Sex on the Beach ம் அசட்டு அம்பியும்
அப்பொழுது தெருக்காளில் குடிமகன்கள் போதையில் வேட்டி இல்லாமல் தெருவில் அலங்கோலமாய் கிடந்த காட்சிகள் என் மனதில் குடிபவர்கள் மீது மாபெரும் வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் ஒரு சில நகைச்சுவை காட்சிகளும் கண்டு களித்ததுண்டு. உதாரணத்திற்கு ஒருவர் தெருவில் இருந்த கோழியை பார்த்து தனது வேட்டியை கழட்டி அகல விரித்துக் கொண்டு "டேய், சரியான கோலிடா நீ" என்று பேசிக்கொண்டிருந்தது, ஒருவர் கடும் போதையில் "repair" ஆகி நின்று கொண்டிருந்த "Road Roller" ஐ தள்ள மற்றொரு ஆள் அவருக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு அவரை தள்ள இரண்டு பேரும் சக்கரத்தில் மோதி தரையில் கிடந்தது, அவ்வப்பொழுது சாக்கடையில் விழுந்துவிடும் குடிகாரர்கள் வெளியில் வராமாட்டேன் என்று அலும்பு பண்ணுவதும் பக்கத்தில் B1 police station ல் இருந்து police வந்து மிரட்டவும் "சுருதி" இறங்கி ஓடுவதுமாகிய காட்சிகளை நினைத்து இப்பொழுதும் சிரிப்பதுண்டு.
நான் படித்த பள்ளியில் 9வது 10வது படிக்கும் சில மாணவர்களே கூட குடிப்பழக்கம் கொண்டிருந்தனர். நண்பன் ஒருவன் சொன்ன வசனம் இது "இந்த வாத்தியான் என்ன பரிச்ச திருத்தறான். நான் போதைல மகேந்திரன பாத்து copy அடிச்சேன். என்ன எழுதறேன்னு எனக்கே தெரியாது. ஆனா markஅ பாத்தா நான் 75 அவென் 60. இவன்லாம் ஒரு வாத்தியான்!". இந்நிலையில் நெருங்கிய உற்வினர் ஒருவர் இளவயதில் ஏதோ ஒரு கலப்பட சரக்கிற்கு பலியான போது குடிபழக்கத்தின் ஆபத்தை உணர்ந்தேன். மிக ஒழுக்கமாய் உயர் பதவியில் இருந்த ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்பழக்கதிற்கு அடிமை ஆனதை காட்டி என் அம்மா சிறு வயது முதலே மன கட்டுபாட்டுடன் வாழ வேண்டியதின் அவசியத்தை எனக்கு உணர்த்தி வளர்த்தார். ஆனாலும், கல்லூரியில் ஒரு முறை நான்கு நண்பர்கள் குடித்துவிட்டு வாந்தி எடுத்து அந்த வாந்தி மேலேயே படுத்து தூங்கிய கதையை கேட்ட பொழுது குடிப்பவர்கள் மனித பிறவிகளே அல்லர் என்னும் எண்ணம் திண்ணமாக தோன்றி விட்டது.
பிறகு வேலை நிமித்தம் நான் மும்மையில் இருந்தபொழுது, ஒரு party யில் ஆண்களும் பெண்களும் குடித்து கும்மாளமடித்துக் கொண்டிருந்ததை நம்ப முடியாமல் ஜீரணித்துக் கொண்டேன். அதே நேரம், என் roommate ஒருவன் என்னுடைய பழக்க வழக்கங்களால் கவரப்பட்டு குடிப்பதை விட போவதாக சொன்னபோது "மச்சி நீ நிறுத்தறதுன்னா உனக்காக நிறுத்திக்கோ! எனக்காக
வேணாம். அப்புறம் மறுபடியும் குடிச்சியானா நான் வருத்தப்டுவேன், நீ ஜாலியா இருப்ப" என்றேன். பின்னர் அமெரிக்கா வந்த பொழுது New Year வந்தது என்று சொல்லி தமிழ் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து குடித்து கும்மாளம் போட்டனர். எனக்கு தெரிந்த வரை அந்த பெண்கள் சென்னை "பிராமணாள்" ஆக இருந்ததால், நமது நாட்டின் கலாசார சீரழிவிற்கு "நம்மவாளின்" பங்களிப்பு மகத்தானது என்ற என் எண்ணம் மேலும் உறுதியானது. பாரதியின் "எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு" என்ற வரி ஞாபகம் வந்தது. இந்த மாதிரி இடத்தில் சில "நம்மவாளின்" போலித்தனம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. Sex on the Beach அடித்துக் கொண்டே ஒரு பெண் சொன்னது "நாங்க எல்லாம் ஆச்சாரமானவா"!. ஆனால் ஒரு அளவிற்கு நமது கலாசாரத்தை விட்டுக் குடுகாமல் இருக்கும் பெரும்பான்மையான ஆண்களும் பெண்களும் US ல் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை தான்.
ஆனால் என்னுடைய அனுபவத்தில் சமீப காலங்களில் இப்பழக்கம் இளைஞர்களிடம் மிகவும் பெருகி விட்டதை பார்க்கிறேன். வார இறுதி முழுவதும் குடிக்கிறார்கள். யாருக்காவது Birth day, marriage day, death day என்று எதேனும் சாக்கு வைத்து குடித்த வண்ணம் இருக்கிறார்கள். என்னையும் குடிப்பதற்கு சிபாரிசு செய்யும் பொழுது நண்பன் ஒருவன் சொன்னது "மச்சி! நான் குடிக்காம இருந்து இருக்கேன், குடிச்சும் இருந்து இருக்கேன். நான் சொல்றேன் குடிச்சா தான் ஜாலி. அதுனால குடி". அவனுக்கு பாரதியின் "சிங்கம் நாய் தர கொள்ளுமோ நல்லரசாட்சியை" என்ற "மாயையை பழித்தல்" கவிதை வரியை சொன்னேன்.
நான் குடிபழக்கம் கொண்டிராவிட்டாலும், எப்பொழுதும் எதேனும் ஒரு வகையில் "குடி" என்னை பாதித்த வண்ணமே இருந்துள்ளது. நண்பர்களுடன் company காக மதுக்கூடம் செல்வதுண்டு. ஆனாலும் மேற்கூறிய போலித்தனங்கள் எனக்கு பிடிபதில்லை. பெண்கள் குடிப்பதை பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி எனக்கு நீங்கியவாறு தெரியவில்லை.இனிமேல் ஆண்களும் பெண்களும் குடித்துவிட்டு கும்மாளம் போடும் இடங்களுக்கு போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். "ஒருக்காலும் புலன்களுக்கு அடிமைப் பட்டு வாழ்வதால் மேலான நிலையை அடைந்து விட முடியாது, எல்லோரும் திருந்த வேண்டும்" என்று நினைத்து இப்படி சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் Bar லும், Dance floor லும் வெட்டிக்கு நின்றுக் கொண்டிருப்பது அலுத்து விட்டது. "எள்ளு தான் எண்ணைக்கு காயுதுன்னா, அதோட எலி புழுக்கையும் ஏன் காயுது" என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழ்ந்தது போதும் என்று தோன்றியதால் இந்த பதிவு.