People I know

Thursday, October 06, 2005

மஹாபரதம் பேசுகிறது!

"யுதிஷ்டிரா! இந்த கிருஷ்ணன் இடையர் குலத்தை சேர்ந்தவன். இங்கே இத்தனை ஷத்திரியர்கள் இருக்க, அவனுக்கு முதல் மரியாதை செய்வதின் மூலம் எங்கள் எல்லோரையும் அவமரியாதை செய்துவிட்டாய். மன்னர்களே! நீங்களும் என்னை போலவே நினைத்தால் பாண்டவர்கள், கிருஷ்ணன்
மற்றும் பீஷ்மரை எதிர்த்து போருக்கு தயாரகுங்கள்." என்று சிசுபாலன் அறைகூவல் விடுத்தான். சிசுபாலன் சொன்னதை எற்று பல மன்னர்கள்
அவன் பின் நின்றனர்.

பீஷ்மர் அவனை கண்டித்து கிருஷ்ணனின் பெருமைகளை எடுத்துரைத்தார். அதற்கு சிசுபாலன் "என்ன பெரிய மகிமை? பாம்பை கொன்றான்,
பறவையை கொன்றான். இதெல்லாம் பெருமையா? தனக்கு உணவளித்த மாமனை கொன்றான், இது கயமை அல்லவா?. இவனுக்கு
முன்பாக நான் ருக்மணியை மனத்தால் வரித்தேன். அதையும் அவன் இந்த சபையில் வெட்கமில்லாமல் சொல்கிறான். என்னுடன் போரிட்டு
என்னை மாய்க்க முயலாமல் ஒரு பேடியை போல ஓடி ஒளிந்தவன் தானே இவன்?" வசைமாரி நின்ற்பாடில்லை. க்ருஷ்ணர் பொறுமையுடன்
கேட்பதை பார்த்து பீஷ்மர் முதலானோர் ஆச்சர்யபடுகின்றனர். அவர்களிடம் தான் சிசுபாலனின் தாய்க்கு செய்த கொடுத்த சத்தியத்தின் படி 100
வசவுகளை பொறுப்பதாக க்ருஷ்ணர் கூறுகிறார். சிசுபாலன் 100 வசவுகளை முடித்ததும் க்ருஷ்ணர் அவனுடன் போரிடுகிறார். சிசுபாலன் க்ருஷ்ணனை தாக்கி கீழே விழவைக்கிறான் மேலும் காயமுண்டக்குகிறான். அதை பார்த்து சபையே அதிர்ச்சி அடைகிறது. க்ருஷ்ணன் "இந்த சிசுபாலன் என்னுடைய அம்சமே. முன்னொரு சமையம் இவனே ஹிரண்ய கசிபுவாக பிறந்து என்னால் கொல்லப்பட்டவன். இவனை இப்பொழுதே கொல்கிறேன்" என்று சக்ராயுதத்தை அவன் மீது செலுத்தினார். அவன் தலை அறுந்தது. அவனிடமிருந்து ஒரு ஒளி கிளம்பி க்ருஷ்ணரை சுற்றி வந்து அவருள் கலந்தது."

இந்த பத்தி என் நினைவில் இருந்து எழுதியது. இது மஹாபாரதத்தில் அச்வமேத யாகம் நடத்தி முதல் மரியாதையை கிருஷணருக்கு அளிக்க தர்மபுத்திரரின் சபை முடிவு செய்த பொழுது, சிசுபாலன் சினந்து பேசியதும், க்ருஷ்ணர் அவனை வதம் செய்ததும் பற்றியது.

க்ருஷண த்வைபாயன வியாசர் ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியர் போல மகாபரதத்தை பதிவு செய்து இருக்கிறார். தனது சொந்த கருத்தை
கலக்காமல், எல்லா பாத்திரங்களின் நிறை குறைகளை நேர்மையுடன் சொல்கிறார். திரு.சோ அவர்கள் எழுதிய மஹாபாரதம் பேசுகிறது
என்னும் நூல் வியாசரின் 96,000 சுலோகங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டள்ளது. வேறு எந்த சாண்றுகளையும் காட்டாமல் வெறும் "logical arguments" மட்டுமே வைத்து மஹாபாரதம் ஒரு வரலாற்று நூலே என்று நிறுவி இருக்கிறார்.

ஆனாலும், மஹாபாரததில் மானிடர் கற்றுக் கொள்ள ஏரளமான விசயங்கள் இருக்கின்றன. மஹாபாரதத்தின் மைய கரு "தர்மத்தின் பாதை சூட்சும்மானது. அதை அறிவது கடினம்" என்பதை சுற்றி சுற்றி வருகிறது. தர்மத்தின் பாதையை பல்வேறு உதாரணங்களின் மூலம் விளக்க முயற்சிக்கிறது. விதுரர் தர்மத்தின் பிம்பமாக விளங்குகிறார். மற்ற எல்லோரும் ஒரு இடதிலாவது தர்மத்தின் பாதையிலிருந்து சறுக்கினாலும் விதுரர் எப்பொழுதும் அறவழி நிற்கிறார். தர்ம புத்திரன் பொய் சொல்லுமிடங்கள் மறைக்கப்படுவதில்லை, அதே போல துரியன், கர்ணன் போன்றோரின் நற்குணங்களும் மறைக்கப்படுவதில்லை. இந்நூலின் நேர்மை என்னை மிகவும் கவர்கிறது.

மிக முக்கியமாக வர்ணாசிரம தர்மங்கள் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் வருணக்க்கலப்பு நடக்கவே செய்யும், ஆகையால் இனி ஒருவனின் வருணம் பிறப்பினால் முடிவு செய்யக் கூடாது என்று அறுதியிட்டு கூறுகிறது. இக்கதையில் வரும் பல பாத்திரங்கள் தங்கள் வருண குணத்துக்கு மாறாக நடக்கிறார்கள். பிராம்ண துரோணர் போர்த் தொழில் செய்கிறார், சத்ரிய தர்மர் அளவிலா பொறுமையுடனும், தர்மத்தில் நிலைப்பெற்று ஒரு பிராம்ணனை போல் இருக்கிறார். இதனால், கதையில் வரும் விவாதங்கள் இன்றைய மனிதருக்கும் பொருந்துவதாகவே உள்ளது.

ஐந்தாவது வேதம் எனப்படும் பாரதம், விதுரன், பீஷ்மர், க்ருஷ்ணர் போன்றோரின் நீதி நெறி போதனைகளால் நிறைந்துள்ளது. Politics, law, warfare, public administration, law and order, psychology, science and technology, genology,engineering என்று அனைத்து துறைகளிலும் அரிய செய்திகளை கொண்ட சுரங்கமாக திகழும் மஹாபரத கதையை சிறிதும் மாற்றாமல் நமக்களித்த திரு.சோ அவர்களுக்கு நன்றி கூறி "மஹாபாரதம் பேசுகிறது" படித்து பயன் பெறுவோம்.

10 Comments:

  • A Quote from memory regarding varna and jaathi.

    "the word 'varna' comes from the root vari which means occupation. so when the varnasrama was deviced it was formed based on the occupation. there were only 4 catageories of occupation and that is how the brahmana, kshatriya, vaishya and shudra varnas came. however the word 'jaathi' is from the root 'ja' means birth. when varna has its base in occupation, jathi has its in birth. various jathi people followed different varna for livinghood and later it became tighty as only this jaathi people have to follow this varna and got abused"

    this is an excerpt (not verbatim though) from Cho's engE brahmanan.

    By Anonymous Anonymous, at 3:06 PM  

  • pb, you have a great blog..

    i have come across your blog earlier, didn't know you are a known chap..

    by the way, am sridhar's classmate at school and college..

    By Blogger Ram, at 12:07 AM  

  • Hey Ram,
    Thanks. we must be knowing each other. I also studied in sethupati school only. Rsidhar is my cousin brother.

    By Blogger P B, at 6:51 AM  

  • of course we know each other.. kuppuswamy used to hang around with a ramaswamy.. remember.. and a ramasubramanian and some srinivasans !!

    By Blogger Ram, at 7:22 AM  

  • Bho ramasubbu!
    avan thanada nee? ramasubbu solli iruntha nodila therinjurukum. eppidi iruku. Nice to meet u da.

    By Blogger P B, at 8:02 AM  

  • elai pb,

    u visited his blog, i guess u shud have seen his blog title "market place", didnt u get that idea?

    adhu ramasamy daa :))

    By Anonymous Anonymous, at 1:18 PM  

  • Ramasamy ya..chai ramasubramanian nu ninaichitein..ramasamy sonnale pothume I know him very well. sariyna tube light naan engratha velicham pottu kaatitein :=)

    By Blogger P B, at 5:17 PM  

  • pb,
    romba naal kazhichu mahabharatham serialla patha scene ellam malarum ninaivaa varudhu!!!
    sooper!!!

    By Blogger Maayaa, at 3:34 PM  

  • Sridhar,
    that is an excellent piece of information. I forgot to acknowledge earlier. very nice.

    By Blogger P B, at 9:49 AM  

  • naina,

    finally.. with your help padichu mudichuten... :)

    i guess its a little late to say "good post dude"... but hey, better late tha never right ?

    :)

    By Blogger Zeppelin, at 10:22 AM  

Post a Comment

<< Home