People I know

Tuesday, January 31, 2006

ருத்ர பூமி

3 வருடங்கள் கழித்து அமெரிக்காவிலிருந்து மதுரைக்கு வந்தால் சும்மா வீட்டுக்குள் முடங்கியிருக்க பிடிக்கவில்லை. சரி மீனாஷியம்மன் கோயிலை சுற்றி வருவோம் என்று கிளம்பினேன். அம்மன் சன்னதியை ஒட்டி பொழுதுபோகமல் சுற்றிக் கொண்டிருந்தேன். அங்கே புதிதாக் மிகப்பெரிய கலை பொருட்கள் விற்கும் கடையை பார்த்தேன். உள்ளே வெள்ளைக்காரர்கள் சிலர் நுழைவதை கண்டேன். நம்மவர்கள் Businessல் அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்க்கலாம் என்று நானும் கடைக்குள் நுழைய முயன்றேன். அந்த watchman வெள்ளையர்களுக்கு salute அடித்து உள்ளே விட்டுக்கொண்டிருந்தான். ஆனால் என்னை தடுத்து நிறுத்தி "எங்க போற?" என்றான். நான் சிரித்திக் கொண்டே "ஏன் உள்ளதான். போககூடாதா?" என்றேன். Watchman துச்சமாக பார்த்திக்கொண்டே வழிவிட்டான். கடை மிகப்பெரிதாக இருந்தது. அற்புதமான வெங்கல சிலைகள், ஓவியங்கள், வேலைப்பாடுகள் நிறைந்த விரிப்புகள் என பல மாடிகளில் இருந்தது. ஒவ்வொன்றின் விலையும் ஆயிரக்கண்்க்கில் இருக்கும் போல. ஏதோ சேட்ஜியின் கடை. அந்த watchmanஇன் நடவடிக்கைக்கு அர்த்தம் இப்பொழுது புரிந்தது. நான் பேக்கு மாதிரி முழிப்பதை பார்த்து சேட்ஜி அருகில் வந்து "க்யா சாஹியே?" என்று இந்தியில் கேட்டு எரிச்சல் படுத்தினான். நான் இந்தியிலேயே "மீனாஷி சுந்தரேஸ்வரர் கா அச்சா photo டூண்ட் ராஹா ஹும்" என்றேன். அற்பமாக பார்த்து விட்டு "இதர் நஹி மிலேகா" என்றான். எல்லாம் பணத்திமிர் என்று நினைத்திக் கொண்டே அந்த watchman ஐப் பார்பதை தவிர்த்துக் கொண்டே வெளியில் வந்தேன்.

வீரனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று எண்ணும் வேளையில் மதுரை வீரன் சன்னிதி வந்தது, சரி வீரனுக்கு மாலை வாங்கிப் போடலாமென்று பூக்கடையில் "மல்லிப்பூ மாலை எவ்ளோணே?" என்றேன். கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் அந்த அட்டு மாலைக்கு 20 ருபா விலை சொன்னான். "வாங்குற விலைய சொல்லுங்க தோண்ற விலையெல்லாம் சொல்லாதிங்க" என்றேன். "சாமிக்கு போடுற மாலைக்கெல்லாம் நாங்க பொய் சொல்ல மாட்டோம், ஒரே விலை தான் நம்ம கடைல, நீங்க எங்க வேணாலும் விசாரிச்சுக்கங்க" என்று பொய் சொன்னான். "ஒரே விலைனா வாங்குற ஆளு எப்டி திருப்தியா வாங்குவியான், ஒரு மாலை வாங்க நாங்க என்ன CBI விசாரணையா நடத்த முடியும். கட்ற விலைல குடுங்க" என்றேன். 3 மாலை 35 க்கு படிந்தது. பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு அமரர் ஊர்தி அவ்வழியே சென்றது. என்னடா இது வித்தியாசமாக அமரர் ஊர்தி கோயில் முன்னாடி போகுதே என்று நினைத்தபடியே கோயிலுக்கு உள்ளே போனேன்.

சரி மீண்டும் எங்காவது நுழைந்து ஏதாவது அலும்பு பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டே நடந்தேன். தெற்கு கோபுர வாயிலருகே அந்த அமரர் ஊர்தி நின்றுக் கொண்டிருந்தது. கோபுரத்தை ஒட்டிய platformல் ஒரு பிச்சைக்கார கிழவியின் பிணம் கிடந்தது. பிண்த்தின் தலையை சுற்றி கயிறு கட்டி நிறுத்தியிருந்தார்கள். அருகே சில ஊதுவத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். அவளுடைய பிச்சை பாத்திரத்திலேயே அவளுடைய தகனத்திற்கு பணம் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று தள்ளி சில ஆண் மற்றும் பெண் போலீஸ்காரர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள். "இன்னும் கொஞ்சம் சேந்ததும் கொண்டு போயிரலாம்" என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் அருகில் சென்று கிழவியை பார்த்தேன். எனது pocketல் இருந்து ஒரு 5 ரூபாய் நாணயம் எடுத்து மற்றவர்களை போல அந்த பாத்திரத்தில் எறிந்தேன். ஆனால் அது பாத்திரத்தில் விழாமல் பிணத்தின் அருகில் சென்று விழுந்தது. அதை திரும்பி எடுத்து போட மனம் வரவில்லை. எனக்கு என்னை நினைத்து வெக்கமாக இருந்தது. சரியாக அங்கே புத்தி வேலை செய்யவில்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவள் பிச்சை பாத்திரத்தில் ஒரளவு பணம் சேர்ந்தே இருந்தது. அவள் உயிருடன் இருந்த போது ஒரு நாளும் இவ்வள்வு குறைந்த நேரத்தில் அவள் பாத்திரம் நிறைந்திருக்காது என்று நினைத்தேன். காரணமறியா குற்ற உணர்வுடன் நடந்தேன்.

யாரிந்த பாட்டி? இவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்வில் ஒரு ஆறுதலை கூட சம்பாதிக்கவில்லையா? ஒரு மனிதரின் அன்பை கூட பெற முடியவில்லையா? ஒரு காலத்தில் சம்சாரியாக வாழ்ந்து நொடித்திருப்பாளோ? இவளை போல நானும் அனாதையாக இறக்க சாத்திய கூறு உண்டா? நான் மற்ற மனிதர்களின் அன்பை பெற ஏதேனும் செய்கிறேனா? இப்படி யார் வேண்டுமானாலும் தெருவில் விலாசமில்லாமல் இறந்து போய்விடலாமே..இயோ ஈஸ்வரா மக்களை வாழும் பொழுது நீர் எவ்வள்வு சோதித்தாலும், தயவு செய்து எல்லோருக்கும் சாகும் பொழுது நல்ல சாவு குடுமையா? பயம் லேசாக கவ்வுகிறது. கோயிலிருந்து பாடல் கிளம்புகிறது

"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயன் திருநீறே"

ஆனால் எனக்கு அன்று என்னமோ சிவன் சுடுகாட்டில் பித்து கொண்டு பிணங்களின் மீது ஆடும் சடையனாகவே
காட்சி அளித்தான். கோயிலுக்குள் சென்று அவனை வழிபட மனமில்லாமல் போனது. "சிவ சிவ" என்று ஜபித்துக்கொண்டே வீட்டிற்க்கு திரும்பினேன்.

10 Comments:

  • கோயில சுத்தி இவ்வளவு சமாச்சாரம் நடந்திருந்தும் இதெல்லாம் புதுசா தெரியல எனக்கு. எதுவும் change ஆகல.ஆனா நீ குடும்பம் ஒரு கதம்பம் விசு rangeகு ரவுஸ கொடுத்திருக்க :)

    இந்த post ரொம்பவும் எதார்த்தமாக இருந்தது.

    Vasu

    By Anonymous Anonymous, at 8:17 PM  

  • good writeup-da pb.

    vasu,
    fortunately the character was a dead body and a coupla police. imagine what wud have happened had that be a mentally challenged and a coupla mental asylum keepers -- paithiyaththukku vaithiyam paakkura paithiyakaara vaithiyanukku paithiyam pudichcha.... range-la oru post vandhirukkum; thappichchOm :)

    By Anonymous Anonymous, at 11:05 PM  

  • pb.. un writing style samaya iruku,
    enjoyed this one.
    -vv

    By Anonymous Anonymous, at 10:17 AM  

  • PB,
    enakku indha post romba pidichinrundhadhu..! Continue with ur India suthals..:)

    By Blogger The Doodler, at 3:07 PM  

  • pb ennadhu idhu.. oru nalla post pottu naalu comment vaangi iruka...
    adhula naane rendu comment.

    -vv

    By Anonymous Anonymous, at 10:42 PM  

  • Probably ppl did not read it..intha blog oda readership romba kuranju pochu after I started writting in tamil. Enna panna :(.

    By Blogger P B, at 9:46 AM  

  • Nalla post.

    Nee nenaichadhu right. Mathavanga anbai pera naama edhuvume seyyeradhille ? Apparam eppdi kekkaama ivlo nadakkaradhu ? Kadavul kripai nu dhaan enakku thonaradhu. Andha kizhavi oda saavu maadhiri namakkum nadakkalaam. Naama onnum better souls kedayaadhu to deserve better nu purinjaa podhum. Respect and humility develop panna andha knowledge romba important !

    Hey ram la solra maadhiri "onaaya irundhu paartha dhaan andha nyaayam puriyum"

    By Blogger dinesh, at 11:41 AM  

  • PB,
    nalla blog!! ne solla varadhu, konjam villangama irundhudhu. andha watchman kum setji kum ....

    naan ondi dhan appadi nenachena?

    By Blogger sb, at 6:29 PM  

  • super blog..entha yatharnthagal than vazhkaila nammakku neraya solli tharthu. enga padichennu theriyala..possibly in one of my blog hunts..
    a man learns more truth in a day of 24 hours than a life of philospohical contemplations!!!.
    nadakartha pathi nenaikum pothu than nadaportha pathi bayam varumm..

    By Blogger Vanjula, at 9:26 PM  

  • awesome post pb

    By Blogger Maayaa, at 10:22 PM  

Post a Comment

<< Home