People I know

Monday, May 08, 2006

நான் இறந்து போனவன்!!

உலகத்திலேயே மகிழ்ச்சியான் மனிதன் ஒருவன் இருந்தான். அவன் மிக நல்லவன் ஆதலின் அழைக்க்கும் போதெல்லாம் கடவுள் தோண்றி அவனுடன் பேசுவார். அவன் உலகத்திலிருந்து தனித்திருந்தான். ஒரு நாள் ஆசைப்பட்டு உலகத்தாருடன் உறவு வைத்தான். உலகம் கவலைகளின் கூடாரமாக இருப்பதை கண்டான். நண்பர்களும் பகைவர்களும் துன்பத்தில் வாடுவதை கண்டு வாடினான். அவர்கள் துக்கமெல்லாம் தொலை தூரம் போக வேண்டி இறைவனை அழைத்தான்.

கடவுள்: "எம்மை அழைத்த காரணம் யாது?"

அவன்: "எமது நண்பர்களும் பகைவர்களும் துன்பத்தில் வாடுகின்றனர். அதற்க்கு காரணம் என்ன?"

கடவுள்: "நீ தான்"

அவன்: "நானா?"

கடவுள்: "ஆமாம், அவர்கள் கவலையை பார்த்து நீ வருந்த வேண்டும் என்பது உன் கர்ம வினை, நீ அதை அனுபவிக்க வேண்டும் என்றே அவர்கள் துன்புறுகின்றனர்."

அவன்: "கடவுளே, அப்படி என்றால் அவர்கள் துன்பம் தீர வழி?"

கடவுள்: "நீ இறந்து விடு"

அவன்: "சரி நான் இறந்து விடுகிறேன். எங்கும் ஆனந்தம் தங்கியிருக்கட்டும்".

கடவுள்: "அப்படியே ஆகட்டும்"

என்று சொல்லி மறைந்தார். தானும் இறந்து உலகை ஆனந்தமாக்கினான்.

இதை படித்து அவரவருக்கு புரிந்தவாறு எடுத்துக் கொள்ள வேண்டியது.

Wednesday, May 03, 2006

ஒரே கல்லுல

அப்போ தான் அந்த பஸ், திருநெல்வேலி to மெட்ராஸ் வண்டி, மதுரையில் நின்று விட்டு கிளம்பிக் கொண்டிருந்தது. ஓடி வந்து running ல் ஏறினார் அவர். நாற்பது, நாற்பத்தைந்து வயதிருக்கும், இந்த வயசுக்கு இந்த சேட்டை எல்லாம் கொங்சம் ஓவராகவே பட்டது எனக்கு. அதுவும் underwear தெரிய வேட்டியை ஏற்றிக் கட்டிக்கொண்டிருந்தார். கையில் ஒரு மஞ்சள் பை, மதுரை நல்லி குப்புசாமி செட்டியார் குடுத்துவிட்டிருந்தார். அவசரத்திலும் லாலா மிட்டாய் கடையில் மறக்காமல் ஏதோ எண்ணை பலகாரம் வாங்கி பையில் போட்டிருந்தார்.

நேராக என் சீட்டுக்கு வந்து "தம்பி கொஞ்சம் தள்ளி உக்காரீகளா?" என்று உரிமையோடு எல்லை தாண்டிய பயங்கரவாத்தை தொடங்கினார்."மிச்சர் எடுத்துக்கொங்க தம்பி" என்று நீட்டினார்."night 10 மணிக்கு மிச்சரா? அதுவும் எண்ணை சொட்டுது,யோவ் நீ சாப்பிடு ஆனா உன் வேட்டில தொடச்சிக்க, என் மேல கைய வெச்ச தொலச்சிருவேன்னு" நினைத்துக்கொண்டே "இல்லண்ணே நீங்க சாப்பிடுங்க" என்றேன். பேச்சை cut பண்ண அப்படியே தூங்க தொடங்கினேன்.


கொஞ்ச நேரத்தில் பயங்கரமான குறட்டை சத்தம், Engine கோளாறோ என்று நினைத்து விழித்து எழுந்தேன். பஸ் மேலூரில் நின்றுக்கொண்டிருந்தது. என் மேல சாய்ந்து தூங்க தொடங்கியிருந்தார். லேசாக உசுப்பி எழுப்பினேன். "என்னண்ணே madras தான் போரிங்களா?, "ஆமா தம்பி, பையன engineering college ல சேக்கனும், பணம் எடுத்துகிட்டு வா, எதோ DD எடுத்து கட்டணும்னு சொன்ன்னான், அதான் போய்கிருக்கேன்." என்றார். "கையில பணம் வெச்சிகிட்டு தூங்கரிங்களே, காலம் கெட்டு கிடக்கில்ல" என்றேன்.

"முன்னாடி பாருங்க, முத seatla, ஒரு போலீஸ்கார அம்மா ஒகாந்து இருக்கா, அது பக்கத்தில ஒக்காந்து இருக்கிற பொம்பளைய பாருங்க, முழியே சரியில்ல, எனக்கு என்னமோ இந்த ரெண்டு பேரும் சேந்து களவாணித்தனம் பண்ணுவாங்களோன்னு இருக்கு, நீங்க என்ன சொல்ரீங்க", என்றேன். "என்ன தம்பி இப்பிடி சொல்றீக, காலம் அவ்ளோ மோசமில்லப்பா, அப்டி எல்லாம் இருக்காது" என்று திரும்ப தூங்க முயன்றார்.

அவரை உசுப்பினேன் "பாருங்க அந்த முத சீட்டு பொம்பள அவளுக்கு பின் சீட்டுல இருக்கிற ஆள தூக்கதிலேந்து எழ்ப்பி biscuit குடுக்கிறா, அந்த ஆளும் வாங்கி திங்கிறான், அடப்பாவி அவ பக்கத்தில இருக்க பிள்ளைக்கு கூட குடுக்கிறானே, புரிஞ்சு போச்சு அந்த பொம்பள biscuit ல மயக்க மருந்து கலந்திருக்கும், நீங்க வேணா பாருங்க அவன் கொஞ்ச நேரத்தில மயங்கி தூங்க போறான், அந்த பொம்பள எதுனா திருட போகுது அந்த ஆள் கிட்ட" என்றேன். அவரும் வாயை பிள்ந்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்.
பஸ் திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது.

அந்த ஆள் நான் சொன்ன மாதிரியே மயங்கி தூங்க தொடங்கிநிருந்தான். இந்த பொம்பளை நைசாக திரும்பி அந்த ஆள் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தாள், கொஞ்சம் பணத்தை பெண் போலீஸுக்கும் கொடுத்தாள். மீண்டும் திரும்பி அந்த ஆளின் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்திலிருந்த செயினை கூட கழட்டி கொண்டாள். இருவரும் திருச்சி பஸ் நிலையத்தில் இறங்கி சென்றனர். இவ்வளவும் பார்த்த பக்கத்து சீட்டு ஆசாமி சென்னை வரும் வரை தூங்கவேயில்லை பயந்து போய்விட்டிருந்தான். நான் நன்றாக தூங்கிக்கொண்டு வந்தேன்.


நல்லவேளை அந்த ஆள் கொஞ்சம் லேட்டாக வந்து பஸ் ஏறினார். இல்லாவிட்டால் திருச்சியில் இறங்கிய பெண்கள் இருவரும் அக்காள் (போலீஸ்) தங்கை என்பதோ, பின்னால் உட்கார்ந்திருந்தது தங்கையின் கணவர் மற்றும் அவள் குழந்தை என்பதோ, திருச்சியில் இருக்கும் போலீஸ் அக்காள் வீட்டுக்கு தங்கை போகிறாள் என்பதோ, அக்காள் முதலில் எல்லோருக்கும் சேர்த்தி ticket எடுத்தாள் என்பதோ, அந்த பணத்தை இறங்கும் போது purseல் இருந்து கணவன் ("தூங்கிட்டா என்னை எழுப்பாம எடு !") எடுத்துக்க சொன்னதோ, நான் இதற்க்கு முன்பு கணவனின் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து வந்தேன் என்பதோ, அதுவரை தங்கையின் மடியில் (தன் செயினை குழந்தைக்கு போட்டுவிட்டாள் அப்போது) அமர்ந்திருந்த குழந்தை தூங்கி போனதால் என்னை பின்னால் உட்கார வைத்துவிட்டு குழந்தையை அங்கே தூங்க பண்ணினார்கள் என்பதோ தெரியாமல் ஒரு பயத்துடன் மஞ்ச பையை கெட்டியாக் பிடித்துக்கொண்டு பேசாமல் வந்து சேர்ந்தார்.