குறைந்த விலையில் கொள்முதல் (procuring) போன்றவை) தன்னால் பாரம்பரிய தொழிலை விட்டுவிடுவர் என்று அரசாங்கம் கருதியது/கருதுகிறது. மேலும் green revolution (பசுமை புரட்சி) காலத்தில் இரசாயன உரங்களை ஊக்குவித்து விவசாயத்தின் முதலை (capital) அதிகரித்தனர். ஆனால் அரசாங்கம் கொள்முதல் விலையை (procuring price) உயர்த்தவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஆரம்பித்த நஷ்டக்கதை தொடர்கதையாக தொடர்வதால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். பட்ட காலிலேயே படும் என்பது போல WTO ஒப்பந்தங்களால் விதை பயிர் கூட வைத்துக்கொள்ள இயலாமல் அதிக விலை குடுத்து விதைகளை வாங்கவேண்டியிருக்கும் பரிதாப நிலையை ஏற்படுத்திவிட்டார்கள் அரசியல்வாதிகள்.


மேலும் அரசாங்கம் அளிக்கும் மான்யங்கள் (subsidies) அதிகாரிகளும், அரசியல் வாதிகளுமே சாப்பிட்டு விடுகின்றனர். மேலும் நல்ல அரசாங்கம் மான்யங்களை ஊக்கப்ப்டுத்தாமல் சிறந்த சேவையை சரியான விலையில் அளிக்க முயன்றால் தான் உருப்படும். உதாரணத்திற்கு இலவச மின்சாரம் தருவதாக சொல்லி அதனால் ஏற்படும் நஷ்டத்தை மின்வெட்டு (power cut) மூலம் சமாளிக்காமல் சரியான விலையில் மின்சாரம் தடையின்றி வழங்கினால் நாடு உருப்படும். ஆனால் கடன் ரத்து போன்ற முட்டாள் திட்டங்கள் தீட்டி கவர்ச்சியால் நாட்டை அழித்து வயிறு வளர்க்கும் கோமாளி தலைவர்களிடம் மாட்டிகொண்டுவிட்டு இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

திருவள்ளுவன் சொன்னான் "சுழலும் ஏர் பின்னது உலகம்" என்று. இன்று ஏர்பிடித்த்வன் விஷம் குடித்து சாகிறான். விஷம் கூட கடன் சொல்லி வாங்கும் பரிதாப நிலை தோன்றிவிட்டது. பட்டுக்கோட்டையார் கூட "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" என்றான். இன்று அதுவும் மிச்சமில்லை.

நமக்கு காலம் காலமாக உணவளித்து தாயை போல காத்தவர்கள் விவசாயிகள். பாவம் இன்று அவர்களுக்கு கஷ்டத்தில் உதவ யாருமில்லை. பெற்ற தாயையே சோறு போடாமல் விரட்டும் காலத்தில் நம்மிடமிருந்து எதுவும் தேறாது என்று உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிக்கு வேற என்ன வழி இருக்க முடியும்?

Saturday, September 02, 2006

How many people in a family?

Wikipedia Says this on Tamilnadu's population.

Tamil Nadu's population stood at 62,110,839 as of 00.00 hours of March 1, 2001. It is the sixth most populous State of the Indian Union behind Uttar Pradesh, Maharashtra, Bihar, West Bengal and Andhra Pradesh. The State accounts for 6.05% of the country's population. Its population density at 478 persons per square kilometre, up from 429 in 1991, and much higher than the all-India density of 324, makes it the eleventh most densely populated State (1991 rank:10) [3]. Approximately 47% of Tamil Nadu's population live in urban areas, one of the highest percentages in India.[2]

Our Cheif Minster Karunanidhi says this:
"The identified land, spread over 270 sq km, is found to be ideally suitable for setting up the new city, mainly due to pollution-free air and clean environment. The land is presently inhabited only by 13,000 families and is largely uncultivated," Karunanidhi said, adding when the government acquired the land, the owners would be duly compensated at the prevailing market rates

Interesting Observation:
Assuming population density of 480, which could be far less for an area that is very close to chennai, I found a family has 10 members. Thought family planning schemes were very effective so far. Now I want to ask who ate all the money that were supposed to have spent on popularising inverted triangle. I know karunanidhi is not lying, as they dont make much out of mega projects like this. So please set up an enquiry.

Saturday, August 26, 2006

எல்லாம் தெரிந்தும் கொஞ்சம் தெரிவதில்லை!

குடும்பம்:
"என் பையனுக்கு நான் guarantee ங்க"
"ஆமா அவன் foreign ல தான் இருக்கான், ஆனா நம்ம கலாசாரம் தான் அவனுக்கு பிடிக்கும், ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, படிக்கிற காலத்துல வாராவாரம் கோயில் குளம்னு சுத்தின பய தான்".

"ஆமாங்க சீக்கிரம் இங்கயே வந்திரனும்னு தான் சொல்லிகிட்டு இருக்கான். வாராவாரம் அங்க இருக்கிற கோயில்களுக்கு போனாக்கூட நம்ம மீனாட்சி அம்மன் கோயில் மாதிரி வராதுமா, சீக்கிரமே india வந்து settle ஆயிடனும்னு சொல்லிகிட்டு இருக்கான்".

"என்னது எங்களுக்கு தெரியாமயா, எங்க பையன் அப்படி கிடையாதுங்க, எங்களுக்கு தெரியாமா அவன் எதுவும் செஞ்சது இல்லை. அவன பத்தி அவனை வளத்த எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்க வார்த்தைய தட்ட மாட்டான், நீங்க நம்பி ஜாதகத்த அனுப்புங்க".

"சந்தோஷம், அப்ப வர வெள்ளி கிழம நல்ல நாள் அன்னிக்கே வந்து பொண்ண பாக்குறோம், அவனுக்கு photo வ Email பண்ணிட்டோம்"

"அதெல்லாம் நாங்க சொன்னா போதும். ஒத்துப்பான்"

"சரி வெச்சிடறேன்"

அம்மா மீனாட்சியம்மாள் யாரோ பெண் வீட்டுக்காரர்களிடம் பேசிவிட்டு போனை வைததாள். அப்பா சுந்தரேசன் "என்னடி நம்ம பையனுக்கு 24 வயசுதானே ஆகுது, ஏன் இப்படி அவசரமா பொண்ணு பாக்குற. அவன் எண்ண நினைச்சுகிட்டு இருக்கானோ என்னமோ? அதான் அடுத்த வாரம் வரானே அதுவரை பொறு அவன கேட்டு முடிவு செய்வோம்" என்றார்.

"விவரமில்லாம பேசறதே உங்க பொழப்பு. அவன எப்படியாவது வழிக்கு கொண்டு வந்து பாத்து வெச்சிருக்கிற நாலு அஞ்சு பொண்ணுகள்ள ஒன்ன் முடிச்சிபுடுவோம். இந்நேரம் அவன் என்ன பண்ணிகிட்டுயிருக்கான்னு யாரு guarantee கொடுக்க முடியும், அவன் காலேஜல படிக்கிற காலத்திலயே வாரா வாரம் கோயிலுக்கு போறேன்னு அங்கன ஒரு பொண்ணு கூட சுத்தின பய தானே, நமக்கே தெரியாம கல்யாணம் பண்ணிக்க போய் ஜாதி பிரச்சனை ஆகி அவன அடிச்சி போடவும், நமக்கு ஆஸ்பத்திரில வேச்சு கொஞ்சம் விவரம் சொன்னான். அவன நம்ப முடியாதுங்க, எப்படியாவது பேசி ஒரு இடத்துல நிச்சயம் பண்ணிடணுங்க, இல்லன்னா இன்னும் என்னென்ன பாக்க வேண்டியிருக்குமோ?" என்று கூறினாள். சுந்த்ரேசன் பெருமூச்சு ஒன்றை பதிலாய் எறிந்தார்.

தெய்வம்
"பெருமாளை சர்வக்ஞன் (அனைத்தும் அறிந்தவன்) என்று கூறுவதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம், அவனுக்கு அடியார்களிடம் உள்ள சிறு சிறு குறைகள் தெரிவத்தில்லை, அவர்களை அதற்காக தண்டிக்காமல் அருளை பொழிவதால், பெருமாளே உனக்கு எல்லாம் தெரியும் என்கிற கருத்தை எதிர்க்கிறோம்"

- கூரத்தாழ்வார்.

தொண்டர்:

மாசில் வீணையும் மாலைமதியமும்
வீசு தென்றலும் வீன்க்கிள வேனிலும்
மூசு வண்டறை பொயகையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
- அப்பர் பெருமான்.

குற்றமில்லாத வீணையின் நாதம், மாலையில் வீசும் முழு மதி, வீசும் இனிமையான தென்றல், இள வேனிற்காலம், வண்டுகள் மொய்கின்ற பொய்கை போன்றது சிவபெருமானின் திருவடிகள் என்றார். சிவபெருமானின் இணையடி தரும் குளிர்ச்சி தெரிந்து பாடும் வேளையில் தான் மிக கொடிய வெப்பம் மிகுந்த சுண்ணாம்பு காளவாயில் நின்றுக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இவரை போய் ஞானி என்று அழைப்பது எங்ங்னம் தகும்.

Thursday, August 24, 2006

கலி வசிக்கும் இடங்கள்

கிருஷ்ணரால் உயிர்பிக்கப் பட்டவனும் அபிமன்யுவின் மகனுமாகிய பரிஷித் ஒரு முறை காட்சி ஒன்றை கண்டான். தர்மம் பசு வடிவம் தாங்கியிருப்பதுவும் அவளுடைய நான்கு கால்களாகிய தவம் தூய்மை தயை சத்யம் என்னும் நான்கு கால்களில் மூன்றை ஆசை, சந்தேகம், கர்வம் கொண்டு உடைத்து விட்டு நான்கவது காலை அசத்யம் கொண்டு உடைக்க கலிபுருஷன் முற்படுவதையும் கண்டான். உடனே கோபம் கொண்டு கலியை கொன்றுவிட துணிந்தான். அப்பொழுது கலி புருஷன் பரிஷித்திடம் சரணடைந்து தான் தனது கடமையை மட்டுமே செய்வதாகவும், அதணால் தன்னை கொல்லாமல் தனக்கு வாழ வழி செய்யவேண்டும் என்வும் கேட்டான். அதற்கு பரிஷித் மகராஜா மனம் இரங்கினார் (சரணடைந்தவர்களை கொல்ல கூடாது என்பது ஒரு ராஜ தர்மம்).
கலியிடம் "சூதாட்டம், குடி, பெண்களை இழிவாக நடத்துமிடங்கள், பிராணிகளை வதைக்கும் இடங்களில் நீ வசிக்கலாம்" என்றார். கலி வசிக்க மேலும் சில இடங்களை கேட்கவும் "பொய் பேசப்படும் இடங்கள், காமம், கர்வம், பொறாமை, துவேஷம் நிறைந்த இடங்களில் வசிக்கலாம் . கலியால் பீடிக்க பட கூடாது என்றால் இவ்விடங்களை தவிர்க்க வேண்டும்" என்று கூறினார். இந்த கதை பாகவதத்தின் தொடக்கத்தில் வருகிறது.

ஸுகர் பாகவத புராணத்தை பரிஷித் மகராஜனுக்கு உபதேசிக்கு முன் ஒரு ஆசைகளை துறந்து வாழ்வதை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுகிறார். அப்பொழுது வீடுகளில் வாழ்வதை காட்டிலும் குகையிலே வாழ்வது சிறந்தது என்கிறார். நமது முன்னோர்கள் தொடங்கி இன்றும் கூட ரமண மகரிஷி போன்றோர் குகையிலே வசித்து வந்ததை அறிவோம். ஆனால் நம்முடைய புத்தகங்களோ குகையில் வசித்து இயற்கையோடு ஒத்து வாழ்ந்தவர்களை காட்டு மிராண்டிகளாக விவரிக்கின்றன. எனக்கு என்னமோ முன்னோர்கள் சகல அறிவையும் பெற்றிருந்த போதிலும் இயற்கையுடன் ஒத்து வாழ்வதே சிறந்தது என அறிந்து வந்ததால் எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் என்றே படுகிறது. இல்லாவிட்டால் நாம் முன்னோர்கள் மாபெரும் காப்பியங்கள் இயற்றி பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் என்று நம்பும் வேளையில் மேற்கத்தியர் நம்மை குகையில் வாழ்ந்த காட்டு மிராண்டிகள் என்று ஆதரங்களுடன் கண்டுபிடித்திருப்பதாக சொல்லிக் கொள்வதற்க்கும் சமாதானம் காண முடியாது.

நன்றி: துக்ளக்கில் தற்போது "சோ' அவர்களால் எழுதப்படும் "இந்து மகா சமுத்திரம்" தொடர்.

"சூதாட்டம், குடி, பெண்களை இழிவாக நடத்துமிடங்கள், பிராணிகளை வதைக்கும் இடங்களில் நீ வசிக்கலாம்" என்று பரிஷித் கூறிய போது கலி நினைத்திருப்பான் " பெண்கள் குடித்து விட்டு தங்களை தாங்களே இழிவாக நடத்திக் கொண்டு அதில் பெருமைபடக்கூடிய club/bar/casino கள் மிகுந்த காலத்தை வர வைப்பேன். அது கூட தெரியாத இவனிடமெல்லாம் நான் சரணடைய வேண்டியிருக்கிறது, nonsense!".

Wednesday, August 23, 2006

"ஆட்டோ"கிராப் (அ) புது பேரம்

தாம்பரத்திலிருந்து அடையார், மயிலாப்பூர், திருவான்மியூர் எல்லாம் எப்படி போவது என்று என்னை கேளுங்கள் சொல்கிறேன். நேராக வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுங்கள், அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து போய்க்கொள்ளுங்கள். 15 ரூபாய்குள் மேட்டர் முடிந்து விடும். அன்றைக்கு ஆனால் வேளச்சேரி வரை மட்டுமே செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அங்கே எதிர்பார்க்காமல் சந்தித்த நண்பன் ஒருவன் சொன்னபடி பெஸண்ட் நகர் சென்று ஜீஸ் குடிக்கலாம் என்று முடிவானது. அவன் நம்மை போல ஷேர் ஆட்டோ பார்ட்டி கிடையாது, கொஞ்சம் பெரிய இடம்.

ஆட்டோ ஒன்றை கூப்பிட்டான். அவர் 70 ரூபாய் சொல்லி 60 க்கு படிந்தார். ரொம்ப அதிகம் என்று நண்பன் நொந்துக்கொண்டான். ஆனால் ஒரு கோப்பை ஜூஸ் 45 ரூபாய் என்று ஆங்கிலத்தில் சொல்லவும் பேரம் பேசாமல் வாங்கி குடித்தோம். நேரம் குறைவாக இருந்ததால் உடனே கிளம்பிவிட்டோம். அந்த ஆட்டோகாரருக்கு என்னை பிடித்துவிட்டத்தோ என்னமோ அவரே வெளியில் காத்திருந்து என்னை ஏற்றிக்கொண்டார். (நீங்க குடுக்கறத குடுங்க சார்!).

அவர் என்னை பற்றி கேட்டார், நான் சொல்லி விட்டு பதிலுக்கு அவரை பற்றி கேட்டேன். மிகவும் சுவாரசியமான கதையாக இருந்தது அவருடையது. திருநெல்வேலி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தை சேர்ந்த அவர் சின்ன வயதில் புத்தகங்களில் வரும் மெட்றாஸ் என்ற சொல்லை கேட்டு மிகவும் கவரப்பட்டதாகவும், 12 வயதில் கூட படிக்கும் சிலருடன் சென்னைக்கு ஓடி வந்து விட்டதாகவும், 3 நாட்கள் சென்னையில் பயந்துக் கொண்டே கழித்த கதையையும் மற்றும் சென்னையின் தன்மை அறிந்து கஷ்டப்பட்டு ஊர் போய் சேர்ந்ததாகவும் சொன்னார்.

பின்னர் பல்வேறு காரணங்களால் ஆட்டோ ஓட்ட நேர்ந்த கதையையும் ஆனால் திருநெல்வேலியில் நிறைய சொந்த பந்தங்கள் இருப்பதால் அவர்களுக்கு இலவச சவாரி செய்ய நேர்ந்ததால் சென்னைக்கு வேலை தேடி வர நேர்ந்ததாகவும், பல்வேறு வேலைகள் செய்து கடைசியில் ஆட்டோ ஓட்டுநராகவே ஆனதையும் விளக்கினார். (அவருக்கு வயது 42) தன் குழைந்தகளுக்கு நல்ல கல்வி கிடைக்க பாடுபடுவதையும் விளக்கினார். ஒரு சினிமாவை விட சுவரசியமாய் இருந்தது அவர் வாழ்க்கை.

இறுதியில் வேளச்சேரி வந்தவுடன் நான் ஒரு 100 ரூபாய் தாளை கொடுத்து "உங்க வாடகையை எடுத்துகொங்க" என்றேன். மிகவும் தயக்கத்துடன் 70 ரூபாய் மிச்சம் கொடுத்தார். நான் அவரிடம் மேலும் 20 ரூபாய் கொடுத்து "வெச்சிக்கங்க" என்று சொல்லி நடந்தேன். அவர் அன்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். தாம்பரம் வண்டி வர தாமதமானது. எங்கிருந்தோ அந்த ஆட்டோகாரர் திரும்ப வந்து "பஸ் வரலயா? கொஞ்ச நேரத்துல வந்திரும்' என்று சொல்லி நான் பஸ் ஏறினவுடன் சென்றார். எனக்கு அவசரமாக் தாம்பரம் திரும்ப வேண்டும் என்று சொன்னதை ஞாபத்தில் வைத்து என்க்கு உதவலாம் என்று வந்தார் என்று நினைத்தேன்.

இதை போலவே ஒரு அனுபவம் மதுரையில் ஒரு ஆட்டோகாரரிடம் நிகழ்ந்தது. அவருடைய கதையை என்ன காரணத்தினாலோ என்னிடம் பகிர்ந்து கொண்டது மட்டும் இன்றி வாடகையும் மிக குறைவாக கேட்டார். நான் வற்ப்புறுத்தி நார்மல் ரேட்டை கொடுத்தேன்.

நினைத்து பார்த்தால் எல்லோருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதை யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள ஆசையும் இருக்கிறது. ஆனால் இந்த அவசர யுகத்தில் எல்லாம் பணதை பங்கு போட்டுக்கொள்வதில் கவனம் செலுத்து மனதை மறந்து மிருகமாக ஐந்துக்கும் பத்துக்கும் சண்டை போடுகிறோம். அன்பை ஆதாரமாக வைத்து நடக்கும் பேரம் வியாபர நியதிக்கு எதிர் திசையில் செல்வதை எப்பொழுதும் கவனித்திருக்கிறேன்.

"அன்பின் வழியது உயிர் நிலை" - திருவள்ளுவர்.

Friday, July 28, 2006

அறிந்தும் அறியாமலும்

நண்பன் ஒருவன் ஒருமுறை சொன்னான் நமக்கு விருப்போ வெறுப்போ ஒரு பொருளை தெரியாத வரை மட்டுமே இருக்கிறது, முற்றும் புரிந்து கொண்டுவிட்டால் அதனுடன் சமாதானம் மட்டுமே கொள்ள முடியும் விருப்பு வெறுப்பு ஏற்படுவதில்லை. அவன் சொன்னது யோசித்து பார்த்தவரை சரியென்றே பட்டது. இருந்த போதிலும், நமக்கு தெரியாத விஷயங்களை எண்ணிப் பார்க்கும் போது தெரிந்த விஷயங்கள் கடற்கரையில் ஒரு மணல் துளி அளவே இருக்கிறது. தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதின் மூலமாக தீர்க்க முடியும் என்பது இயலாத காரியம். அதணால் மனிதன் தனக்கு தெரியாதற்கெல்லாம் ஒரு பெயர் வைத்துவிட்டான். தனக்கு தெரியாததெல்லாம் ஒரு உருவத்திற்குள் அடைத்து அதற்க்கு கடவுள் என்று பெயர் வைத்துவிட்டான். காரணம் தெரியாமல் ஏதேனும் நடந்துவிட்டால் "கடவுள் செயல்", நமக்கு பிரச்சனைக்கு தீர்வு தெரியவில்லையென்றால் "அவன் இருக்கான் பாத்துப்பான்" என்கிறான்.

தெரியாதவைகள் மிகவும் பயமுறுத்துகின்றன சிலநேரம். வீட்டில் பெண் பிள்ளையோ, கடைகுட்டியோ நேரத்துக்கு வரவில்லை என்றால் "கடவுளே பத்திரமாக அழைத்து வந்துவிடு" என்று தெரியாததை வெண்டுகிறோம். பயமுறுத்திய தெரியாததே தான் பயம் போக்குவதாகவு ஆவதை காண்கிறோம். சில சமயம் தெரியாதது நமக்கு இருட்டாக தெரிகிறது. எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலையாக இருக்கிறது. ஆனால் சில சமயம் தெரியாததே ஒளிமயமாகவு தெரிகிறது. "தெரியாதது" எல்லா வகையான எதிர்மறை (paradoxical) குணங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. அதன் இருப்பு சத்தியாமாக கண்ணுக்கு தெரிந்தாலும், சில தெரியாதவர்கள் தெரியாததன் இருப்பை ஒப்புக் கொள்வதில்லை. எனக்கு தெரிந்தால் தான் ஒப்புக்கொள்வேன் என்பவர்கள்து வாதம் self contadicting என்பதை அறிவதில்லை. தெரியாததை நாங்கள் கடவுள் என்கிறோம், நீ எதை தெரிந்துக்கொண்டாலும் அது கடவுளாக இருக்க முடியாது. அப்பொழுது நாத்திக வாதம் சொத்தையாக படுகிறது.

ஆமாம், கடவுள் என்பது தெரியாத பொருளே தான். அதை உணர மட்டுமே இயலும், தெரிந்துக்கொள்ள முடியாது. இப்படி எல்லாம் யேசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நண்பன் ஒருவன் ஞாயபகம் வந்தது. அவன் தனக்கு தெரியாதற்கெல்லாம் "ஹிந்தி" என்று பெயர் வைத்திவிடுவான். வெள்ளைகாரர் ஆங்கிலத்தில் சொல்வது புரியவில்லை என்றால் கூட "இந்த ஆள் எப்படி ஹிந்தில பேசறார்னே புரியல" என்பான். என்ன செய்வது தெரிந்த விஷயங்களை நாம் படுத்துகிறோம், தெரியாதவைகள் நம்மை படுத்துகின்றன.

Friday, July 21, 2006

We need POTA

Three persons were arrested for their alleged invlovement in mumbai bomb blast. Hindu says this

"All the three were booked under Sections 302 (murder), 307 (attempted murder), 147 (rioting), 148 (rioting with deadly weapons), 149 (unlawful assembly) and 326 (grievous assault) of the Indian Penal Code along with related sections of the Explosive Substances Act, Indian Explosives Act and Indian Railways Act."

I don't know how easy for them to get bail and escape from clutches of punishment under these laws. If POTA was there they could have been easily arrested under POTA without any investigation. We are in such a situation, where we need such laws. Hope centrl goverment comes up again with strict laws to deal with terrorism and terrorists.

Anyways, it is party time for extremeists again in tamlnadu. An extremists named Madani who has been detained for various anti social activities including kovai bomb blasts, is being given ayurvedic treatment and might be released soon on humanitarian grounds by MK govt. I don't know how politicans think such acts can fetch them minority votes. It is not just they are putting us under terror, but also humilaiting minorities. God save India and Tamilnadu.

Sunday, July 16, 2006

Email from devaram yahoo group.

Recently I received this email from devaram yahoo groups to which I subscribe. People who beleive in temple culture and aagamas should read it. After reading what? I dunno?

----------------------------------------------------------------------------------
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
நாட்டுக்கு நல்லதல்ல
திருக்கோயில்களின் அர்ச்சகர்களாக அனைத்து ஜாதியினரும் நியமக்கப்படுவர் என்ற தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு இந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலயங்களின் அமைப்பு, நித்திய பூஜை விதிகள், உற்சவங்களை நடத்தும் முறைகள், பூஜை செய்வதற்குரியவர் தகுதிகள், பிராயச்சித்த விதிகள் ஆகிய அனைத்தினையும் வரையறுக்கும் சட்ட நூல்கள் சிவாகமங்களாகும். சிவபிரானின் திருவாக்காகிய 28 சிவாகமங்களின் படியே சிவாலய பூஜை நடைபெற்று வருவது தொன்மையான மரபாகும். சான்றாக, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சங்கரர் ஆலயம் காமிக ஆகம முறைப்படி பராமரிக்கப்படுகிறது. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோயிலின் சட்ட நூல் காரணாகமம். தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்குரியது காமிக ஆகமம். திருவீமிழலை ஆலயம் காரணாகம விதிப்படி பாதுகாக்கப்படுகிறது. ஆதி சைவப் பிராமணர்கள் அல்லது குருக்கள் அல்லது பட்டர் என்று அழைக்கப்படுவார் மட்டுமே கருவறையில் சென்று மூலவருக்கு அபிஷேக வழிபாடு செய்யத் தகுதியுடையவர் என்றும் பிற எவரும் அப்பணியைச் செய்யக் கூடாது என்றும் சிவாலய சட்ட நூல்களாகிய சிவாகமங்கள் விதிக்கின்றன. "முப்போதும் திருமேனி தீண்டுவார்" என்று ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் அச்சிவாசாரியப் பெருமக்களைப் போற்றுகிறார். சிவாகமங்களுக்கு விரோதமாக ஆதிசைவப் பெருமக்கள் தவிரப் பிறர் சென்று பூஜிக்க அந்த ஆகமங்கள் அனுமதிக்கவில்லை. சிவாகமங்களின் விதியை மீறி நடக்க முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
ஆதிசைவப் பிராமணர்களைத் தவிர வேறு பிராமணர்கள் கூடக் கருவறையுள் நுழைய முடியாது. சங்கராச்சாரிய சுவாமிகள் கூட சிவாலயக் கருவறையில் செல்ல, மூலவரைத் தொட்டு பூஜிக்க உரிமை கிடையாது. எண்ணற்ற சிவாலயங்களைத் தமது ஆளுகைக்குள் கொண்ட சைவ ஆதீனங்களாகியத் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆகியவற்றின் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானங்கள் கூட ஆதீனத் திருக்கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது. செல்லவும் மாட்டார்கள். பாரத நாட்டின் ஜனாதிபதியாக இருந்த திருமிகு.வெங்கட்ராமன் அவர்கள் (பிராமணராக இருப்பினும்) சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமான் பொன்னம்பலத்திற்குள் செல்ல வேண்டுமாயின் சட்டையைக் கழற்றி வருமாறு அவ்வாலய தீட்சிதர்களாகிய அர்ச்சகர்கள் வலியுறுத்திய நிகழ்ச்சி செய்தித்தாளில் வந்தது. ஆதீன மடாதிபதிகள் செல்லாத கருவறைக்குள் ஆதிசைவப் பிராமணரையன்றி மற்றவர்களை அனுமதிக்க முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயில் கட்டிய பெருமையுடைய ராஜராஜ சோழ மன்னர் ஆதிசைவப் பிராமணர்களையே பூஜகராக நியமித்து அவர்கள் வாழ்க்கைக்கு நிலமான்யம் செய்து கொடுத்துள்ளார். பராக்கிரம பாண்டிய மன்னர் கட்டிய தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயப் பூஜை பொறுப்பினை ஆதி சைவப் பிராமணர்களிடமே ஒப்படைத்தார். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சங்கரலிங்கப் பெருமான் திருக்கோயில் எழுப்பிய உக்கிரபாண்டிய மன்னர் பிரான் சிவாசாரிய பெருமக்களையே அர்ச்சகராக நியமித்து அவர்கள் ஜீவனாம்சமாக நிலபுலன்கள் எழுதி வைத்துள்ளார். இதைப் போலவே, நமது தமிழக மன்னர் பெருமக்களும் தாங்கள் கட்டிய ஆலய நித்திய பூஜை முறையினை சிவாகம சட்டப்படி சிவாச்சாரியார்களிடமே விட்டுள்ளனர். அந்த மன்னர்கள் யாருமே பிற சாதியினரை அர்ச்சகராக்கவில்லை. அவர்கள் பேணிப் பாதுகாத்த சிவாகமப் பாரம்பரியத்தை உடைத்தெறிய முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
தமிழக இந்து மக்களுக்கோ, இதைப் பற்றிய அக்கறை கிடையாது. பொறுமை, சகிப்புத்தன்மை, திருக்கோயில் பற்றிய அலட்சியப் போக்கு இவை தாம் தமிழக இந்து மக்களின் மறுபெயர். சாதி, சினிமா, அரசியல் ஆகியவற்றில் காட்டும் அளவுக்கு மீறிய ஈடுபாட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சமயங்களின் நிலை குறித்து அக்கறை காட்ட மாட்டார்கள். டென்மார்க் கார்ட்டூன் விஷயத்தில் கொதித்து எழுந்த இஸ்லாமிய சகோதரர்களைப் பார்த்து லட்சத்தில் ஒரு பங்கு கூட தங்கள் மதத்தில் அபிமானம் காட்ட மாட்டார்கள் இந்துக்கள். "தி டாவின்சி கோட்" திரைப்பட விஷயத்தில் கிறிஸ்தவர்கள் பொங்கி எழுந்த காட்சியாவது இந்துக்களை மாற்றுமா? வருஷத்திற்கு ஒரு முறை கொடை நடத்தி விடுவது, திருவிழாக்களுக்குச் சென்று உண்டியல் போட்டு விட்டுத் திரும்புவது இவற்றோடு ஆலயங்கள் பற்றிய சிந்தனை இந்து மக்களிடம் இருந்து விடை பெற்று விடும். எனவே இந்து மதத்தவர்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.
தமிழக அரசியல் கட்சிகள் இவ்விதத்தில் ஆலய பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்ற முன்வருமா? அது எப்படி வரும்? "மதச் சார்பற்ற தன்மை" என்ற கற்பின் உச்ச நிலையில் இந்துக்களைப் பொறுத்த வரையில், நிற்பவை அக்கட்சிகள். ஓட்டு வங்கியின் இருப்பினை அதிகரிக்கும் கட்டாயத்தில் உள்ள அவை இந்துக் கோயில்களின் பெருமை மிக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒருநாளும் முன்வரமாட்டாதவை. 'இந்துத்துவா' வை உயிராகக் காட்டும் கட்சி கூட இவ்விஷயத்தில் செயல்படும் விதம் வேடிக்கை கலந்த வேதனையைத் தருகிறது.
தமிழக இந்து அறநிலயத்துறை ஆட்சியின் கீழ்வரும் 30,000 திருக்கோயில்களில் சுமார் 100 ஆலயங்களில் பணியாற்றும் சிவாச்சாரியப் பெருமக்களுக்குத்தான் நல்ல வருமானம் கிடைக்கும். பிற ஆலய ஆதிசைவப் பிராமணர்கள் போதிய வருவாயின்றி வறுமையில் வாடுவது கண்கூடு. அந்த சொற்ப வருமானத்தையும் உதறி விட்டு ஓட ஓட விரட்டுவது நாட்டுக்கு நல்லதா? ஒரு ஆலயத்தில் 20 பணியாளர்கள் வேலை பார்த்தால் அதில் 2 பேர் தான் சிவாச்சாரியப் பிராமணர்களாக இருப்பர். மீதியுள்ள 18 பேரும் பிறசாதியர் தான். ஓதுவார் மணியம், கணக்கர், பலவேலை, மேளம், காவல், துப்புரவாளர் ஆகிய பிற பணியாளர்கள் பிராமணரல்லாதவரே. எனவே 2 பேரை விரட்டுவதைத் தவிர்த்துப் பிற 18 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாதா? 30,000 ஆலயங்களில் பணியாற்றும் ஆதி சைவர்கள் சொற்பமே. அர்ச்சகர் தவிர பிற ஊழியர்கள் அனைவரும் பிராமணரல்லாத பிறசாதியினரே. எனவே ஆதிசைவப் பிராமணர்களைப் பழி வாங்குவதை விட்டு விட்டு ஒட்டுமொத்தமாக ஆலய அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் உயர்ந்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தீர்மானித்தால் அது நாட்டுக்கு நல்லது.
ஆலய பூஜை முதலியவற்றில் நிகழும் தவறுகள் நாட்டினையே பாதிக்கும் எனப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திரு மூல நாயனார் தமது திருமந்திரத்தில் அருளிச் செய்துள்ளார். அதில் ஒரு திருமந்திரம் இதோ.
"முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே"
எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை விட்டுவிட்டுத் தமிழக ஆலயங்களில் பணியாற்றும் ஏழை சிவாச்சாரியார்களையும், எண்ணற்ற பிறசாதி ஆலயப் பணியாளர்களையும் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்துதவுமாறு வேண்டுகிறோம்.
இவண்
மா.பட்டமுத்து M.Sc., B.T.,
அமைப்பாளர்,
ஸ்ரீ கோமதி அம்பிகை மாதர் சங்கம், சங்கரன்கோவில்.
திருமந்திர வழிபாட்டு மன்றம், சங்கரன்கோவில்,
ஸ்ரீ திருநாவுக்கரசர் சுவாமிகள் உழவாரக் குழு, விக்கிரமசிங்கபுரம்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்குழாம், கரிவலம்வந்தநல்லூர்
ஸ்ரீ மங்கையர்க்கரசி மாதர் மன்றம், ஸ்ரீ வில்லிபுத்தூர்
ஸ்ரீ மாசிலாமணியீஸ்வரர் உழவார நற்பணிமன்ற்ம்,
வடதிருமுல்லைவாயில், சென்னை

Wednesday, July 12, 2006

Defeating terrorism..

When US news channels and BBC visited bomb hit railway station, all they got to say was"everything is normal". I was like "What else you expect in this part of the world?".
Terrorists want to strike terror in the minds of people and time and again they miserably fail. I accept our governments are always spineless when dealing with extremists. But our public know exactly how to tackle them. Each year terrorists issue warnings to those visit vaishnodevi shrine but they could not stop lakhs of people thronging the shrine.

When terrorists abducted an Indian flight to kandahar, during vajpayee's regime our defense minister went and negotiated with them. That was a national shame to me. Anyway, that flight carried a very high profile Swiss personality who prints currencies for so many nations (including USA). After the flight was released he had to say something like this "I have never seen more matured people than Indians, no one feared death and were very normal, I learnt a very important lesson from them.".
Probably every western country might learn this same lesson.

Anyway, I afraid our mentality of aping west will take away this sterling quality of ours in near future. After reading this blog about media coverage of this incident, I felt media has already started dramatising events as the do it here in west.

Monday, July 10, 2006

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரு

சம்சப்தகர்கள் என்பவர்கள் அர்ஜுனனுடன் போரிட்டு கொல்வது அல்லது வீரமரணம் அடைவது என்று சபதம் செய்து அர்ஜுனனை பதிமூன்றாம் நாள் யுத்ததில், யுத்தகள்த்திலிருந்து வெகு தூரம் இழுத்து சென்றுவிட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களை கொன்று பாசறைக்கு திரும்பும் போது பாசறையே மிகவும் அமைதியாக இருந்தது. அனைவரும் துக்கதுடன் இருந்தார்கள். மெதுவாக தர்மபுத்திரர் அபிமன்யு இறந்துவிட்ட விவரத்தை தெரிவித்தார். பத்மவ்யூகத்தில் அபிமன்யு மட்டும் தனித்தி விடப்பட்டதும், ஜயத்ரதன் மற்றவர்களை வ்யூகத்தின் வாயிலிலேயே நிறக வைத்ததால் யாரும் அவனுக்கு உதவியாக பிந்தொடர்ந்து செல்ல இயலாத நிலையில் கவுரவர்கள் கயமையால் அவனை கொண்றுவிட்டார்கள் என்று தெரிவித்தார். அந்நிலையில் துக்கம் தாங்க இயலாத சகோதரர்கள் அனைவரயும் ஏசினான், அழுது புரண்டான். அர்ஜுனன் ஒரு பெரும் சபதம் செய்தான் "நாளை சூரிய அஸ்தமனதிற்குள் ஜயத்ரதனை நான் கொல்லாவிட்டால் தீக்குளிப்பேன்" என்று சபதம் செய்கிறான்.

மறுநாள், கவுரவர்கள் ஜயத்ரதனை போர்களத்திலிருந்து ஒளித்து வைத்துவிடுகிறார்கள். கிருஷ்ணர் சூரிய அஸ்தமனம் நெருங்கி வரும் வேளையில் தனது சக்கிரத்தால் சூரியனை மறைத்து விடுகிறார். எல்லோரும் சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டது என்று மகிழ்கிறார்கள். அர்ஜுனன் திக்குளிக்க தீ வளர்க்கிறான். அக்காட்சியை காண ஜயத்ரதன் அங்கே வருகிறான். கிருஷ்ணர் உடனே தனது சக்கரத்தை விலக்கி கொள்ள, சூரியன் வெளிவருகிறான். அர்ஜுனன் உடனடியாக அம்பை எய்தி ஜயத்ரதனை கொல்கிறான்.

பாசறைக்கு திரும்பிய உடனே கிருஷ்ணர் அர்ஜுனனை கோபிக்கிறார். "உணர்ச்சி வசப்பட்டு எல்லோருக்கும் சிக்கலை உண்டாக்க பார்த்தாயே, போர்கள்த்திலே இறந்து போகிறவர்களை நினைத்து வருந்தக்கூடாது, கடமையை செய் பலனை எதிர்ப்பார்காதே என்று நான் சொன்னதை மறந்து விட்டாயா?" என்றார். அர்ஜுனன் "க்ருஷ்ணா சொல்லுதல் யார்க்கு எளிது, ஆனால் சொல்லிய வண்ணம் நடப்பது மிகவும் கஷ்டம், புத்ர சோகத்தை பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ? இன்னமும் என் நெஞ்சு எரிந்து கொண்டுதான் இருக்கிறது." என்றான். கிருஷ்ணர் அவவை தனிமையில் விட்டு விட எண்ணி விலக முற்படும் போது அர்ஜுனன் திடிரென்று நினைவு வந்தவனாக "க்ருஷ்ணா, இவ்வள்வு நாளாக நீ எங்களுடன் நின்று எதிரிகளை கொல்வதற்க்கு எவ்வளவோ உதவிகள் செய்கிறாய். ஆனால் உன்னுடைய சேனையும், உன் மகன்களும் கூட துரியோதனன் பக்கம் நின்று சண்டை போடுகின்றன. உன் மகன்கள் எல்லாம் என்ன ஆனார்கள், எப்படி சண்டையிடுகின்றனர்?" என்று கேட்டான். கிருஷ்னர் "அர்ஜுனா இன்று உன் மகன் இறந்த துக்கம் தாங்காமல், நீ ஜயத்ரதனை போர்கள்த்திலே தேடுவதற்காக ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தாய். நானும் அதற்க்கு உதவியாக ஆலோசனை கூறிக்கொண்டு உன் தேரை ஓட்டினேன். அவ்வாறு நீ என் மகன்களில் ஓரிருவரை தவிர எல்லோருக்கும் வீர சுவர்கம் கொடுத்துவிட்டாய். இந்த சண்டை முடியும் போது எனக்கு மகன்களே இல்லாமல் கூட போகலாம். ஆனால் நான் துக்கிப்பதில்லை. உண்மையில் யாரும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை என்று உனக்கு உபதேசம் செய்ததை மறந்துவிட்டாயா?" என்றான். அர்ஜுனன் "க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரு" என்று காலில் விழுந்து பணிந்தான்.

*உண்மையில் கிருஷ்ணரின் மகன்களை யார் எப்பொழுது கொன்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் மகன்கள் எல்லாம் இறந்த நிலையில் க்ருஷ்ணர் துக்கிக்கவில்லை என்று தெரியும்.