People I know

Friday, June 09, 2006

கோமாளிகள் ஆட்சியில் நல்லவர்கள் ஏமாளிகள்

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கம்பர் இந்திரஜித் இறந்த போது இராவணனின் கையறு நிலை பற்றி கூறுவான். கம்பன் வார்த்தையை உண்மை என கொண்டு வாங்கிய கடனை அடைப்பவனை பைத்தியக்காரன் என்று தான் அழைக்க தோன்றுகிறது. சமீபத்தில் தி.மு.க. அரசு கூட்டுறவு வங்கி (co-operative banks) விவசாயிகள் வாங்கிய கடன்களை எல்லாம் ரத்து செய்துவிட்டது. கடன் வாங்கி அதை அடைக்க உயிரைவிட்டவன் பணம் போனது போனதுதான். கடனை அடைப்பதை பற்றி சிறிதும் சிந்திக்காதவனுக்கௌ கொண்டாட்டம். என்ன கொடுமை சரவணன் இது?
அதே போல மற்ற வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால் அரசின் சலுகை கிட்டவில்லை. மற்ற வங்கிகளில் வட்டி கம்மியாக இருக்கிறதே என்று அதிமேதாவிதனமாக கடன் வாங்கிய விவசாயி நொந்து நூடுல்ஸ் ஆக வேண்டியதுதான். ஆது போக இப்படி இஷ்டத்திக்கு சட்டம் போட்டால் வங்கியை எப்படி நடத்த முடியும்? கூட்டுறவு வங்கி என்னும் அற்புதமான திட்டம் கோமாளி அரசியல் வாதிகளால் தவிடு பொடி ஆக்கப்படுகிறது. தன்னம்பிக்கை இல்லாம வோட்டுக்கு அரசியல் நடத்துபவர்கள் தலைவர்கள் ஆனால் ஆட்சி நடப்பதில்லை காட்சி தான் நடக்கும். கண்ணகிக்கு சிலை திறப்பு விழா போண்ற கோமாளிக் காட்சிகளுக்கு இனி குறை ஒன்றும் இருக்காது. உண்மையில் கடன் ரத்து என்ற அபத்த வாக்குறுதியை இரண்டு கழகங்களுமே கொடுத்திருந்தன என்பது தான் வெட்கக்கேடு!

2 Comments:

  • ayooo..pb.. sollaadheenga.. idhu maari situationa naan neraiya dhadava paathiruken..

    right from schooll.. kashtamaana home worka correct mudichu kondu poven- aana teacher correctaa vendaamnnu solliduvaanga!!

    question paperkku choice vidaama answer holidaysla ezhuthindu poven..choice vittu ezhuthinaa porumnnu manasa maathikittu teacher pudhu rule solvaanga..

    correcta credit card billa vizhundu adichu kattuven - aana 5 days kazhichu jollya kattuvaan..avanaiyum freeya vidum andha company..

    yaarume prepare pannalanaalum kasthapattu seiven - aana anniku cancel pannuvaanga...

    ENNA KODUMAI SIR IDHU..

    nalla velai naan indiala illa ippo..
    irundhirundhaa, sureaa, co op bankla panam surea katti andha emaali nan dhaan nnu aayirukkum..

    By Blogger Maayaa, at 11:52 PM  

  • Madathanangal oda peak da idhellam.

    Nee solradhu right...next election kku votes collection, personal vendetta and convenience kku thagundha maari aatchi nadathuradhu. Indha mahamadathanatha paarthu sirikkiravan ellam kenayaa poidaraan ! Something that so blatantly defies logic is glorified...only in India !!

    By Blogger dinesh, at 4:16 PM  

Post a Comment

<< Home