People I know

Saturday, April 15, 2006

கவலையில்லாதவன்

"டேய்! இன்னும் அரை மணி நேரத்தில் airportல இருக்கனும். இவன் பெட்டிய காருக்குள்ள வைக்க போனவன காணோமே, மழை வேற பெய்யுதே" என்று எண்ணிக்கொண்டே அரவிந்தன் மூன்றாவது மாடி apartmentiல் இருந்து எட்டிப் பார்த்தான். இரண்டு வருடம் கழித்து அமெரிக்காவிலிருந்து இந்தியா போகும் நான் என்னை மறந்து மழையில் நின்றுக்கொண்டிருந்தேன். "நான் ஒரு மழை காதலன்" என்று கத்தினேன். "டேய்! போன வாரம் இப்பிடி தானடா மழைல நனைஞ்சு காய்ச்சல் வந்து doctorக்கு அழுத, மறந்துட்டியா?" என்ற படி அரவிந்தன் கீழே வந்தான். "மச்சி நான் வரம் வாங்கிட்டு வந்தவன்டா! எனக்கு நடக்கிற கெட்டது எதையும் ஞயாபகம் வெச்சிக்க மாட்டேன். எனக்கு கவலை என்பதே கிடையாது" என்றேன். அரவிந்தன் "ஆனா மாமா, citi card காரன் உன் doctor billஐ மறக்கமாட்டான். கடுதாசி போட்ருவான்" என்றபடியே காரை start செய்தான். தாவி ஏறிக்கொண்டேன்.
-------------------------


"அப்பா! இரண்டு வருடம் கழித்து ஊருக்கு போகிறேன். சென்ற முறை செய்த தப்பை இந்த முறை செய்யவே கூடாது. சே! என்ன பைத்தியகாரதனமாக நடந்துக் கொண்டு விட்டேன்." என்று நினைக்கும் வேளையில் airport வந்துவிட்டிருந்தது. "டேய்! எதுக்கு americaக்கு வந்தோம், ஏன் திரும்பி போறோம்னு ஞாபகம் இருக்கட்டும், பாத்துக்கடா!" என்றான். "இவன் ஏன் இப்போ இதை சொல்றான், படிக்க வந்தேன், படிச்சேன், திரும்பி போறேன், இதுல என்ன matter, என்னை பொறுத்த வரை நான் வரம் வாங்கிட்டு வந்தவன் எனக்கு நடக்கிற கெட்டது எதையும் ஞயாபகம் வெச்சிக்க மாட்டேன். எனக்கு கவலை என்பதே கிடையாது"என்று நினைத்துக்கொண்டேன". அரவிந்தன் விடை பெற்றுக்கொண்டான். check in formalities முடித்து காத்துக்கொண்டிருந்தேன். இன்னும் 1 மணி நேரம் இருந்தது.
"என்னைபோல வந்தோமா, படிச்சோமா, முடிச்சோமா, என்று ஊருக்கு கிளம்பியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். OPT கூட apply பண்ணாமல் திரும்பி போகிறேன் என்றால் அதுக்கு ஒரே ஒரு காரணம் தான், அது நீ தான் மேகலா. உன்னை எப்படி விட்டு வந்தேன் என்று நினைவே இல்லை, என்ன முட்டாள் நான். இந்த முறை உன்னை பிரியமாட்டேன். நம்மளை பிரிக்க யாரலயும் முடியாது மேகலா" என்று நினைத்துக்கொண்டேன். "இந்தியா போன உடனே, மேகலா எங்க இருக்கானு கண்டுபிடிக்கணும், செஞ்சது தப்புனு சொல்லி மன்னிப்பு கேக்கனும். மேகலா, கண்டிப்பா ஒண்ணும் சொல்ல மாட்டா, அவளுக்கு நான்னா உயிரு. அவங்கப்பன் தான் எங்கள எப்படியோ பிரிச்சுட்டான். அவனை சமாளிக்க தான் idea பண்ணனும்" லேசாக தலை வலித்தது, "போய் கொஞ்சம் காபி குடிச்சிகிட்டே யோசிப்போம்", என்று starbucks குள்ள நுழைந்தேன். இன்னும் 10 நிமிஷத்தில் boarding என்று அறிவித்தார்கள். கொஞ்ச நேரத்தில் delta flight க்குள் இருந்தேன். flight கிளம்பவும் நான் தூங்க முயர்ச்சித்தேன், முடியவில்லை, "கண்ணை முடினா அவ தான் வந்து தொலைக்கிறா! ஒரே flashback தான் ஓடுது கண்ணுக்குள்ள".
--------------------------------

"காலேஜ்ல தான் மேகலா பழக்கமானா. மதுர தியகராஜா காலேஜ்ல. நான் day scholar, அவ hostler. என்னோட labmate. அப்பப்போ lab experiment சம்பந்தமா பேசிக்கிறது தான். நான் mark எடுக்கலன்னாலும் practicals ல weight. மத்தபடி எதுவும் பேசினதில்லை ஏன்னு தெர்ல. நான் அவளை சரியாக கவனிச்சதுனு சொல்லனும்னா, அது நாங்க first year kodaikanal tour போனப்ப தான்னு நினைக்கிறேன். ஆனா, அவ கவனிச்சிருப்ப போல. நமக்கு தெரியாது. Tourல காலங்காத்தால் எழுந்து யாருக்கும் தெரியாம் "guna caves" போயிட்டு 10 மணிக்குள்ள திரும்பிரனும்னு நாங்க மாப்பிள்ளைங்க அஞ்சி பேரு முடிவு பண்ணோம். ஆனா யாரு எழுப்பி விடுவான்னு தெரியல, அந்நேரம் பாத்து மேகலா அந்த பக்கம் வந்தா. நாங்க எல்லாம் youth hostel தான் தங்கியிருந்தோம். அவள கேட்டேன். அந்த நாள வாழ்க்கைல மறக்க மாட்டேன். காலைல ஆறு மணி போல யாரோ என்னை உசுப்புறா மாதிரியிருந்தது. நான் தரயில படுத்திருந்தேன். கண்ணை திறந்தா தாமரை பூ மாதிரி இருந்தா மேகலா. good morning ன்னு மெதுவா சொன்னா, நான் என்னை மறந்து கைய நீட்டினேன், அவ அக்கம் பக்கம் பாத்திட்டு டக்குன்னு இழுத்து தூக்கி விட்டு நான் எழறதுக்குள்ள சிரிச்சிகிட்டே ஓடிட்டா. அதுக்கப்புறம் என்ன ஆச்சின்னே தெரியாது."
-------------------------------


"எனக்கு என்ன ஆச்சரியமா இருக்குன்னா, இந்த இரண்டு வருஷத்தில, இதெல்லாம் ஞாயபகம் வரவே இல்ல. இங்க MS படிக்கறதுக்குள்ள நொங்கு எடுதிடராங்க. personal life பத்தி யோசிக்க time இருக்கறதேயில்ல. சாப்பிட கூட time இருக்கிறதுயில்லை. உடம்புக்கு முடியாம போயிடும்னு வீட்ல குடுத்து விட்ட மருந்து மாத்திரைங்க கூட சரியா சாப்பிட முடியலன்னா பாத்துக்கங்க, அதான் இந்த US lifeஏ வேணாம்னு கிளம்பிட்டேன். ஆனாலும் மேகலா, எப்டி இருக்கா என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கலாம். எனக்கு ஏன் தோணவேயில்ல, worst நான்".
------------------------


"அப்புறம் தான், மேகலா இன்னும் close ஆனா. அவங்க family background கூட எங்கள போலவே தான் இருந்தது. ரெண்டு பேரும் ஒவ்வொருத்தர் பத்தியும் நல்லா தெரிஞ்சிக்கிட்டாம். ஆனாலும் just friends ன்னு சொல்லிக்கிட்டு இருந்தோம்.என்னோட lunch box அவ சாப்பிடுவா. என்னோட record book அவ complete பண்ணி தந்தா, நான் அவளோட programming assignment முடிச்சு தருவேன். நான் இவ்ளோ மாறி போவேன்னு நானே நினைக்கல. ஆனா எல்லாம் just friendship தான். Love எல்லாம் கெட்ட வார்த்தை. எங்களை யாராவது ஓட்டினா frienship பத்தி lecturea குடுப்பேன். அவளும் love எல்லாம் cinemaல தான் வரும் நிஜத்தில வராதுன்னு சொன்னா. நானும் நம்பிட்டு இருந்தேன். ஆனா ரொம்ப நாள் இந்த சாயம் நிக்கலை. ஒரு நாள் வெளுத்து தான் போச்சு. அதையும் சொல்றேன்".
-----------------------------


"அப்போ final year முடிச்சு வேலைல join பண்ண banglore philips software ல் சேர வேண்டி இருந்தது. மேகலாக்கு கூட puneல வேலை கிடைச்சிருந்தது. ஆனா, அவங்கப்பா அவளுக்கு கல்யாணம் fix பண்ணிட்டாரு, so சேர போறதில்லைன்னு சொல்லிட்டிருந்தா. எனக்கு சந்தோஷமாகவே இல்லை. ஆனா அவ கவலை பட்ட மாதிரி தெரியல, சரி, அவளுக்கு நிஜமாவே feelings இல்லை போலயிருக்கு, இல்லன்னா கல்யாணம் வரை போயிருக்க மாட்ட ஒரு பக்கம், ஒரு பக்கம் openஆ பேசியிருந்துயிருக்கலாமோ, தப்பு பண்ணிட்டோமோனு ஒரு பக்கம். சரி எப்படியும் ஒண்ணும் பண்ண போறதில்ல, பேசாம வேலய பாப்போம், ஊருக்கு மூட்டைய கட்டினேன்"

---------------------------------------------------------------------------------


"என்னடா, ticket எல்லாம் எடுதுகிட்டியா? இராத்திரி 12 மணிக்கா train? சரியா பாத்துகிட்டியா?" இது அப்பா சற்குணம். "காலைல சாப்பிட இட்லி வெச்சிருக்கேன். சாப்பிடு. போய் சேர காலைல 11 மணி அயிரும் போலயிருக்கு?" இது அம்மா பார்வதி. ஒரு வழியா station வந்து சேந்தோம். late night னால அவ்வளவா கூட்டம் இல்ல. Train கிளம்ப 10 நிமிஷம் இருக்கையில பாக்கறேண், மேகலா வந்து கிட்டிருக்கா. என் கண்ண என்னாலயே நம்ப முடியலை. அவ அழுது அழுது கண்ணு வீங்கியிருந்தா. எனக்கும் அழுகை வந்திரும் போலயிருந்தது. அப்பா உடனே எங்க மனச புரிஞ்சிகிட்டாரு. அவருக்கு நிலைமையை எடுத்து சொன்னா மேகலா. அவங்க அப்பா ஏதோ முறை மாப்பிள்ளையை பாத்திருக்காராம், அவரு ரொம்ப பிடிவாதம் பிடிக்கறாருன்னு சொன்னா. அப்பா எல்லாம் நாங்க பாத்துகிறோம் நீங்க கவலைபடாதிங்கன்னு சொன்னாரு.
-----------------------------------


"அப்புறம் என்ன நடந்ததுனு யோசிக்கறேன். ஏன் நான் திடீர்னு இவ்ளோ careless ஆனேன். நிச்சயம் கூட ஆச்சே எங்களூக்கு. என்னை பாக்க banglore கூட அடிக்கடி வருவாளே.
ஆனா ஏன் கல்யாணம் நடக்கல. அன்னிக்கு ஏதோ நடந்திருக்கனும். அப்புறம் மேகலாகிட்டேயிருந்து ஒண்ணும் நியூஸ் இல்ல. இப்ப போய் பேசி தீக்க வேண்டியது தான். என்ன தப்பா போச்சுன்னு யோசிக்கனும்".
------------------------------------


"என்னங்க doctor என்ன சொல்றாரு. அவன் இப்ப சரியாகியிருப்பானாமா?" என்று பார்வதி கேட்டாள். "மருந்து மாத்திரை எல்லாம் சரியா வேல செஞ்கிருந்தா, சரியாகியிருக்கும், இல்லன்னா கொஞச நாள் ஆகும்னு சொல்றாரு, பாப்போம்" என்றார் சற்குணம். "அவனுக்கு அன்னிக்கு நடந்தது மட்டும் ஞாபகம் வரலையாம். மத்தது எல்லாம் நினைவு வந்திருச்சாம்.நம்பளை கண்டிப்பா அடையாளம் கண்டுபிடிச்சிருவானாம். அதுனால மேற்கொண்டு treatment indiaலயே இருக்கட்டும் சொல்லிட்டாராம் அந்த ஊரு doctor".
-------------------------------------------

"திரும்ப தூங்க try பண்றேன். முடியலை, தலையெல்லாம் ஒரே வலி. திடீர்னு ஒரு கவலை வருது. ரெண்டு வருஷமா கவலையே பட்டதில்லையே. இது என்ன புது feeling?, நான் தான் வரம் வாங்கிட்டு வந்தவன் ஆச்சே! எனக்கு நடக்கிற கெட்டது எதையும் ஞயாபகம் வெச்சிக்க மாட்டேனே! இது என்ன? ஓ! இது தான் கவலையா? நான் ஏன் இப்போ கவலை படுறேன். ஐயோ! மேகலா! ஐயோ என்ன செய்வேன் கடவுளே! கொஞ்சம் வாய்விட்டே கத்திட்டேன். ! Air hostess "Any problem" ன்னு ஓடி வந்தா. nothingனு சொல்லிட்டு அவளை போக சொன்னேன். அழுகை முட்டிகிட்டு நிக்குது. அழுதேன் அழுதேன் அப்படி அழுதேன். ஆமா! இப்போதான் ஞாபகம் வருது, மேகலா உயிரோடயில்ல, அன்னிக்கு என் கூட banglorea ல bikeல வந்திட்டுயிருந்தப்ப accident ஆச்சே. யாரோ "she is gone" ன்னு கத்தினாங்களே. எனக்கு தலையில அடி பட்டிருந்ததே. எல்லாமே இப்போ தானே ஞாபகம் வருதே..என்னால தாங்க முடியலயே!..அழுதுகிட்டே இந்தியா வந்து சேந்தேன்.
---------------------------------------------


"அவன் அழுதுகிட்டே வந்தா problem இல்லைன்னு அர்த்தம், இல்லன்னா திரும்ப treatment continue பண்ணனும் doctor சொல்றாரு" என்றார் சற்குணம் வீட்டை பார்வதியிடம். பூட்டியவாரே. அவர்கள் பையனை receive பண்ண airport கிளம்பிக்கொண்டிருந்தார்கள். "எல்லா சாமிகிட்டயும் வேண்டிகிட்டாச்சிங்க. எல்லாம் சரியாயிடும்" என்றாள் பார்வதி.
------------------------------------------


நான் கதறி கதறி அழுதுக்கொண்டே பெட்டியுடன் airportkக்கு வெளியில் வந்தேன். அதை பார்த்து அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக கையாட்டினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
"மாப்பிளே நல்ல வேளை நீங்க அழுதுகிட்டே வந்தீங்க, என்னை ஞாபகம் இருக்கா?" என்று வந்தார் மேகலாவின் அப்பா சண்முகம். "அன்னிக்கு accicdent ல மேகலாவுக்கும் ஒண்ணும் ஆகல, உங்களுக்குதான் ஒரு பிரச்சனை, என்னன்னா உங்களுக்கு நடக்கிற கெட்டதெல்லாம் மறந்திரும், நல்லது மட்டும் தான் ஞாபகம்யிருக்கும், அந்த accident கூட மறந்திரும், உங்களுக்கு கவலையே வராது" அப்படின்னு doctor சொன்னாரு. அதெப்படி மாப்பிள கவலை படாத ஆள கல்யாணம் பண்ணி வைக்க முடியும். நீங்க கவலைபட ஆரம்பிச்சாதான் கல்யாணம்னு சொல்லிட்டேன். இப்ப நீங்க அழுதுகிட்டே வந்ததால அடுத்த முகூர்ததில கல்யாணம். சரியா?" என்றார். அப்பா "ஆமாடா, நீ முன்னாடியே USல Mஸ் admission வாங்கினது நல்லதா போச்சு. உனக்கு தெரியாமயே, அங்க treatment எடுக்க வெக்க நாங்க plan பண்ணி முடிச்சோம்" என்றார்.
-----------------------------------


அது வரை மறைந்திருந்த மேகலா வெளியில் வந்தாள். அன்று பார்த்த அதே தாமரை, நாணிக்கோணி நின்றாள். "மாமா, உங்க பொண்ண கட்டின எனக்கு கவல வராதே, பரவாயில்லையா?" என்றேன். "அது எனக்கு தெரியாது. அவளுக்கு கவல வராதபடி பாத்துக்கோ, போதும்" என்றார்.
-----------------------------------------

Friday, April 07, 2006

அரங்க இராட்டினம்

அந்த ஊருக்கு இராட்டினக்காரன் ஒருவன் வந்தான். மக்களை மயக்கும் வசீகரனாய் இருந்தான். அவன் இராட்டினம் வித்தியாசமாக
இருந்தது. அதில் கயிற்றிலே கட்டப்பட்ட பொம்மை குதிரைகள் இருந்தன. அவை சுற்றும் பொழுது மேலும் கீழும் செல்லும், தாவி தாவி
ஒடுவதை போன்ற எண்ணத்தை தரும். ஒவ்வொரு குதிரையும் ஒவ்வொரு நிறம், தினுசு. ஊராரை இராட்டினத்தில் ஏறுமாறு கூவி
அழைத்தான். மக்களும் மயங்கி ஏறினர். இராட்டினம் சுற்ற தொடங்கிய கொஞ்ச நேரத்தில் மக்கள் அந்த குதிரை எல்லாம் உண்மை என்றும்,
தாமே அதனை செலுத்துவதாகவும் நம்ப தொடங்கினர். நடப்பது குதிரை பந்தயம் என்றும், தாம் அதில் வென்றே ஆக வேண்டும் என்றும்
நினைத்தனர். சில நேரம் அவர்கள் குதிரை மேலே தாவுவது போலவும், சில நேரம் விழுவது போலவும், முந்தி போவது போலவும், பின்
தங்கியது போலவும் ஏதேதோ கற்பனை செய்து கொண்டனர்.

ஆனால், இந்த விளையாட்டில் கொஞ்சம் சிரமம் இருந்தது. அவர்களுக்கு அவ்வப்போது களைப்பு நேர்ந்ததை இராட்டினக்காரன் கவனித்தான். களைப்படையாமல் இருக்க குதிரை மீது கொஞ்சம் தூங்க வைத்தான். சிலர் கனாக்கண்டனர் தூக்கத்தில். அதிலும், குதிரைகள் இராட்டினங்களையே கண்டனர். முழித்ததும் பந்தயத்தை தொடர்ந்தனர். ஆனால் என்ன தான் முயன்றாலுன் இராட்டினம் சுற்றில் மீண்டும்
மீண்டும் சுற்றி, அனுபவித்ததையே அனுபவித்துக் கொண்டிருப்பதையும், அந்த சுழற்ச்சியிலிருந்து வெளி வர இயலாமல் இருப்பதையும்
உண்ர்ந்தார்கள் இல்லை.

ஆனால் சிலருக்கு சுற்றலினால் தலை மிகவும் சுற்ற தொடங்கியது. ஆட்டத்தின் மீது கொஞ்சம் விரக்தி வந்தது. ஆனால் ஆசை முழுமையாக
விட வில்லை. அவர்கள் கொஞ்சம் சந்தேகத்துடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சிலர் முற்றிலும் சுற்றும் ஆசையை துறந்தார்கள்,
இராட்டினக்காரனிடம் மன்றாடி இறக்கி விட சொன்னார்கள். அவனும் அவர்களை பலவாறு சோதித்து மகிழ்ச்சியுடன் இற்க்கி விட்டான். இறங்கியவர்கள் உண்மையை உரக்க கூவினார்கள். சுற்றுபவர்கள் அவர்கள் காதில் விழுந்ததை கொண்டு அவர்கள் அறிவிற்க்கு எட்டிய படி
உண்மையை கற்பனை செய்துக் கொண்டார்கள். அவர்களால் இராட்டினத்துக்கு வெளியில் உலகம் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. இப்படியாக இந்த பந்தயம் நடந்துக் கொண்டே இருக்கிறது.

பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்சுடரே!
- மாணிக்க வாசகர்.