People I know

Wednesday, February 22, 2006

சேதாரம் இல்லாமல்!!

அப்பா! வசந்த காலத்தில் மரத்தில் இருக்கும் பறவைகளை காட்டி இவை இலையுதிர் காலத்தில் மரத்தை விட்டு போய்விடும், அதை போல கெட்ட சகவாசம் ஒருவனின் கஷ்டகாலத்தில் அவனை விட்டு நீங்கிவிடும் என்று கதை சொன்னாய். கெட்ட சகவாசம் என்று சொன்னது நமது குடும்பம் அந்த சொல்லொணா கஷ்ட காலத்தில் விழுந்தபோது ஓடிப்போன நம் உறவுகளை தான் என்று சொன்னாயா? அதை நானே பட்டு அல்லவா தெரிந்து கொண்டேன். நல்ல வேளை சேதாரம் இல்லாமல் தப்பினேன்.

நம்பிக்கையுடன் இரு! என்று சொல்லுவாய், ஆனால் ஒரு வாசல் மூடினால் ஒரு வாசல் திறக்கும். கஷ்ட காலத்தில் தான் நல்லவர்கள் அடையாளம் காணப்படுவர் ன்று சொன்னாயா? அதை நானே பட்டு அல்லவா தெரிந்து கொண்டேன். நல்ல வேளை சேதாரம் இல்லாமல் தப்பினேன்.

கவனமாய் இரு! என்று சொல்லுவாய், ஆனால் நமது ஏழ்மையை காட்டி சிறு உதவிகளை செய்வது போல செய்து, என்னை அவர்கள் விட்டு வேலைக்காரன் ஆக்கி விட முயற்சி செய்தவர்களிடம் கவனமாய் இரு, என்று சொன்னாயா? அதை நானே பட்டு அல்லவா தெரிந்து கொண்டேன். நல்ல வேளை சேதாரம் இல்லாமல் தப்பினேன்.

துணிவாய் இரு! என்று சொல்லுவாய். ஆள் பலம் இல்லாத் வீடு என்று அக்கம் பக்கத்தில் இருக்கும் போக்கிரிகள் தொல்லை தருவார்கள். அவர்களை கண்டு அச்சப்படாமல் துணிவாய் எதிர்த்தால் ஓடி விடுவார்கள் என்று சொன்னாயா? அதை நானே பட்டு அல்லவா தெரிந்து கொண்டேன். நல்ல வேளை சேதாரம் இல்லாமல் தப்பினேன்.

பொறுமையாய் இரு! என்று சொல்லுவாய். கஷ்ட காலத்தில் உன் மீது அவதூறு கற்பித்து ஏளனம் செய்பவர்களிடம் காலம் கனியும் வரை பொறுமையாய் இரு. நான் என் காலில் நிற்கும் பொழுது அவர்களே என்னை புகழ்ந்து பேசுவார்கள் என்று சொன்னாயா? அதை நானே பட்டு அல்லவா தெரிந்து கொண்டேன். நல்ல வேளை சேதாரம் இல்லாமல் தப்பினேன்.

எச்சரிக்கையாய் இரு! என்று சொல்லுவாய். ஆனால் மது, மாது, சூது இவைகளிடம் எச்சரிக்கையாய் இரு என்று சொன்னாயா? இதை என்னிடம் கொண்டு வருபவர்கள் நல்லவர்களை போல வந்து இறுதியில், பெரும் தீமையை செய்து விடுவார்கள். உலகில் நமக்கு உலை வைக்கும் அனைத்தும் வலை விரித்து தலை அறுக்கும் தன்மையை கொண்டவை, அதனால் எச்சரிக்கையாய் இரு என்று சொன்னாயா? அதை நானே பட்டு அல்லவா தெரிந்து கொண்டேன். நல்ல வேளை சேதாரம் இல்லாமல் தப்பினேன்.

முயற்சியுடன் இரு! இது போல எத்தனையோ பாடங்கள் நீ சொல்லக்கேட்டேன். அப்பொழுது புரியவில்லை. ஆமாம், என்னுடைய ஆறு வயது வரை, நான் உன் முதுகில் சாய்ந்து ஊஞ்சல் விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த போது நீ என்னென்னவோ கதைகள் சொன்னாய். திடீரென்று Heart attack இல் போய்விட்டாய். வாழ்க்கை பாதை இவவள்வு கடினமானது அதனால் முயற்சியுடன் இரு என்று சொன்னாயா? அதை நானே பட்டு அல்லவா தெரிந்து கொண்டேன். நல்ல வேளை சேதாரம் இல்லாமல் தப்பினேன்.

Friday, February 17, 2006

Theory and Practicals

Life is a bad teacher, first gives the exam and then teaches the lesson
-எங்கேயோ படித்தது.

Theory
குடிப்பழக்கம் கூடாது என்பதை விளக்கும் பாரம்பரிய கதை ஒன்று. ஒரு சன்னியாசி காட்டு வழியே தனியே போய்கொண்டிருந்தார். அவரை ஒரு ராட்சசர்கள் கூட்டம் பிடித்துக்கொண்டு அவரை துன்புறுத்தினார்கள். அவரை அங்கிருந்த காட்டுவாசிப் பெண்ணை கற்பழிக்க சொல்லி மிரட்டினார்கள். அவர் மறுத்தார். அதற்க்கு அவர்கள் "எங்களிடமிருந்து நீ தப்பிக்க வேண்டுமென்றால் ஏதேனும் பாவம் செய்தே தீர வேண்டும். குறைந்த பட்சம் அவளுடைய மகன் அருகில் இருக்கிறானே அவனை கொண்று விடு,உன்னை விட்டு விடுகிறோம்" என்றார்கள். அவர் அதற்க்கும் மறுத்தார். அவர்கள் அவரிடம் "சரி இந்த மதுவை குடி, போதும். உன்னை விட்டு விடுகிறோம்" என்று ஒரு குடுவையில் மதுவை குடுத்தார்கள். அவர் குடித்தார். முன்பின் பழக்கமில்லாமல் குடித்ததால் போதை தலைக்கேறியது. காம வெறிக்கொண்டார். அந்த பெண்ணை கற்பழிக்க சென்றார். அதை தடுக்க முயன்ற பாலகனை கொன்றார். அவளை கெடுத்தார். மது அருந்தினால், போதை வசத்தில் பாவம் பல புரியக்கூடுவோம். மேலும் சாஸ்திரங்கள் மது அருந்துவது பெரும்பாவம் என்று உரைக்கின்றன. ஆகையால் குடிக்காதீர், என்பது அந்தக்கதை.

Practical
ஒரு முறை எங்கள் university of Kentucky யில் நடந்த நிகழ்ச்சி. நண்பன் ஒருவன் Residence hall ல் வேலை பார்த்தபோதுபோலீஸ் அவனை விசாரித்தார்கள். வழக்கின் விபரம், முந்தின இரவு party யில் கலந்து கொண்டு நண்பர்களுடன் விடுதி திரும்பிய பெண்ணை நண்பர்களே(?) கெடுத்துவிட்டார்கள். அவளுக்கு யார், எத்தனை பேர் என்பது கூட தெரியவில்லை. அது சம்பந்தமாக சாட்சி சொல்லும்படி நண்பனை போலீஸார் அழைத்திருந்தார்கள். இந்த மாதிரி சூழ்நிலையால் கர்பமாகி தகப்பன் தெரியாமல் பூமிக்கு வரும் குழந்தை பற்றி என் அபிமான எழுத்தாளர் திருமதி. ஜெயந்தி சங்கர் எழுதிய கதை மிகவும் பாதித்த ஒன்று.
(http://jeyanthisankar.blogspot.com/2005/10/blog-post.html)

சில நேரங்களில் theory ஐ நன்றாக படித்துவிட்டால் practical exam கிடையாது என்பது விந்தையானது!!

"தீயவை தீய பயத்தலால் தீயவை தீயுனும் அஞ்சப்படும்" என்பது குறள். யாருக்கும் தெரியாமல் தீயை தொட்டாலும் சுடவே செய்யும்.

Wednesday, February 08, 2006

சேமிப்பு கடன் யதார்த்தம்- பணம்!

சேமிப்பு

"இந்திய மக்கள் பணத்தை வங்கியில் மிகவும் சேமிக்கிறார்கள், அதனால் பணப்புழக்கம் குறைகிறது. வியாபரம் பெருக நாமும் மேலை நாடுகளை போல மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை குறைத்து செலவு செய்ய வைக்க வேண்டும். அதற்க்கு வங்கிகளில் வட்டி விகிதத்தை குறைத்தால் போதும், மக்கள் சேமிக்க அஞ்சுவார்கள் என்று நினைத்து ஒருமுறை அரசு வட்டி விகிதத்தை பண வீக்கத்தை விட (inflation) குறைத்து அறிவித்தது. அவர்கள் நினைத்ததற்க்கு மாறாக மக்கள் அதிகமாக பணத்தை வங்கியில் போட்டார்கள். காரணம், வட்டி குறைகிறது என்றால் சேமிப்பும் குறைகிறது என்றே அர்த்தம். அதை சரி கட்ட இன்னமும் சிக்கனமாக இருந்து பணம் சேர்ப்போம் என்று மக்கள் நினைத்தது தான். அந்த அளவிற்கு சேமிக்கும் பழக்கம் மக்கள் இரத்ததில் ஊறி இருக்கிறது பாரதத்தில்" என்று ஒரு கட்டுரையில் (தண்ணீர் விட்டா வளர்த்தோம் - கட்டுரை தொடர், துக்ளக்) ஆடிட்டர் திரு. குருமூர்த்தி அவர்கள் கூறி இருந்தார். அவர் தொடர்ந்து கடனில் வாழும் மேலை நாட்டு "Credit card culture"ஐ பாரதத்தில் கொண்டு வர நம் நாட்டு அறிவு ஜீவிகள் எடுத்த/எடுக்கும் முயற்சிகளும், பன்னெடுங்காலமாக முன்னோர்கள் காட்டிய "simple life philosophy" இல் நம்பிக்கை கொண்ட நம் பாமர ஜனங்கள் அவற்றை வெற்றிகரமாக முறியடிப்பதை பற்றியும் எழுதியிருக்கிறார். ஆனால் "Western influence" அதிகம் கொண்ட நம் இளைஞர்கள் பலரும் கேளிக்கைகளிலும் கோமளிதனங்களிலும் reckless ஆக பணத்தை தொலைத்து வாழ்க்கையையும் தொலைத்துக் கொண்டிருப்பதை கண் கூடாக பார்க்கும்பொழுது ஒரு generation gap அந்த கட்டுரையில் இருப்பதாக உணர்கிறேன்.

கடன்

அதே நேரம் வியாபரத்தில் கடன் வாங்குவது என்பது எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. பொது மக்களின் பணம் கொண்டு வியாபாரம் செய்யும் "Stock marketting" இப்பொழுது பாரதத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது (sensex has crossed 10000 pts). மற்றவர் பணத்தை முதலீடாக (investment) வைத்து செய்யும் வியாபாரிகளின் நேர்மை எப்பொழுதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. கோடிக்கணக்கான dollerகளில் நடந்த scamகளை உள் நாட்டிலும் வெளிநாட்டிலு நாம் கேள்விப்படவே செய்கிறோம். கடன் வாங்கி வியாபாரம் செய்வதை பற்றி சரவண பவன் முதலாளி ஒரு முறை சொன்னது "நான் வியாபாரம் தொடங்கினதுல இருந்து கடன் வாங்கிதான் செய்கிறேன். இப்பொழுது கூட நாங்கள் வெளிநாட்டில் branch திறக்க கோடிக்கணக்கில் வாங்கினோம். நாங்கள் எப்பொழுதும் திருப்பி செலுத்தி விடுகிறோம் என்பதால் தான் குடுக்கிறார்கள். கடன்காரர்களுக்கு குடுப்பதை எடுத்து வைத்துவிட்டு மிச்ச பணத்தை தான் நான் இலாபமாக பார்ப்பேன்".

யதார்த்தம்
ஒரு அளவிற்கு பெரிய வியாபாரிகளுக்கு இந்த கடன் முறை ஒத்து வரும். ஆனால் மிக பொது ஜனத்தின் நிலை என்ன? சமீபத்தில் நான் சென்றிருந்த கோயில்கள் சிலவற்றில் நான் கண்ட காட்சி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. கோயில்களில் கடைகள் போட ஏலம் எடுக்க வேண்டும், ஏலம் எடுத்தவர் வியாபாரிகள் கடை போட வாடகை வசூலித்துக் கொள்வது, என்பது நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால் இன்றைய தேதிகளில் அரசியல் அடாவடிகளினால் ஏலத்தொகை இலட்சக்கணக்கில் போய்விடுகிறது சில கோயில்களில். அதணால் பண்டங்கள் விலை மிக அதிகமாக போய்விடுகிறது. துளசி மாலை 10 ரூபாய், ரோஜா மாலை 50 ரூபாய் என்றால் யார் வாங்கவார்கள். ஒரு வியாபாரியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் "வியாபரமே சரியில்லை, வட்டி கட்ட முடியவில்லை" என்றார். ஆமாம் வியாபாரம் என்பது "supply-demand" அடிப்படையில் அமையாமல் கந்து வட்டி அடிப்படையில் அமைந்தால் வடிக்கையாளன் (consumer) வாங்காமல் தானே போவான்?

அழகர் கோயில் மலை மீது நடந்து செல்லும் வழியில் கடை போட்டிருந்த பாட்டியிடம் கேட்டேன் "ஏன் பாட்டி இங்க போட்டிருக்க, இப்போ எல்லாம் யாரு ஏறி வராங்க மலை மேல, bus/car la இல்ல மேல போறாக?" (அது ஏற குறைய 3.5 km மலைப்பாதை, மேலே பழமுதிர்சோலை என்ற அறுபடை வீடுகளில் ஒன்றான தலம் உள்ளது) என்றேன். அதற்க்கு பாட்டி "அட போப்பா, கோயில் வாசல்ல கடை போட ஏலம் எடுத்த ஆளுக்கு ஒரு நாளைக்கு 100 ருபா தரனும், ஒருநாள் தர முடியலன்னா அடுத்தநா 150, நம்மளால முடியுமா? அதான் இங்கன் போட்ருக்கேன்." அந்த வயதிலும் உழைப்புக்கு அஞ்சாமல் வாழ்க்கையோடு போராடும் இவர்களிடம் நான் கற்க வேண்டியது எவ்வளவு உள்ளது!. சகல வசதிகளும் இருந்தும் "life sucks" என்று கூறி திரியும் நம் தலைமுறையினர் கண் திறந்து realityஐ பார்பார்களா?

மேலே தரிசனம் முடிந்து கீழே bus க்கு காத்திருந்தேன். அங்கே pine apple ஐ மிக சிறிய மெல்லிசாக வெட்டி விற்றுக்கொண்டிருந்தாள் ஒரு அம்மாள். விலை கேட்டேன், 2 ரூபாய். வாங்கவில்லை. எனக்கு தெரிந்து யாருமே வாங்கவில்லை. ஒரு 10 நிமிடத்தில் bikeல் இரண்டு முரட்டு ஆசாமிகள் வந்து வாடகை வசூலிக்க வந்தார்கள், விற்றுக்கொண்டிருந்த அம்மாளிடம் "இன்னிக்கு தரலயா நீயி..அப்போ நாளைக்கு ஒழுங்கா 250 தரணும், இல்ல நடக்கறதே வேற" என்று மிரட்டி விட்டு சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் அந்த அம்மாளின் உறவுக்கார பெண்மணி 2 வயது குழந்தையுடன் வந்தாள். அன்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். குழந்தை pine apple துண்டு ஒன்றை எடுத்தது. இந்த அம்மாள் "ஏல! காசு கொண்டு வந்திருக்கியா? இல்லனா பழத்தை கீழ வை. காசில்லனா சொந்த பிள்ளைக்கி கூட பழம் கிடையாது". யதார்த்தம் உறைத்திருக்கும் அந்த சிறிய குழந்தைக்கு. எனக்கு என்னமோ அறியாமையும் அகலக்கால் வியாபரத்தாலும் இந்த மக்கள் தங்கள் தலையில் தானே மண்ணை வாரி போட்டிக்கொண்டது போல இருந்தது.

கருத்து

எல்லோருக்கும் பொருந்தும் கருத்து ஒன்றை திருக்குறள் சொல்கிறது. அதை மேற் கொண்டால் பெரும்பான்மையான பணப் பிரச்சனைகள் தடுத்து விடலாம். அது "பொருள் வரும் வழி அகலமாக இல்லாவிடினும், செல்லும் வழி அகலமாக இல்லாமல் பார்த்துக்கொள்"
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை"