People I know

Sunday, October 29, 2006

மழை ஏன் பெய்கிறது?

எவ்வளவோ ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தாலும் மழை ஏன் ஒரு இடத்தில் பெய்கிறது அல்லது பெய்வதில்லை என்பதை மனிதர்களால் அறிய முடியவில்லை. மழை எப்படி பெய்கிறது என்பதை வள்ளுவனுக்கு முன்பே நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. ஆனால் திடீரென்று ஒரு இடத்தில் மாதக்கண்க்கில் மழையின்றி இருப்பதற்க்கும் திடீரென்று கரை கம்மாயெல்லாம் கரைப்புரண்டு ஓடும் அளவும் மழை பொழிவதற்க்கும் உண்டான காரணிகளை கணிக்க முடியாமல், மனிதனின் விஞ்ஞான ஆறிவு இயற்கையிடம் தோற்று நிற்கிறது. இது மட்டும் சரியாக தெரிந்தால் மழைக்கு கூட "time table" போட்டு விடுவோம் என்பதால் இறைவன் சில விஷயங்களை இரகசியமாகவே வைத்திருக்கிறான் போலும்.

வள்ளுவனிடம் கேட்டால் கற்புக்கரசிகள் சொன்னால் மழை பெய்யும் என்பான். வேதியர்கள் தாங்கள் செய்யும் காயத்ரி ஜபத்தினாலேயே மழை பெய்யும் என்பார்கள். வருண ஜபம் என்ற மந்திரத்தை தூய்மையான அந்தனர்கள் ஜபித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை அரசர்களிடம் வேரோடிருந்த்தாக கேள்விபட்டிருக்கிறேன். போன நூற்றாண்டின் முற்பகுதியில் கூட தென்மாவட்டங்களின் சமஸ்தானங்களில் (அவையெல்லாம் வானம் பார்த்த பூமியன்றோ?), வறட்சி காலத்தில் வருண ஜபம் செய்ய அந்தணர்கள் அழைக்கப் படுவார்கள் என்றும், அவர்கள் ஜபித்து மழை வரவில்லையென்றால் முள்ளின் மீது நின்றுக்கொண்டு கால்களில் இரத்தம் சொட்ட சொட்ட மழை வரும் வரை ஜபிப்பர் என்றெல்லாம் என் நண்பனின் பாட்டி சொன்னதுடன், அவள் கணவரும் அவ்வாறு ஜபிப்பதற்க்கு அழைக்கப்படும் ஒரு வேதவித்து என்று கூறியிருக்கிறாள். விஞ்ஞானமோ மூடநம்பிக்கையோ, எப்படியாவது மழை வந்தால் சரி என்பதே என் கருத்து.

மழைமேகங்கள் தோன்றும் போதெல்லாம் அதை ஒரு பேரதியசயமாக கருதி கற்பனையில் மிதந்து விடுகிறேன். அன்று கூட அதே மயக்கம் தான். இரண்டு தினம் கழித்து சென்னையில் நடந்த ஒரு interview விற்க்கு போகவேண்டியிருந்தது. ஆனால் எப்பொழுதும் போல reserve எல்லாம் செய்யாமல் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

ஆனால் அன்று பார்த்து மழை பலமாக பெய்துக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்த்து சென்னைக்கு தான் ஐந்து நிமிடத்திற்கு ஒரு வண்டி இருக்கிறதே ஏதெனும் ஒன்றில் தொற்றிக்கொண்டு விடலாம் என்று தெனாவெட்டு வேறு என்னை யாதொரு கவலையும் இல்லாமல் மேலே சொன்ன மழை ஏன் பெய்கிறது என்ற அதி முக்கியமான ஆராய்ச்சியில் தள்ளிவிட்டிருந்தது. நிதானமாக சாப்பிட்டு இதையே யோசித்துக்கொண்டே ஒரு வழியாக பெரியார் bus stand ஒன்பது மணி போல சென்று சேர்ந்தேன்.

என் கெட்ட நேரம் அன்று ஏதோ முகூர்த்த நாளோ அல்லது பண்டிகையோ (தீபாவளியோ) சரியாக நினைவில்லை, ஆனால் எல்லா வண்டியும் full. சாதாரணமாக இப்படி வந்து நிற்கும் பயணிக்கு ராஜ மரியாதை குடுக்கும் omni bus காரர்கள் என்னை சீந்தக் கூட இல்லை. சிறிது நேரம் கழித்து ஒரு agent ஒருவன் "Madras போனுமா. இப்படி வாங்க" என்று அழத்து போனான். ஏதோ ஒரு பேர் தெரியாத omni காரர்க்ளிடம் இட்டு சென்றான். Bus எதுவும் கண்ணுக்கு தென்படவில்லை ஆனால் ticket போட்டுக்கொண்டிருந்தார்கள் ("230 எடுங்க. ஆமா அம்பது ரூபா extra தான், last minute ல சீட்டு தரோம் இல்ல"). ரொம்ப தூரம் நடந்தே அழைத்து சென்று ஒரு bus குள் விட்டான்.

அந்த வண்டியை பார்த்து அதிர்ந்து விட்டேன். மிக பழசாகயிருந்தது மட்டுமில்லாமல் மழை வேரு உள்ளெ ஒழுகிக்கொண்டிருந்தது. அந்த வண்டி முழுவதும் வடநாட்டவர்கள் இருந்தார்கள். என்னை இன்னும் ஒன்றிரண்டு இளிச்சவாய் தமிழர்களை பிடித்து போட்டு கொண்டிருந்தான் அந்த Agent. வண்டி ஒரு மணி நேரம் (10:30 மணிக்கு) கழித்து எடுத்தார்கள். எனக்கு தெரிந்த "ek gawn mein" ஹிந்தியில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கணவன் மனைவியிடம் விசாரித்த வகையில் வண்டியில் இருக்கும் வடநாட்டுக் கோஷ்டியை ஏமாற்றி 500 ரூபாய்க்கு டிக்கெட் போட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக் கொண்டேன். இந்தக் கூட்டம் ஏற்கனவே வேறொரு டுபாக்கூர் பார்ட்டியிடம் அதிக விலைக்க்கு கன்யாகுமாரியோ கொடைகானலோ போயிருக்கிறார்கன் என்பது தெரிந்தது.

ஒரு பதினைந்து நிமிடம் சென்றிருக்கும், வண்டி மேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒருவன் ஹிந்தியில் சத்தமாக கத்த ஆரம்பித்தான். உண்மையில் அவன் மனைவியுடன் சேர்ந்து இராமேஸ்வரம் செல்ல வேண்டியவன். பணத்திற்கு ஆசைப்பட்டு அவனை 1000 ரூபாய்க்கு ஏமாற்றியிருக்கிறார்கள். அவன் பணம் திரும்ப கேட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டான். அவனுக்கு மீண்டும் பெரியார் bus stand போகவும் தெரியாது (மதுரையில் எப்பொழுது 5,6 bus stand கள் யிருக்கும், எனக்கே எந்த ஊருக்கு எந்த பஸ் ஸ்டாண்ட் என்று தெரியாது!). அது போக அவனுக்கு பணத்தை திரும்ப தரும் அதிகாரம் கண்டக்டருக்கு இல்லை என்றும் பஸ் ஸ்டாண்ட் சென்று கம்பெனியில் கேட்டுக் கொள்ளக் சொல்லிக் கொண்டிருந்தார்கள். (companyயே டுபாக்கூர், இதில் policy மயிறு வேற என்று எண்ணிக்கொண்டேன்). அவனை நட்ட நடு ரோட்டில் இறக்கி விட்டு விட்டார்கள்.

வண்டி லொட லொட என்று ஒடிக்கொண்டிருந்தது. கொட்டாம்பட்டி அருகே நான் நினைத்தது நடந்தே விட்டது. Bus Break down. இந்த வடக்கத்தியினர் கொந்தளித்து விட்டனர். என்னை போன்ற அப்பாவிகள் மற்றும் எங்கள் ஹிந்தியின் புண்ணியத்தால் அவர்கள் ஏமாற்றப்பட்டதை வேறு தெரிந்துக்கொண்டு விட்டார்கள். நானும் மிகுந்த கோபமடைந்து விட்டேன். பஸ் காரர்களிடம் சென்று எனக்கு நாளைக்கே interview இருக்கிறது என்றும் வண்டி சரியான நேரத்தில் போகவில்லை என்றால் police க்கு போவேனென்றும் கத்தினேன். conductor கண் காட்டவும் இரண்டு தடியர்கள் driver பக்கதிலிருந்து எட்டிப் பார்த்து "என்ன அங்க soundu" என்று கரகரப்பாக கேக்கவும் வடிவேலு பாணியில் சீட்டுக்கே திரும்பினேன்.
என் அருகில் இருந்த சேட் தம்பதிகள் கேட்டதால் அவர்களுக்கு நடந்ததை சொன்னேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ செய்து வண்டியை மீண்டும் எடுத்து விட்டார்கள்.

வண்டி திருச்சியை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. மீண்டும் விஷேஷமான முனங்கல்கள் செய்துவிட்டு நின்று விட்டது. மீண்டு அதே சண்டை. ஆனால் இம்முறை வண்டியை எடுக்க முடியவில்லை. சாலை எல்லாம் மழை வேறு நச நச என்று பெய்துக்கொண்டிருந்தது. பஸ்காரன் இனி வண்டியை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டான். கூட்டத்தார் அவர்களை கொன்று விடுவார்கள் போல இருந்ததால் அவர்கள் பயந்துக்கொண்டு வேறு வண்டியில் ஏற்றிவிடுவதாக சொல்லி போகும் வண்டிகளை நிற்த்த் முயற்ச்சி செய்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஏற்கனவே எல்லா வண்டியும் full ஆக ஓடிக்கொண்டிருந்ததால் யாரும் நிற்கவில்லை. (இவர்கள் fraud கம்பெனி என்பதாலும் கூட இருக்கலாம்).

கொஞ்ச நேரத்தில் ஒரு வண்டிகாரன் நிறுத்தி கொஞ்சம் சீட்டு இருப்பதாக கூறினான். கூட்டத்தில் ஒரு சாரார் முந்திக்கொண்டு ஓடினர், நானும் தான். ஆப்பொழுது என் அருகில் அமர்ந்திருந்த பெண்மனி பெரும் குரலெடுத்து அவர்களை திட்டினாள். எனக்கு interview இருக்கிறது என்றும், அவர்கள் முதலில் எனக்கு ஒரு சீட் பிடித்துக் கொடுத்தே அவர்கள் போக வேண்டும் என்று கூறினாள். அவர்கள் ஏற்றுக்கொண்டு முதலில் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் சொன்னது பொய் என்றும் வயதான வேறு யாரேனும் செல்லலாம் என்று கூறி விட வேண்டும் என்று தோன்றினாலும் அந்த சூழ்நிலையில் அது சரியாக இருக்காது என்பதால் வெட்கம் பிடுங்கி தின்ன முதல் ஆளாக பேருந்தில் அமர்ந்தேன்.

வள்ளுவன் சொல்லிவிட்டான் என்று "பொய்மையும் வாய்மை இடத்து" என்று கூட பொய சொல்லகூடாது, தெரியாமல் தொட்டாலும் தீ சுடவே செய்யும், மனசறிந்து சொல்லும் பொய் நெஞ்சை எரிக்கும் தீ என்று உணர்ந்தேன். இவ்வாறு வள்ளுவனை நினைத்த நேரத்தில் தான் ஏன் அன்று மட்டும் வழி முழுக்க மழை பெய்த்தது என்ற என் முந்தை சிந்தனைக்கு அவன் விடை அளித்திருப்பது தெரிந்தது.

வந்த இடத்தில் தமிழர்களால் பல வகையிலும் ஏமாற்றப்பட்டு சொல்லொணா துயர் அனுபவித்து கொண்டிருந்த அந்த மக்கள் இவ்வளவு பெரிய மனதை கொண்டிருக்கிறார்கள். தன் கஷ்டத்தை மீறி பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் எனக்கு இல்லையே என்று வெட்கமாக இருந்தது. "நல்லார் ஒருவர் உளரேல அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்றானே வள்ளுவன். அவர்களால் தான் அந்த நாளில் என்றுமில்லாத திருநாளாய் வழியெங்கும் வருணன் களியாட்டம் புரிந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன்.

15 Comments:

 • Hi

  I too have experienced this line many times. How true this is "Nallar oruvar ularel avar poruttu ellorkum peyyum malai"...

  Hemapriya

  By Anonymous Anonymous, at 7:05 AM  

 • pb..
  pichuteenga ponga!!!

  u know what,,, el pasola ore mazhai ..adhuvum 100yearskku aprom ivlo mazhaiyaam.. makkalukku reasone puriyala.. ellarum "priya this is not the real el paso"apdinnu solraanga..

  avangalukku theriyala that naan vandhadhunaalannu :)-

  By Blogger Priya, at 1:13 AM  

 • Pb

  Sooper PB, nicely written

  By Blogger Kay, at 2:01 AM  

 • PB
  Well said. When we feel that there is no real explanation to what is happening, we normally miss the obvious.

  Aana engae oorila konjam mazhai vandha podhum, vellam karai(?) purandodum.. Engae koovampattila nallavangae romba jaasthiayitaaga pola irukku - Oru 4 naal mazhaila irukkira infrastructure ellam pitchikittu pochu.

  By Anonymous VjSh, at 9:05 AM  

 • Vjsh,
  NAllavanga irukira oorla madham 3 tharam mazhai peium..mathapadi ennikavathu penju vella kaadu aachu na etho kolaru..Anyway nallavangala mazhai peium nu ninaichu niraya peru nallavangala iruntha nallathu thaane.

  By Blogger Muthukumar Puranam, at 8:48 AM  

 • hmm .. ippadi kaanja nilama pochey un blog :( .. sari intha ennala mudinja onnu .. Very good ra .. keep it coming ra ..

  Vasu

  By Anonymous Anonymous, at 9:50 AM  

 • Sorry for the off-topic post.

  Did you live in Thirunagar, Madurai at any time ?

  Guha

  By Anonymous Anonymous, at 1:03 AM  

 • #guha
  ilai nanba..u might have seen me there. But I dont belong to tirunagar.

  By Blogger Muthukumar Puranam, at 1:05 AM  

 • enna.... pb ?

  enakudhaan internet vela seiyala.. ungalukku enna aachu ?

  By Blogger Priya, at 2:35 PM  

 • Pb eppo tamil naa kattukuporen eppo naa vonga blog padikaporen..... please post some blogs in english

  By Blogger Kishore Reddy, at 1:28 AM  

 • pb..
  en ungal karuthu kalanjiyathula release pannala innum ??

  By Blogger Priya, at 4:07 PM  

 • priya,
  en karuthu kekka arva padurathuku aal iruka..seekiram poda pakkaren ethavathu.

  By Blogger Muthukumar Puranam, at 8:20 PM  

 • UK la peiyum mazhaiyavida "ganamaa" irukku indha post!

  By Anonymous Gomathy, at 1:07 PM  

 • Narration is really good friend...

  By Blogger Shankar, at 5:35 PM  

 • vayalukku iraiththa neer vaaikaal vazhioodi
  pullukkum aange pusiyumaam;
  thollulakil, nallor oruvar ularel
  avar poruttu ulakelam peiyum mazhai.

  When a field is irrigated, water runs along the bunds and nourishes the grass too; likewise, the existense of a nobel person ensures rain for the rest of the world.

  Not thirukural, Sir!
  anbudan nanban.

  By Anonymous Anonymous, at 4:52 PM  

Post a Comment

<< Home