கையும் காலும் தானே மிச்சம்
உலகத்திலேயே உத்தமமான தொழில் எது என்று கேட்டால் விவசாயம் என்று தான் சொல்லுவேன். ஆனால் நமது அரசியல்வாதிகளின் கோமாளீதனங்களால் விவசாயிகள் சொல்லொணா துயரத்தில் வாடுகின்றனர். சமீபத்தில் Newyork times ல் வெளிவந்த இந்த கட்டுரை இந்த அவல நிலமை உலகத்தின் கவனத்தை பெற்றிருக்கிறது என்பதை காட்டுகிறது.
ஆனாலும் என்னை மிகவும் பாதித்த விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையான விவசாயிகள் தங்கள் வாரிசுகளை விவசாயத்தில் ஈடுபடுத்தவில்லை. இதனால் பாரதத்தில் இந்த தொழில் அழிந்துவிடுமோ காலப்போக்கில் என்று கூட அஞ்சுகிறேன்.
விவசாயிக்கு லாபம் என்பதே கிடையாது, (ஒரு சில பணப்ப்யிர் சாகுபடியில் இருக்குமோ என்னமோ!), ஆனாலும் நட்டத்திற்கு பெரும்பான்மையோர் விவசாயம் செய்கின்றனர். அதற்கு காரணம் நிலத்தை தரிசாக விடுவது ஒரு அவமானம் என்கிற கிராமிய நம்பிக்கை, உயிரை விட மானம் பெரிது என்பதால் அவர்கள் கடன் வாங்கி விவசாயம் செய்து உயிரை விட்டுவி்டுகிறார்கள்.
முன்னொரு காலத்திலே இயற்கை உரம் விலை கொடுத்து வாங்கமல் கிடைத்தது. விதை நெல் குடும்பத்தின் பொக்கிஷமாக கருதப்பட்டது. விவசாயத்திற்கு அரசாங்கம் பெருமதிப்பு குடுத்து வந்தது. ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு சில தலைவர்கள் மேலை நாட்டு கொள்கைகளை கடைபிடிப்பது தான் முன்னேற்றதிற்க்கு வழி என்று கருதி நகர்மயமாக்கல் (urbanization) கொள்கையை கடைபிடித்தனர். அவர்களாவது பரவாயில்லை, பின்னர் வந்த தலைவர்கள் ஓட்டு பிச்சைகாரர்களாகவே இருந்து ஊழலில் திளைத்து விவசாயிகல் வயிற்றில் அடித்தனர்.
விவசாயிகளிக்கு நஷ்டம் வரும் வகையில் திட்டங்களை தீட்டினால் (குறைந்த விலையில் கொள்முதல் (procuring) போன்றவை) தன்னால் பாரம்பரிய தொழிலை விட்டுவிடுவர் என்று அரசாங்கம் கருதியது/கருதுகிறது. மேலும் green revolution (பசுமை புரட்சி) காலத்தில் இரசாயன உரங்களை ஊக்குவித்து விவசாயத்தின் முதலை (capital) அதிகரித்தனர். ஆனால் அரசாங்கம் கொள்முதல் விலையை (procuring price) உயர்த்தவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஆரம்பித்த நஷ்டக்கதை தொடர்கதையாக தொடர்வதால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். பட்ட காலிலேயே படும் என்பது போல WTO ஒப்பந்தங்களால் விதை பயிர் கூட வைத்துக்கொள்ள இயலாமல் அதிக விலை குடுத்து விதைகளை வாங்கவேண்டியிருக்கும் பரிதாப நிலையை ஏற்படுத்திவிட்டார்கள் அரசியல்வாதிகள்.
மேலும் அரசாங்கம் அளிக்கும் மான்யங்கள் (subsidies) அதிகாரிகளும், அரசியல் வாதிகளுமே சாப்பிட்டு விடுகின்றனர். மேலும் நல்ல அரசாங்கம் மான்யங்களை ஊக்கப்ப்டுத்தாமல் சிறந்த சேவையை சரியான விலையில் அளிக்க முயன்றால் தான் உருப்படும். உதாரணத்திற்கு இலவச மின்சாரம் தருவதாக சொல்லி அதனால் ஏற்படும் நஷ்டத்தை மின்வெட்டு (power cut) மூலம் சமாளிக்காமல் சரியான விலையில் மின்சாரம் தடையின்றி வழங்கினால் நாடு உருப்படும். ஆனால் கடன் ரத்து போன்ற முட்டாள் திட்டங்கள் தீட்டி கவர்ச்சியால் நாட்டை அழித்து வயிறு வளர்க்கும் கோமாளி தலைவர்களிடம் மாட்டிகொண்டுவிட்டு இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.
திருவள்ளுவன் சொன்னான் "சுழலும் ஏர் பின்னது உலகம்" என்று. இன்று ஏர்பிடித்த்வன் விஷம் குடித்து சாகிறான். விஷம் கூட கடன் சொல்லி வாங்கும் பரிதாப நிலை தோன்றிவிட்டது. பட்டுக்கோட்டையார் கூட "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" என்றான். இன்று அதுவும் மிச்சமில்லை.
நமக்கு காலம் காலமாக உணவளித்து தாயை போல காத்தவர்கள் விவசாயிகள். பாவம் இன்று அவர்களுக்கு கஷ்டத்தில் உதவ யாருமில்லை. பெற்ற தாயையே சோறு போடாமல் விரட்டும் காலத்தில் நம்மிடமிருந்து எதுவும் தேறாது என்று உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிக்கு வேற என்ன வழி இருக்க முடியும்?