People I know

Monday, November 14, 2005

மழை!

மழையே! நீ கடவுளின் இருப்பை சத்தமாக அறிவிக்கிறாய். கடவுளின் அருளை போல ஊருக்கெல்லாம் பொதுவானவன் நீ!. ஆனாலும் உன்னை யாரும் சொந்தம் கொண்டாட முடிவத்தில்லை. ஆனாலும் உன் அழகு அனைவருக்கும் சொந்தம். உன் கருணையில் நான் மனம் கரைந்து கொண்டிருக்கும் வேளையில் எனக்கு தேவையான நீரை எங்கள் வீட்டு கிணற்றில் கொட்டி விடுகிறாய். நீர்நிலை தூர்வாரி நன்கு பராமரிக்க பட்டால் நீர் அதிகமாக கிடைக்கிறது. ஆழமில்லா கிணறுகள் உன்னால் பயனடைவது இல்லை. உன் கருணையை நான் பெறாமைக்கு நானே காரணம்(?), என்பதை பறைசாற்றுகிறாய். கரை கட்டி கொண்டிருக்கும் அனைத்து நீர் நிலைகளூம் உன் கருணையின் சிறு பகுதியையே பெறுகின்றன. கரையில்லா கடலோ மழையை மொத்தமாக பெறுகிறது.

கரையில்லா மனம், கறையில்லா மனம். அருளை மொத்தமாக அடையும் மனம்.
மனத்திலே வஞ்சகம் இருந்தால் அம்பிகையை அடையமுடியாது, ஆகையால் அவளை அடைய முடியாமைக்கு காரணம் நமது மனதில் குடியிருக்கும் வஞ்சமே என்கிறது ஒரு அபிராமி அந்தாதி பாடல்.

உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை,
ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை,
தயங்கு நுண்ணூல்
இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும்
படையா வண்ணம் பார்த்திருமே!!

"இடையிலே செம்பட்டு உடுத்தி, சடையிலே மதி சூடி, நூலும் தயங்கும் இடையுடன் கூடிய, ஈசனின் இடப்பாகம் அமர்ந்த எங்கள் அம்மை வஞ்சகர் நெஞ்சு அடையா தன்மையள். அவள் இனி என்னை படைக்க மாட்டாள். நீங்களும் அவளருளை நாடி வஞ்சகம் நீக்கி இனி பிறவா நிலை அடையுங்கள்".


இந்த உண்மையை உலகுக்கு உரக்க உரைக்கும் வகையில் நீ விளங்குகிறாய். ஆகையால், வருணனே! த்வமேவ ப்ரத்யஷம் ப்ரஹ்மாஸி. நான் உன்னை வணங்குகிறேன். எங்களை காப்பாற்றும்.

2 Comments:

  • mikka nandru. But, "people I know"? If it is okay, change that title and maintain the wide scope of your writing.
    anbudan lana.

    By Anonymous Anonymous, at 6:32 PM  

  • Dei lakshmi,
    when I started blogging I wanted to write only about people..later it deviated from the original idea..will write about people also.

    By Blogger P B, at 10:45 AM  

Post a Comment

<< Home