People I know

Saturday, September 24, 2005

சென்றதினி மீளாது மூடரே!

நான் அடிக்கடி சொல்லி சிரிக்கும் ஒரு கதை, திடிரென்று உள் அர்த்தம் கொண்டது என்று உறைத்தது. நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த பொழுது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய வகுப்பில் ஒரு "Rowdy" மாணவன் இருந்தான். ஒருமுறை ஆசிரியர் ஒருவர் அவனை கண்டிக்கும் பொருட்டு அவனை வைது கொண்டிருந்தார். அவன் சற்று கடுப்பாகி "வேணாம் சார், ரொம்ப திட்டாதிங்க" என்று விரல் நீட்டி மிரட்டினான். அவரும் பதிலுக்கு கோபப்பட்டு "என்னடா பண்ணுவ, அட்சிருவியாடா! அடிடா பாப்போம், அடிடா பாப்போம்! அடிடா பாப்போம்!", என்று அருகில் சென்று கன்னத்தை நீட்டினார். அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, பட்டென்று அறைந்து விட்டு விடு விடு என்று வகுப்பை விட்டு சென்று விட்டான். வாத்தியார் அதிர்ச்சியில் "அடிச்சிட்டா்டா! அடிச்சிட்டான்டா! அடிச்சிட்டான்்டா! " என்று சொல்லிக்கொண்டே Head Master ஐ பார்க்க ஓடினார். இந்த நிகழ்ச்சி இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும் எனக்கு.

ஆனால் நாம் அனைவரும் அவரை போல கயிறு என்று பாம்பை மிதித்துக் கொண்டே தான் இருக்கிறோம். நாம் சிலரிடம் அதீதமான நம்பிக்கையும் ஆசையும் வைத்து இருப்போம், ஆனால் நாம் நம்மையும் அறியாமல் நம்மை புண்படுத்தும் வலிமையையும் சேர்த்தே அவர்களுக்கு அளித்து வைத்திருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நாம் மிகவும் ஆசை வைத்திருக்கும் நபர்கள் தான் நமக்கு மிகவும் துன்பம் அளிக்க சாமர்த்தியம் கொண்டவராகவே இருப்பர். நமது உறவாகிய பெற்றோர், மகன், மகள், தோழர், தோழியர், காதலர், காதலி அனைவருக்கு இந்த அயுதம் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நேரம் வரும் பொழுது பயன்படுத்தவே செய்வர். இதை உணராமல் மேற்சொன்ன ஆசிரியர் போல தப்பு கணக்கு போட்டு மனம் புண்ணாகி எத்தனை முறை நிற்கிறோம், யாரிடமாவது முறையிட ஓடுகிறோம். குரங்கு தன் புண்ணை கிளறி ரணமாக்கி கொள்வது போல திரும்ப திரும்ப சென்றதை நினைக்கிறோம்.

இதற்க்கு தீர்வு தான் என்ன? பற்று அறுத்து வாழ அனைவராலும் இயலுவது இல்லை. குரங்கில் இருந்து வந்ததால் பழசை நினைத்து சொறிந்து கொள்வது பழகிப் போனது.

நான் என்ன செய்வேன் தெரியுமா? யாருக்கும் தெரியாமல் அழுவேன், பிறரை மனதிற்குள் சபிப்பேன், புலம்புவேன். ஆனால், ஊருக்குள் வீரன் மாதிரி நடந்து கொள்வேன்.
அப்புறம் மகாகவியின் "அறிவிலார்க்கு இன்பமில்லை" என்ற வாக்கியத்தை நினைத்து கொள்வேன். பழசை மறக்க அவர் சொன்ன இந்த பாடலை பாடிப்பேன்.

சென்றது மீளாது!

சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா!

புத்துணர்ச்சி கொண்டு புறபடுவேன். அடுத்த முறை கோழைத்தனம் தொற்றும் பொழுது தூசி தட்டி பாரதியார் கவிதைகளை எடுப்பேன்.

Note:
பராதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11, வந்து அமைதியாக சென்றது. நீடு துயில் நீக்க பாடி வந்த நிலவே! எங்கள் உறக்கம் இன்னும் கலையவில்லை. எழுந்தவுடன் உன்னை நினைப்போம். அது வரை பொறுத்திரு!!

12 Comments:

  • ரொம்ப அருமையாக எழுதியிருக்க!

    தமிழில் எழுதுக !

    -வாசு

    By Anonymous Anonymous, at 2:22 AM  

  • மிக அருமை !!good writeup!!

    By Blogger Adaengappa !!, at 9:15 AM  

  • Pirarai thittuvathaal ungaL kashtam theerndhu viduma..:) Adhu ariyAmaiyaal pirakkum mudivu. NeengaL sollum aasiriyar seithathu miga thavaru. EnRume, ellorukkum oru suya mariyaadhai onRu irukkiradhu. Adhai yaar eppodhu meerinaalum vipareedham dhaan. Thanthai, thaai utpada.

    By Blogger The Doodler, at 11:58 AM  

  • vasu enna bharathiyaar madhiri
    "Tamizhil Ezhudhuga" nnu aasirvadham panra :)

    pb nalla iruku blog.. but even though the student was not close to the teacher.. teacherukku andha student migundha Thunbathai alithullan. :))

    Nerungiyavargal endru illai.. ellai meeru bodhu dhan thunbam varugiradhu endra kootruku naa agree panren.

    -vijay

    By Anonymous Anonymous, at 12:12 PM  

  • சுபாஷினி,
    அறியாமை எமது பிறப்புரிமை என்பது தெரியாதா உனக்கு :=)?. தவறுகள் செய்வதை நிறுத்த முடியாமல் இருக்கிறது அனைவருக்கும். சென்றதை நினைத்து வருந்தாமல் இன்பமாய் வாழ பாரதி சொன்னதை செய்வோமாக!.

    By Blogger P B, at 1:04 PM  

  • >>எங்கள் உறக்கம் இன்னும் கலையவில்லை. எழுந்தவுடன் உன்னை நினைப்போம். அது வரை பொறுத்திரு!!

    rombo nalla irundhudhu PB

    [--khushboo, sachin, sania na nyaabagam irundhirkum:(-- ]

    By Blogger expertdabbler, at 9:29 PM  

  • kalakittenga muthu......

    rombavum arumai......unmaiyum kooda.....

    alavukkathigamaai vaikkapadum anbinaalthaan ellam nigazhkirathu....

    anbirkum venum adaikum thaazh...!

    vaazhga valamudan..

    By Blogger (Mis)Chief Editor, at 6:15 AM  

  • Good Post, PB! 'Vaidhu' kondirundhaar....romba naalaachu indha vaarathai ubayogappaduthi....

    By Anonymous Anonymous, at 3:43 PM  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger Zeppelin, at 8:35 AM  

  • good one pb,

    but partially agree with you in forgetting our past...

    my opinion about this - our past is a good teacher and we must never forget some important things that we have learnt from our lives and from others.. in the past... so brooding is absurd, but learning from our past mistakes is definitely a good thing ...me thinks...


    and you have mentioned - "குரங்கில் இருந்து வந்ததால் பழசை நினைத்து சொறிந்து கொள்வது பழகிப் போனது."

    இது பழகி போனதா இல்லை இயல்பா ??

    (sorry about a deleted comment...i pasted it from notepad and it showed up as boxes and lines.. dont know why... so for clarity's sake... retyped... ;))

    -arun

    By Blogger Zeppelin, at 8:41 AM  

  • கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
    கவலை ஒழித்து இன்பமாய் வாழ வேண்டும் என்பதே குறிக்கோள். கவலை தரும் நினைவுகலை மற்ப்பீர். தெரியாமல் பிடிக்காத ஒரு திரைப்படத்திற்கு சென்று விடுகிறோம் என்றால், மீண்டும் அந்த படத்தை பார்க்காமல் இருக்கின்றோம். ஆனால், வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கலை மட்டும் மீண்டும் மீண்டும் அசை போட்டு மனம் வருந்துகிறோம். இதனை தவிர்த்தல் வேண்டும் என்பதே கருத்து.

    பழக்கம் இறுகி இயல்பாகிறது என்று நினைக்கிறேன்.

    By Blogger P B, at 8:54 AM  

  • Muthu mama avargaley,

    Adutha padhivu eppozhuthu ?

    -Vasu

    By Anonymous Anonymous, at 6:41 PM  

Post a Comment

<< Home