உள்ளே வெளியே
மண்டையை பிளக்கும் மத்தியான நேரத்தில் தான் என் அம்மாவுக்கு "ByPass" செய்துக்கொண்ட தன் அண்ணனை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தோன்றியது. நான் வேறு ரொம்ப வருடம் கழித்து அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதால் அம்மாவுக்கு துணையுமாச்சு, மாமாவை பார்த்தது போலவும் ஆச்சு என்று கிளம்பினேன். "எங்க போனாலும் ஆட்டோவில போடா, நீயேல்லாம் madras பஸ்ல போனா pick pocketகாரன் பேண்டையே உருவிட்டு போயிருவான்" என்ற அண்ணனின் அறிவுரைக்கு அம்மா "போடா, தாம்பரத்திலிருந்து ஆட்டோவில K.K. நகர் போறதுக்கு முந்நூறு ரூபா கேப்பான், உங்கண்ணன் கிடக்கான் அவனுக்கு வேற வேல இல்ல, பஸ்லயே போலாம்" என்று கூட்டி போனார்.
பஸ் ஏறின கொஞ்ச நேரத்தில் ஒரு "குடிமகன்" சத்தமாக தனது மனைவியை திட்டிக்கொண்டிருந்தான். "தே..யா, என்னையாடி கேள்வி கேக்குற, நான் ஆம்பளடீ எங்க வேணாலும் போவேன், வருவேன், -----------------------," (கெட்ட வார்த்தை மழையாக பொழிந்துக்கொண்டிருந்தது, அதை எல்லாம் அச்சில் ஏற்ற முடியாது. அவர் மனைவியை நினைத்து ரொம்ப துக்கித்தேன். அவனை ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. ஆனால் உள்ளூர் மக்கள் எல்லாம் எருமை மாட்டின் மீது மழை பொழிவது போல தங்கள் உலகில் சஞ்சாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு எருமையாக அவனை வெறித்திக்கொண்டிருந்தேன். கண்டிப்பாக எங்கள் மதுரை ஏரியாக்களில் பெண்ணை இவ்வளவு ஆபாசமாக பேச முடியாது, மற்ற எல்லாரும் திட்டி அவனை இறக்கிவிட்டிருப்பார்கள்.
பார்வையை மேயவிட்டால் அங்கே ஒரு "middle age minor" ஒரு பெண் மீது இடித்துக் கொண்டும் தடவிக் கொண்டும் இருந்தான். அவள் அவனிடமிருந்து விலக முற்பட்டு கூட்ட நெரிசலில் விழி பிதுங்கிக்கொண்டிருந்தாள். யாரும் இதெல்லாம் பெரிய விஷயமாக க்ருதியதாக தெரியவில்லை. நானும் "நமக்கு எதுக்கு வம்பு" என்று சிந்தனையில் இறங்கிவிட்டேன்.வியர்வை புழுக்கத்தில் செத்துவிடுவேன் போலயிருந்தது. கண்ணை வெளியில் மேயவிட்டால், வள்ளுவர் கோட்டம் அருகே "காதலர்கள்" இன்றோடு உலகம் அழிந்துவிடும் போல மாய்ந்து மாய்ந்து மடியிலும், கண்ணிலும் உதட்டிலும் மெய்மறந்து தொலைந்துக்கொண்டிருந்தனர். "work hours"ல் இப்படி இருக்கிறார்கள், இதில் எத்தனை legitimateஒ யார் கண்டார். அதற்குள் உட்கார சீட்டு கிடைத்துவிட்டதால் கண்ணை மூடிக்கொண்டு அரை தூக்க நிலைக்கு சென்று விட்டேன்.
ஒரு வழியாக "stop" வந்தது. அம்மாவும் நானும் இறங்கும் வேளையில், அம்மாவின் handbagலிருந்து யாரோ purseஐ அடித்துவிட்டார்கள். இதற்காகவே "திமுதிமு" என்று ஒரு கூட்டம் ஏறியது போலயிருந்தது. அம்மாவும் நானும் பஸ்ஸை நிறுத்த சொல்லி கத்தினோம், ஆனால் கண்டுக்கொள்ளாமல் எடுத்து விட்டனர். கிட்டத்தட்ட பாட்டியின் வைத்திய செலவுக்காக நாங்கள் எடுத்து வந்த 2000ரூபாய் "போயிந்தே". நான் மீண்டும் பஸ்ஸை விரட்ட முற்பட்டேன், அருகிலிருந்தவர்கள் எல்லாம் என்னை நிறுத்தி அதனால் பயன் ஒன்றுமில்லை என்றும், போலீஸ் துணையுடனேயே pickpocketகாரர்கள் செயல்படுவதால் அதை தடுக்க நம்மால் இயலாது என்றும் தெரிவித்தனர்.
அம்மா மிகவும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவளை தேற்றி மாமா வீட்டுக்கு போயிருந்தோம். மாமா "F-channel" பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மகள் கோமதி அவரை பார்திக்கொள்ள வந்திருந்தாள், அவளுடைய 5 வயது பையன் "சந்தோஷ்" பக்கத்திலிருந்து பார்த்துகொண்டிருந்தான். கோமதி எனக்கு காபி போட கிச்சனுக்கு போக அம்மா கூடவே செண்றாள்.
மாமா என்னிடம் "இப்போ குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டா, இல்லன்ன உன்கிட்ட "ஜானி வாக்கர்", "சிவாஸ் ரீகல்" வாங்கிட்டு வர சொல்லாம்னு இருந்தேன். ஆயிரந்தான் சொன்னாலும் இதையல்லாம் விட முடியுமா?, முன்ன அளவுக்கு smoke பண்றதில்லன்னாலும் யாருக்கும் தெரியாமா அப்பொப்பொ" என்று ஒளித்து வைத்திருக்கும் கோல்டு ப்ளாக் கிங்ஸ்யை காண்பித்தார். குழந்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். கோமதி காபியோடு வந்தாள், மாமவிடமிருந்து ரிமோட்டை பிடுங்கி ஏதோ சீரியலை போட்டாள். "நான் கட்டினது வேணா உங்கப்பாவா இருக்கலாம், ஆனா நான் லவ் பண்றது உன்னை தான், உனக்கு தான் குழந்தை பெத்து தருவேன்" என்று சவால் விட்டுக்கொண்டிருந்தாள். குழந்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
சீரியல் முடிந்ததும் ஏதோ சினிமா பாட்டு நிகழ்ச்சி வந்தது. எல்லோரும் ஏதோ பேச தொடங்கிவிட்டார்கள். ஆனால் திரையில் ஹிரோ ஹீரோயினை கண்ட இடத்தில் தொட்டும், உரசியும் காதலித்துக்கொண்டிருந்தான். அவளும் வசதியாக கொஞ்சமாக உடுத்தியிருந்தாள். குழந்தை பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ சினிமா trailer வந்தது. தடிதடியான் பலரும் திரயில் ஒரு சுள்ளான் நடிகரால் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தார்கள். குழந்தை பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று உள்ளே போய் பெரிய பொம்மை துப்பாக்கி எடுத்து வந்து எல்லோரையும் சுட்டான். நாங்கள் எல்லாம் சிரித்தோம்.
எனக்கு மட்டும் எதிர்காலம் நினைத்து பயமாக இருந்தது. ஏனென்றால் நான் பஸ்சில் வரும்போது பார்த்த பலரும் குழந்தையாக இருக்கும் போது சந்தோஷ் தினம் தினம் பார்க்கும் நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை, கொஞ்சம் கம்மியாக தான் பார்த்திருப்போம்.

4 Comments:
pb..
samaya ezhudhi iruka...i liked it very much,
-vv
By Anonymous, at 11:00 AM
Our parents would have thought the same thing when we were young. Thats why a lot of factors we feel differently from them.
The same is going to happen between us and our kids.
By Prabhu, at 9:24 PM
hmmmmmmm...eddhai madiri ellam padicchua ennakku tension aahhudhu muthukumar.Dakshika eppo vee orru range kku dhaan errukkaa..
By Viji Sundararajan, at 12:44 PM
மிகவும் சரியாக சொல்லி உள்ளீர்கள். இக்கால சீரியல்கள், சினிமாக்கள், நடைமுறை நிகழ்ச்சிகள் குழ ந்தைகளை பாதை மாறி அழைத்து செல்கின்றன, ஆனால், அனைவர் வீட்டிலும் யாரும் கவலை படுவதாகவே தெரியவில்லை. :(
By ACE !!, at 2:42 PM
Post a Comment
<< Home