People I know

Wednesday, September 28, 2005

ரொம்ப அவசியம்!

மதுரை என்று இல்லை, பொதுவாக இந்தியா முழுவதுமே mr.பொதுஜனம் நாய்க்கு கடைப்பட்டவனே. சற்று விளக்கமாக பார்ப்போம்.

சாட்சி 1:

பார்வதி அம்மாள் வீட்டு வேலை முடித்து விட்டு அக்கடா என்று சற்று உறங்க நினைக்கும் உச்சி பொழுது. நான்கைந்து இளைஞர்கள் கதவை தட்டுகிறார்கள். "மாமி! சித்திரை திருவிழாக்கு வரி(?) மாமி, வீட்டுக்கு சம்பாதிக்கிற ஆம்பிளை ஆளுக்கு 200 ரூபா, பொம்பள, பொடியனுங்களுக்கு 100 ருபா மாமி. உங்க வீட்டுல நீங்க, மாமா, குமாரு சேத்து 400 ருபா வரி குடுக்கனும். அம்மனுக்கு கஞ்சி ஊத்த போறோம்" என்று கூவினார்கள். பார்வதி மாமி "ஏம்பா, எங்காத்து மாமா retired ஆய்டார்.எங்களால வரி எல்லாம் குடுக்க முடியாதுபா! வேற எதாவது உபகாரம் பண்ணிடறேனே, இந்த வருஷம் எங்க குமாரு fees கூட கட்ட சிரம படுறோம். 400 ரூபா எல்லாம் எங்களால் ஆறதில்லபா!. மன்னிச்சிக்கோங்கோ! " என்று கெஞ்சும் தொனியில் சொன்னாள். "மாமி! இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா! நாம எல்லாம் ஒண்ணுகுள்ள ஒண்ணு! நீங்க் ஊருக்கு எங்கனா போனா வீட்ட கூட நாங்கதனே பாத்துகிறோம். இப்போலாம் திருட்டு ஜாஸ்தியாய்டிச்சி மாமி பாத்துகுங்க! நாங்க எங்களுக்கு கேக்கல! ஆத்தாளுக்கு தான்". இந்த Blackmail ku பிறகு மாமி பேரம் பேசி 200க்கு முடித்தாள்.

உண்மையில் அங்கே ஒரு 4, 5 வருடத்துக்கு முன்னால் எந்த கோயிலும் கிடையாது. கோயில் ஒரு நல்ல பணம் பறிக்கும் technique என்று தெரிந்த சிலர் platform ஓரமாக சிறிய கல் வைத்து, கோயில் என்று அலப்பரை செய்து பணம் பறித்து வருகின்றனர்.

ஆனால் விழா என்று இவர்கள் சித்திரை, ஆடி போன்ற மாதங்களில் தெருவை அடைத்து பந்தல் போடுவார்கள். அதற்க்கு ரோட்டை நோண்டி வைப்பார்கள். குழாய் mic (தடை செய்யப்பட்டது என்றாலும்) எல்லா lamp postilum மாட்டுவார்கள். சத்தித்தில் சித்தம் கலங்கி நிற்பான் mr.பொதுஜனம். முதலில் ஒன்றிரண்டு சாமி (?) பாட்டு போட்டு விட்டு சினிமா பாட்டிற்க்கு தாவுவார்கள். தெருவில் கறி சோறு சமைப்பார்கள். orchestra வைப்பார்கள். நம்பினால் நம்புங்கள், பாரதிராஜா படத்தில் வரும் "மஞ்ச தெளிச்சி" விளையாடி விழா இனிதே முடியும். ஆனால் வசூல் கோஷ்டி மட்டும் ஒரு extented celebreation ஆக வசூல் பணத்தில் சரக்கடித்து relax செய்துகொள்வார்கள். ஆனால் "வரி" குடுத்த பார்வதி அம்மாள் வீட்டில் budgetஐ சமாளிக்க முக்கிய தேவை எதையேனும் தியாகம் செய்து விட்டு வாழ்ந்திருப்பர்.

சாட்சி 2: குமார் ration கடைக்கு போகிறான். கடைக்காரர் சரக்குகளை எடை கம்மியாக போடுவதோடு "குமாரு! சீனி வேணும்னா rin soap சேந்து வாங்கணும் ராசா, சரியா!' என்கிறார். குமார் எதோ எதிர்த்து பேச வெளியே Beedi குடித்து கொண்டிருந்த நான்கு பேர், அங்கேயிருந்தே "என்னா சாமி sound விடுர! வாங்கிட்டு போய்ட்டே இரு"! என்று மிரட்ட பயந்து போய் வாங்கி கொள்கிறான்.

இப்படி எல்லாம் மக்கள் யார் யாரோ மிரட்ட அடிமை வாழ்க்கை வாழும் நிலையில் சிலர் வந்து தினமலரின் இந்த புகைப்படங்கள் எடுத்தது தனி மனித உரிமைகளுக்கு எதிரானது என்கிறார்கள். குஷ்புவின் உரிமை பாதிக்கப் பட்டுள்ளது, sania mirza குட்டை பாவாடை அணிவது அவர் உரிமை என்று tension ஆகி கொண்டு இருக்கிறார்கள்.

பத்திரிக்கைகாரர்கள் பரபரப்பை தேடி ஓடுகிறார்கள். Celebrities publicity தேடி ஓடுகிறார்கள். அரசியல் தலைவர்கள் மக்கள் முட்டாள்கள் என நினைத்து stunt விடுகிறார்கள். Officeல் free internetல் இதை படிக்கும் சிலர் அரைட்டைக்கு ஊறுகாய் தேடி ஓடுகிறார்கள். வெளிநாட்டில் வாழும் நாட்டு பற்று மிக்கோர், இப்படி எல்லாம் தனி மனித சுதந்திரம் மீறப்பட்டால் 2020 ல் நாம் developed nation ஆக இருக்க மாட்டோம் என்று "sulekha" விலோ, blogயிலோ கதறுகிறார்கள்.

குஷ்பு, சானியா, தங்கர், அண்ணா கல்லூரி dress code இவைகளை பற்றிய சிலரின் கவலை சரியானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் யாராலேயும் கண்டுகாள்ள படாத எல்லா உரிமையும் மறுக்கப் பட்ட பொதுஜனம் இதை கேட்டால் "ரொம்ப அவசியம் எனக்கு" என்பான். யாருக்கும் மக்களின் பிரச்சனையில் அக்கறை இல்லை என்பதை தெரிந்து கொண்டு ஜிகினா செய்திகளை புறகணிப்போம். முடிந்த நன்மைகளை செய்வோம்.

Note 1: இந்த கூத்துக்கள் எல்லாம் traffic நிறைந்த ரோடுகளில் கூட நடக்கும். யாருடைய அனுமதியும் பெறுவதில்லை என்றே கேள்வி. இதனால் பரிட்சைக்கு மாணவர்கள் தமதமாகி fail கூட ஆவார்கள்.

Note 2: சில கோயில்களில் (?) orchestra க்கு பதிலாக ராஜா ராணி ஆட்டம் என்ற ஆபாச நடனம் கூட நடக்கும். சில கோயில்களில் உண்மையான விழாக்களும் நடப்பதுண்டு, கிராமிய கலை,கூத்து வைப்பார்கள். ஆனால் அந்த மாதிரி கலைஞர்களும் ரசிகர்களும் அருகி வருகிறார்கள் என்பதே வேதனையான் உண்மை!

Note 3: Few years ago, drinking alcohol by upper class women was seen as class identity. Now, drinking is no longer a taboo among middel class women too. Now pre marital sex is also seen as acceptable by many. Next to follow might be extra marital.I read somewhere "When financial stabity is assumed, spiritual bamkruptacy is also assured".

Saturday, September 24, 2005

சென்றதினி மீளாது மூடரே!

நான் அடிக்கடி சொல்லி சிரிக்கும் ஒரு கதை, திடிரென்று உள் அர்த்தம் கொண்டது என்று உறைத்தது. நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த பொழுது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய வகுப்பில் ஒரு "Rowdy" மாணவன் இருந்தான். ஒருமுறை ஆசிரியர் ஒருவர் அவனை கண்டிக்கும் பொருட்டு அவனை வைது கொண்டிருந்தார். அவன் சற்று கடுப்பாகி "வேணாம் சார், ரொம்ப திட்டாதிங்க" என்று விரல் நீட்டி மிரட்டினான். அவரும் பதிலுக்கு கோபப்பட்டு "என்னடா பண்ணுவ, அட்சிருவியாடா! அடிடா பாப்போம், அடிடா பாப்போம்! அடிடா பாப்போம்!", என்று அருகில் சென்று கன்னத்தை நீட்டினார். அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, பட்டென்று அறைந்து விட்டு விடு விடு என்று வகுப்பை விட்டு சென்று விட்டான். வாத்தியார் அதிர்ச்சியில் "அடிச்சிட்டா்டா! அடிச்சிட்டான்டா! அடிச்சிட்டான்்டா! " என்று சொல்லிக்கொண்டே Head Master ஐ பார்க்க ஓடினார். இந்த நிகழ்ச்சி இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும் எனக்கு.

ஆனால் நாம் அனைவரும் அவரை போல கயிறு என்று பாம்பை மிதித்துக் கொண்டே தான் இருக்கிறோம். நாம் சிலரிடம் அதீதமான நம்பிக்கையும் ஆசையும் வைத்து இருப்போம், ஆனால் நாம் நம்மையும் அறியாமல் நம்மை புண்படுத்தும் வலிமையையும் சேர்த்தே அவர்களுக்கு அளித்து வைத்திருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நாம் மிகவும் ஆசை வைத்திருக்கும் நபர்கள் தான் நமக்கு மிகவும் துன்பம் அளிக்க சாமர்த்தியம் கொண்டவராகவே இருப்பர். நமது உறவாகிய பெற்றோர், மகன், மகள், தோழர், தோழியர், காதலர், காதலி அனைவருக்கு இந்த அயுதம் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நேரம் வரும் பொழுது பயன்படுத்தவே செய்வர். இதை உணராமல் மேற்சொன்ன ஆசிரியர் போல தப்பு கணக்கு போட்டு மனம் புண்ணாகி எத்தனை முறை நிற்கிறோம், யாரிடமாவது முறையிட ஓடுகிறோம். குரங்கு தன் புண்ணை கிளறி ரணமாக்கி கொள்வது போல திரும்ப திரும்ப சென்றதை நினைக்கிறோம்.

இதற்க்கு தீர்வு தான் என்ன? பற்று அறுத்து வாழ அனைவராலும் இயலுவது இல்லை. குரங்கில் இருந்து வந்ததால் பழசை நினைத்து சொறிந்து கொள்வது பழகிப் போனது.

நான் என்ன செய்வேன் தெரியுமா? யாருக்கும் தெரியாமல் அழுவேன், பிறரை மனதிற்குள் சபிப்பேன், புலம்புவேன். ஆனால், ஊருக்குள் வீரன் மாதிரி நடந்து கொள்வேன்.
அப்புறம் மகாகவியின் "அறிவிலார்க்கு இன்பமில்லை" என்ற வாக்கியத்தை நினைத்து கொள்வேன். பழசை மறக்க அவர் சொன்ன இந்த பாடலை பாடிப்பேன்.

சென்றது மீளாது!

சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா!

புத்துணர்ச்சி கொண்டு புறபடுவேன். அடுத்த முறை கோழைத்தனம் தொற்றும் பொழுது தூசி தட்டி பாரதியார் கவிதைகளை எடுப்பேன்.

Note:
பராதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11, வந்து அமைதியாக சென்றது. நீடு துயில் நீக்க பாடி வந்த நிலவே! எங்கள் உறக்கம் இன்னும் கலையவில்லை. எழுந்தவுடன் உன்னை நினைப்போம். அது வரை பொறுத்திரு!!

Thursday, September 22, 2005

what to read?

I always like to read newspapers. But with almost every newspaper of the world available on line it is little difficult to make a choice. I have my preferences in this following order

1. Regional News, I mean Madurai News, thanks to dinamalar, dinakaran and dailythanthi.
2. Indian News, Hindu, Indian express, Rediff are my primary sources
3. World news: As if I am going to run for next US presidency, I read CNN Headlines and NY times every 10 or 15 minutes. But my most favorite is BBC news; they have amazing neutrality when it comes to reporting.

I will like to know what are the preferences of my beloved 1000 or so readers of this excellent blog!!!!.

To encourage you to develop that habit of refreshing each day “Dinamalar” or “Dinakaran “ pages often times from three pm to four pm (appo thaane sooda padika mudium) I am quoting two hilarious news I read today (9/22) in dinamalar.

Confusion about Madras University – Invention of History.

There was a huge pandemonium at our tamilnadu regarding a most ambiguous bill. The Tamilnadu government has passed a bill that hereafter “Madras University” has to be called Madras University and it will not be addressed as Chennai Universitiy (?). Did any one called it as “Chennai University”? No, Never! Then why the bill now? No one knows. All our MLAs had jolly good time fighting.

Anyways during that discussion, law minister Mr.Jayakumar suddenly invented that “Madras” is named after one “madharesan” who was the king of then (when, any dates Mr.Minister?) Madras, which was nothing but small fishermen hamlet then (What was it called anyway then?).

Free forest dwellers go to Jail:
Link here

நன்றி தினமலர் for photo.

There was a shepherd named Sekar of Theni, in whose flock of goats a cheetah cub accidently got mixed up when they were grazing in forest area. He tried to sell that cub and on knowing this forest department has sent him to jail and the cub to zoo.
Enna Kodumai? Jollya iruntha irandu jeevangal ippozhuthu Jail il? Yaar kutram?

My all time favourite headline is “Ulle veliye vilayidaya moondru per ulle”. Why Dinamalar is missing this punch headlines nowadays?

Anyways, my suggestion is, please read local news papers first ahead of international papers. You are going nowhere if you are feeling proud about your reading WSJ, but not local vernaculars. “Namma veetuku vasapadi enga irukunu therinjikama, Clinton veetu bedroom news padicha enna use?”

Tuesday, September 20, 2005

Cho on Jaya





















Wednesday, September 14, 2005

Best Blog ever.

Please read http://padmaarvind.blogspot.com/. This is one of the best blogs I came across.